டென்மார்க் தலைநகரில் கவனயீர்ப்பு போராட்டம்

டென்மார்க் தலைநகரில் அமைந்துள்ள ஐக்கியநாடுகள் சபை முன்றலில் டென்மார்க் வாழ் ஈழத்தமிழர்களால் நேற்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு நடைபெற்றது.

இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர். கலந்து கொண்ட மக்கள்

எமது மக்களை காப்பாற்று

எமக்கு வேண்டும் தமிழீழம்

எமது தலைவர் பிரபாகரன்

எனும் கொட்டொலிகளை எழுப்பினர்.

கவனயீர்ப்பில் கலந்து கொண்டவர்களால் மனு ஒன்றும் ஐக்கிய நாடுகள் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

Source & thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.