ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர சிலர் முயற்சி

மக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தளபதி உள்ளிட்டோருக்கும் எதிராக சர்வதேச நீதிமன்றில் யுத்தக் குற்றச்சாட்டு வழக்கு
தொடர சில உள்நாட்டு சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானக மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தத்தை நிறுத்தி அதன் மூலம் குறுகிய அரசியல் இலாபத்தை ஈட்டிக்கொள்ள சில சக்திகள் முயன்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக யுத்தக் குற்றச்சாட்டு சுமத்த சிலர் தீவிரமாக தகவல் திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் மக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பூரண தெளிவு காணப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்களின் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் கண்மூடித்தனமான செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டு வருவதாகவும், இதனால் நாடு பாரிய அழிவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி மஹிந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் கட்சி அமைப்பாளர்களைச் சந்தித்து நடத்திய கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.