பொதுமக்கள் மீது எறிகணை வீச்சு நடத்தப்படமாட்டாது என்ற உறுதிமொழியை இலங்கை மீறியுள்ளது: அமெரிக்கா

இலங்கை அரசாங்கம், தமது படையினர் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வலயங்களை நோக்கி எறிகணை வீச்சுகளை நடத்தமாட்டார்கள் என ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய உறுதிமொழியை தகர்த்தெறிந்துள்ளதாக ஐக்கிய அமெரிக்கா, குற்றம் சுமத்தியுள்ளது


அத்துடன் இலங்கை அரசாங்கம, பாதுகாப்பு வலயங்களில் கனரக ஆயுதங்களை பிரயோகிக்க கூடாது என்ற வலியுறுத்தலையும் நிராகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை, உத்தியோகபூர்வமற்ற ரீதியாக கூடிய போது, இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின், மனிதாபிமான அதிகாரிகளின் தகவல்களின்படி, வன்னியில் சிக்குண்டுள்ள சுமார் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் மக்களில் நாள்தோறும் பெருமளவான மக்கள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tanilwin

Leave a Reply

Your email address will not be published.