சுவிஸ் சூரிச்சில் நாளை மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்

தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் இனப்படுகொலையை உடனயாக தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து சுவிற்சர்லாந்து சூரிச் நகரில் நாளை (சனிக்கிழமை) மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது.


சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த மனித சங்கிலிப் போராட்டம் சூரிந் பிரதான தொடரூந்து நிலையத்தில் இருந்து சூரிச்சின்
பல முன்னணி வீதிகளில் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பிக்கவுள்ள இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் சுவிஸ்வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

சுவிர்சர்லாந்தில் சூரிந் நகரம் அதிக வெளிநாட்டவர்களும் கூடும் இடம் என்பதால், தமிழ் மக்கள் மனித சங்கிலியாக இணைந்து தமது விடுதலை வேட்கையை வெளியுலக அரசுகளுக்கு மட்டுமன்றி, மக்களிற்கும் உணர்த்த முடியும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

வன்னியில் நாளாந்தம் தமிழ் மக்கள் சிறீலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டுவரும் நிலையில், தமிழ் மக்கள் மீதான அரசின் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துரைக்க புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அணிதிரண்டு வருகின்றனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.