யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஈ.பி.டி.பி முகாம்களை உடனடியாக மூட வேண்டுமென ஆனந்தசங்கரி கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஈ.பி.டி.பி.யின் முகாம்களை உடனடியாக மூடிவிட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த முகாம்களின் மூலம் அப்பாவி பொதுமக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். மாவட்டத்திலுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களுககு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் ஈபிடிபி அமைப்பின் 22 முகாம்கள் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் அவற்றினை உடனடியாக அகற்றுவதன் அவசியம் பற்றி; தான் ஜனாதிபதியை வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வன்னியில் தற்போது சிக்கியிருக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை தொடர்பான சரியான புள்ளி விபரங்களை வெளியிடுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், அரசாங்கத்தினால் வெளியிடப்படும் புள்ளி விபரங்களில் முரண்பாடு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.