அமைச்சர்களின் ஊழல்களை மூடிமறைக்க படைவீரர்களது அர்ப்பணிப்பு பயன்படுத்தப்படுகிறது: எஸ்.பி. திசாநாயக்க

அமைச்சர்களின் ஊழல் மோசடிகளை மூடிமறைக்கும் சிறந்த கவசமாக படைவீரர்களின் உயிர்த் தியாகமும், அர்ப்பணிப்பும் பயன்படுத்தப்பட்டு வருவதாக மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தல்களின் போதும் படைவீரர்களது யுத்த வெற்றியை விற்று தேர்தல் இலாபங்களை ஈட்ட அரசாங்கம் முனையும் என்பதில் துளியும்
சந்தேகமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்திசாதூரியமான மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்தின் காரணமாக நாடு பாரிய பொருளாதார பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் இதன்
வெளிப்படையான விளைவுகளை காண நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sour ce & thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.