திருகோணமலை உப்புவெளியில் யாழ். மாணவர் தடுத்துவைப்புதிருகோணமலை உப்புவெளியில் யாழ். மாணவர் தடுத்துவைப்பு

திருகோணமலையில் தங்கியிருந்த 17 வயதான யாழ்ப்பாண மாணவர் ஒருவர் முதலில் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் உப்புவெளி பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியைச் சேர்ந்த மகேந்திரராஜா பிரசாத் என்பவரே தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவராவார்.

கொழும்புக்கு சென்று அலுவல்களை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் திரும்பிச் செல்லும் வழியிலேயே அவர் திருகோணமலையில் தங்கியிருந்தார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.