‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (27.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள 1.9பில்லியன் டொலர்கள் உண்மையாகவே சரியான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாச் அமைப்புத் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டங்களுக்கு முரணான அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இன ரீதியாகத் தமிழர்களாக இருப்பதும் இச்சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அது தெரிவித்துள்ளது.

கடந்த காலத்தில் அரசாங்கம் இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பாகக் கையாண்ட வழிமுறைகளும் இதனை அதிகப்படுத்துகிறது எனவும் அது தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திற்கு ஹியூமன் ரைட்ஸ் வாச் அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை விவகாரம் தொடர்பில் இன்று பிற்பகல் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
இந்த கலந்துரையாடலை இன்று பிற்பகல் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு வெளியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த கலந்துரையாடலின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான துறை பிரதி செயலர் ஜோன் ஹோம்ஸ், இலங்கையின் மனிதாபிமான நிலவரங்கள் தொடர்பிலான அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பிக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார

.

அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அப்பாவிச் சிவிலியன்களது நிலமை குறித்து ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக இலங்கை விவகாரம் குறித்தான விவாதங்களை ஆரம்பிக்க முனைப்பு காட்டப்பட்ட போதிலும், விவாதங்கள் நடைபெறவில்லை.

முதல் தடவையாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை ஆரம்ப கட்ட விவாதமாக இலங்கை நிலவரம் குறித்து உறுப்பு நாடுகள் வாதிடவுள்ளன.

இந்த விவகாரத்தில் இலங்கை இராஜதந்திரிகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஒஸ்ட்ரியா மற்றும் ஏனைய உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்பான விவாதத்திற்கு ஆதரவளித்து வரும் அதேவேளை, சீனாவும், ரஸ்யாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

!!!!!!!!!!!!!!!!!!!!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அன்னமலைப் பகுதியில் அமைந்திருக்கும் சிறிலங்கா சுதந்திரககட்சியின் அலுவலகத்தின் மீது நேற்று வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில்முரளிதரன் குழுவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை இரவு 8:30 மணியளவிலேயே அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்று இப்பகுதிக்கு வந்து குறிப்பிட்ட கட்சியின் அலுவலகத்துக்குள் புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது .

சம்பவத்தின்போது MAjjhhup முரளிதரன் குழுவைச் சேர்ந்த இருவரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர் . இருவரது உடலங்களும் கல்முனை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக சவளக்கடை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும் யாரும் கைது செய்யப்படவில்லை .
துணை இராணுவக் குழுவின் தலைவரானMAjjhhup முரளிதரன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இணைந்து கொண்டு அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டதையடுத்து தனது அலுவலகங்கள் அனைத்தையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகங்களாக மாற்றியமைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நேற்று இரவு இனம்தெரியாத ஆயுததாரிகளால் உரும்பிராய் பகுதியில் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு 8.00 மணியளவில் உரும்பிராய் மருதனார்மடத்திற்க்கும் இடைப்பட்ட விதியில் இந்தக் குண்டு வீச்சு இடம் பெற்றுள்ளது .மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்த வேளையில் பாரிய சத்தத்துடன் இரண்டு கைக்குண்டுகள் வெடித்ததைத் தொடர்ந்து பரவலாக துப்பாக்கிப் பிரயோகமும் இடம் பெற்றது.

இதனால் அந்தப் பகுதியில் பற்றமான நிலமை காணப்பட்டதுடன் பெருமளவில் இராணுவத்தினர் இந்தப் பகுதிக்கு விரைந்து வீதியூடான போக்குவரத்தை கட்டுப்படுத்தியதுடன் சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.இந்தக் கைக்குண்டு வீச்சு சம்பவத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரம் எதுவும் தெரியவரவில்லை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வடக்கு நிலவரம் குறித்து தெளிவுபடுத்தும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்து கொண்ட சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

யாழ்க் குடாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் .பி.டி.பியினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் அடக்குமுறை தொடர்பில் ஆனந்தசங்கரி ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் போது அமைச்சர் தேவானந்தா குறுக்கீடு செய்த காரணத்தினால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.

ஆனந்தசங்கரி, நீ வாயை மூடிக்கொள், நான் ஜனாதிபதியிடமே பேசுகிறேன் என டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கருணா டக்ளஸ் தேவானந்தாவை சமாதானப் படுத்தியதாக குறிப்பிடப்படுகிறது.

வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தங்காலையில் தங்கியிருந்த 5 தமிழ் இளைஞர்கள் கைது
சிறீலங்காவின் தொன்பகுதி தங்காலையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த தமிழ் இளைஞர்கள் ஐவர் சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர
தங்காலை வலஸ்முல்ல என்னும் இடத்தில் சிஙகளவர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தபோது ஊரவர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை காவல்துறையினர் அந்த வீட்டை சுற்றிவளைத்து இவர்களை கைது செய்துள்ளனர்.
சிங்களவர் ஒருவர் வீட்டில் இவர்கள் தங்கியிருந்ததாகவும், காவல்துறையினர் அங்கு சென்றபோது அங்கிருந்த தப்பியோடிவிட்டதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர், வீட்டு உரிமையாளரான சிங்களவரையும் வீடு கொடுத்த குற்றத்துக்காக கைது செய்துள்ளனர்.
குறிப்பிட்ட இளைஞர்கள் அனைரும் மலையகத்தினை சேர்ந்தவர்கள் என்றும், கட்டட ஒப்பந்த வேலை ஒன்றில் பணிபுரிய தங்காலை சென்று தங்கியிருந்ததாகவும் உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் அரசாங்கத்தின் தற்போதைய நிகழ்ச்சிநிரலில் எந்த மாற்றமும் ஏற்படாது . இரõணுவ மற்றும் மனிதாபிமான நடவடிக்கை தொடரும் என்று வெளியுறவு செயலாளர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில் அரசாங்கம் தற்போதைய நிலையில் மேற்கொண்டுவரும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது. இராணுவ நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அத்துடன் மனிதõபிமான நடவடிக்கைகளும் தொடரும். வன்னி பகுதியிலிருந்து பொது மக்களை மீட்கும் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்த நிகழ்ச்சி நிரல் எந்தக்காரணத்தைக்கொண்டும் மாற்றப்படமாட்டாது.

அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் குறைகூறப்படுகின்றது என்று கூற முடியாது. ஐக்கிய நாடுகள் சபையும் அண்மையில் அரசாங்கம் அகதி மக்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. அகதி மக்களுக்கு அரசாங்கம் செய்துகொடுத்துள்ள வசதிகள் குறைவு என்று எந்த அமைப்பும் இதுவரை கூறவில்லை.

கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வடக்கு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்துவருகின்றோம். இந்நடவடிக்கை எதிர்காலத்திலும் தொடரும். எம்மால் முடிந்தவரை சர்வதேசத்துக்கு நிலைமைகளை விளக்குவோம்.

சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை அரசாங்கத்தின் பிரசார நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன. அண்மையில் அமெரிக்காவில் புலம் பெயர் தமிழர்கள் 2000 ஆயிரம் பேர் (அரச ஊழியர்கள்) விடுமுறையில் இருந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் .
ஆனால் இங்கு வெளிவிவகார அமைச்சின் சில அதிகாரிகளே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்
. ஒப்பீட்டளவில் எமது பக்க செயற்பாடு குறைவானதாகும். இருந்தாலும் நாங்கள் வெற்றிபெற்றுவந்துள்ளோம் என்றார்
. அமைச்சர் மஹிந்த சமரசிங்க இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க வெளிவிவகார செயலாளரின் பேச்சை கேட்டுவிட்டு நாளையிலிருந்து அரச ஊழியர்கள் அனைவரும் விடுமுறையில் பிரசாரம் செய்ய வந்துவிடுவார்களோ தெரியவில்லை என்று கூறினார்.
அத்துடன் நாட்டை நேசிக்கின்ற அரச ஊழியர்கள் அதிகளவில் உள்ளனர் என்றும் அவர்களின் சேவைகளும் அரசாங்கத்துக்கு தேவையாகவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்
!!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாணத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 1200 முறைப்பாடுகளைப் பதிவு செய்திருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் காணாமல் போன 130 பேர் தொடர்பிலும், பலியான 38 பேர் தொடர்பிலும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அது தெரிவித்துள்ளது.
இதேவேளை, சித்திரவதைகள் தொடர்பாக 200 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் காணிப்பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையுடன் பகிரங்க பேச்சுவார்த்தையொன்றை நடாத்தத் தயார் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் குறித்த விவகாரங்கள் குறித்து ஆக்கபூர்வமானதும், பகிரங்கரமானதுமான பேச்சுவார்த்தையொன்றை நடாத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றங்களை புரிவதாக நவனீதம்பிள்ளை கடந்த 13ம் திகதி வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிவிலியன் இழப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!
நோர்வே அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் பாரிய துரோகத்தை தொடர்ந்தும் இழைத்து வருகிறது. எனவே, நோர்வே அரசாங்கத்துடனான இராஜதந்திர உறவுகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக ரத்துச் செய்வதுடன் இலங்கையில் நோர்வேயின் செயற்பாடுகளை தடை செய்ய வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

.நா. சபையினர் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வரும் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளரான கே.பி. எனப்படும் குமார் பத்மநாதனுடன் தொலைபேசியில் உரையாடியமை இலங்கைக்கு எதிரான செயற்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு பத்தமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

நோர்வே அரசாங்கம் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளரான குமார் பத்மநாதனை .நா.வின் விஷேட பிரதிநிதியான ஜோன் ஹோம்ஸ் உடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள உதவி செய்துள்ளது. இச் செயலானது இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செய்யப்பட்ட துரோக செயலாகும். .நா.விற்கும் புலிகளின் சர்வதேச குற்றவாளியான கே.பி. எனப்படும் குமார் பத்மநாதனுடனான தொடர்பையும், அத்தொலைபேசி உரையாடல் தொடர்பாகவும் .நா. இலங்கை அரசாங்கத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் .

இலங்கை மீதான சர்வதேசத்தின் தவறான கருத்துக்களுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது . தற்போது யுத்தத்தை கொண்டுச் செல்பவர்கள் புலிகளே. புலி இயக்கத்தினர் உடனடியாக ஆயுதங்களை கீழே வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து விட்டால் நாளையே இலங்கையில் யுத்தம் முடிவிற்கு வந்துவிடும்.

தமிழ் கூட்டமைப்பின் புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு பொதுமக்களை காரணம் காட்டி போர் நிறுத்தத்தை வலியுறுத்திகின்றமை நாட்டின் மூலச் சட்டத்திற்கே எதிரான செயல்பாடாகும். தமிழ் கூட்டமைப்பினரின் அரசியல் வாழ்க்கை புலிகளின் தோல்வியோடு முடிவடைந்து விடும். அடுத்த பொதுத் தேர்தலின் பின் பாராளுமன்றத்திற்கு தமிழ் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரவேசிப்பது சந்தேகமே.

கிழக்கு மாகாணத்தில் 100% வீதமான ஜனநாயகம் இன்னும் ஏற்படவில்லை. இதற்கு பிரதான காரணம் கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான முறுகலும் அவர்களது உறுப்பினர்கள் சிலர் இன்னும் புலி இயக்கத்தினருடன் தொடர்பு வைத்துள்ளமையே ஆகும்.

அரசாங்கம் கிழக்கு அமைதியின்மையை பேண இரு குழுக்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைத்து முழு ஆயுதக் கலைப்பை மேற்கொண்டால் மாத்திரமே கிழக்கில் நிரந்தர ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, அந்நாட்டின் பிரதமர் அபிசிட் வெஜ்ஜஜிவாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக தொடர்புகளை விரிவாக்குவது குறித்தும் ஆராயப்பட்டது. அத்துடன், இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளதாகவும் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் தாய்லாந்தில் இருந்து செயற்படுகிறார்களா என்பது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் போகொல்லாகம கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் தாய்லாந்தின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
அதேவேளை, டென்மார்க் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரிக் மொல்லருடன் நேற்று முன்தினம் புதன்கிழமை தொலைபேசியில் உரையாடிய அமைச்சர் போகொல்லாகம, இலங்கையில் இடம்பெறுகின்ற மனிதாபிமான நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்
. இலங்கை படையினர் எந்தக் காரணத்தைக் கொண்டும் பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்றும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தாததன் காரணமாக பல இழப்புக்களை சந்தித்து வருவதாகவும் அமைச்சர் போகொல்லாகம டென்மார்க் வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் தற்கொலைப் போராளிகள் அங்கம் வகிப்பதாகவும் , அவர்கள் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு அமைய செயற்படுவதாகவும்
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவான பிள்ளையான் குழு உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் தற்கொலைப் போராளிப் பிரிவொன்றை உருவாக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி வர்ஷா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமைக் காரியாலத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கூலிப்படையாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!
அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்போருக்கே வடக்கும் கிழக்கும் வேறுவேறு மாகாணங்களாகத் தென்படுகின்றது என்று தெரிவித்த தமிழ்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா, கருணாவைகௌரவஎன்று அழைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சில கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
பாராளுமன்றத்தில் பேசும் சில தமிழ் உறுப்பினர்கள்ஜனாதிபதிஎன்ற சொல்லை மந்திரம் போல் பயபக்தியுடன் பல தடவைகள் உச்சரிக்கின்றனர்.
இதேபோல்தான் பிரேமதாஸ ஆட்சிக்காலத்திலும் உச்சரித்தவர்கள் இரவோடிரவாக அவருக்கு எதிரான எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டனர். எனவே, இவ்வாறு பணிந்து பவ்யமாக நடப்பவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அரசியல் கும்பலை தனது கட்சியில் இணைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட்ட அரசு இன்று கிழக்கில் பொம்மை ஆட்சியொன்றை நடத்துகின்றது .
பிள்ளையான் நிர்வாகத்தில் கிழக்கில் அராஜகம் நடக்கிறது. கிழக்கு மாகாண சபை சட்டவிரோதமானது அங்கு நடப்பது சட்டவிரோதமான ஆட்சி.
திருகோணமலையில் பிள்ளையான் குழுவினரால் கடத்தப்பட்டு சித்திரவதைக் குட்படுத்தப்பட்டு வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக ஆறுவயது மாணவி கொல்லப்பட்டுள்ளார்.
இந்தப்படுகொலையுடன் சம்பந்தப்பட்ட இருவரும் பிள்ளையான் குழுவின் உறுப்பினர்கள். ஒருவர் திருகோணமலைத் தலைவர். இவர்களில் ஒருவர் தப்பியோடியபோது சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றயவர் சயனைட் அருந்தி உயிரிழந்தார்.
இவர்களின் மரணங்களை திருகோணமலை மக்கள் பட்டாசுகொளுத்தி கொண்டாடினார்கள். புதைக்கப்பட்ட ஒருவரின் சடலத்தை தோண்டியெடுத்தவர்கள் அவரின் தலையை துண்டித்தனர். இதுதான் கிழக்கு மாகாணத்தின் நிலைமை.
தம்பலகமத்தில் குழுவொன்று வீடு வீடாகச் சென்று மரங்களை வெட்டி விற்று பணம் சம்பாதிக்கின்றனர். மட்டக்களப்பில் 2,000 தமிழரிடம் அடையாளஅட்டைகளை பலவந்தமாகப் பறித்தவர்கள் அவர்களை பலவந்தமாக வாகனங்களில் திணித்து ஜனாதிபதிமாளிகைக்கு அழைத்து வந்து அரசியல் சித்து விளையாட்டுக் காட்டினார்கள்.
கிழக்கில் கருணா, பிள்ளையான் குழுக்களின் இரும்புச் சப்பாத்துகளின் கீழ் தமிழ் பேசும் மக்கள் நசுக்கப்படுகின்றனர்.
கருணாவும் பிள்ளையானும் பிரிந்து நிற்கிறார்கள். இவர்களை பிரித்து வைத்திருப்பவர்கள் யார் ? அதனை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்போரே வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்கள் என்கின்றனர். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினராகிய நாம் ஒரே கட்சியின் கீழ் வடக்கிலும் கிழக்கிலும் ஒரு ஆசனத்தை தவிர ஏனைய அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றித்தான் இங்கு வந்தோம். எதிர்காலத்திலும் இது தொடரும். நாம் எமது வரலாற்றுக் கடமையை செய்தே தீருவோம்.
கருணா சேரவேண்டிய இடத்தில்தான் சேர்ந்துள்ளார். அதனை நான் வரவேற்கின்றேன். தன்னால் இனி தமிழ்மக்கள் ஆதரவுடன் இயங்க முடியாது என்பதையும் விடுதலைப்புலிகளின் பெயரின்றி தன்னால் செயற்பட முடியாதென்பதையும் உணர்ந்ததாலேயே அவர் சேரவேண்டிய இடத்தில் போய் சேர்ந்துள்ளார். ஆனால், அவரை ?கௌரவ? என்று அழைக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டது.
திருகோணமலையில் பல இடங்களிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்றுவதன் மூலம் பிள்ளையான் ஒரு அரசியல் நாடகம் நடத்தப்பார்க்கிறார். தமிழருக்கு சார்பாகத்தான் நடப்பதாக ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார். இதனை எவரும் நம்பிவிடக்கூடாது. சிங்களவரை வெளியேற்றுவதென்பது தமிழரை ஏமாற்றும் திட்டத்தின் ஒரு அங்கம்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தமிழர்கள் தம்மைத்தாமே ஆளும் தீர்வொன்றே இறுதித்தீர்வாகும். அந்த தீர்வு கிடைக்காத வரை இந்த நாட்டின் பிரச்சினையை எவராலும் தீர்க்க முடியாது . எனவே, இந்த நாட்டின் பிரச்சினையை தீர்க்க முதலில் ஜே.வி.பி.தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சிறீலங்காவில் இயங்கிய அரச, மற்றும் அரச சார்பற்ற 1,301 தொண்டு நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் மட்டுமே தற்போது இயங்க சிறீலங்கா அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சிறீலங்காவின் சமூக சேவைகள் பிரதி அமைச்சர் லயனல் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
இந்த 14 தொண்டு நிறுவனங்கள் மாத்திரமே வன்னியில் இருந்து வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் , திருகோணமலை, மன்னார் ஆகிய இடங்களில் தற்போது இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கு தேவவையானவற்றினை பூர்த்தி செய்ய சிறீலங்கா அரசு அனுமதி வழங்கியுள்ளத
சிறீலங்கா அரசின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க மறுத்த ஒரு சில தொண்டு நிறுவனங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப் பட்டதுடன், ஏனைய சில தொண்டு நிறுவனங்கள் அரசின் அடக்குமுறையால் தாமாகவே வெளியேறியிருந்தன.
சிறீலங்கா அரசிற்கு சொந்தமான ஏனைய பல தொண்டு நிறுவனங்கள் அதாவது உள்நாட்டு தொண்டு நிறுவனங்கள் பல நிதி இன்மையால் மூடப்பட்டுள்ளன.
வன்னியில் பணியாற்றி தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு பணியாற்ற விடாது கடந்த செப்ரெம்பர் மாத நடுப்பகுதியில் சிறீலங்கா அரசினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை நினைவூட்டத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் இனப்படுகொலையை உடனயாக தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து சுவிற்சர்லாந்து சூரிச் நகரில் நாளை (சனிக்கிழமை ) மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது.
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த மனித சங்கிலிப் போராட்டம் சூரிந் பிரதான தொடரூந்து நிலையத்தில் இருந்து சூரிச்சின் முன்னி பல வீதிகளில் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.
பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பிக்கவுள்ள இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் சுவிஸ்வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
சுவிர்சர்லாந்தில் சூரிந் நகரம் அதிக வெளிநாட்டவர்களும் கூடும் இடம் என்பதால், தமிழ் மக்கள் மனித சங்கிலியாக இணைந்து தமது விடுதலை வேட்கையை வெளியுலக அரசுகளுக்கு மட்டுமன்றி, மக்களிற்கும் உணர்த்த முடியும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரிட்டிஷ் மகாராணியின் உயர்கௌரவ விருதினைப் பெற்றுக்கொள்வதற்கு கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதுவராலயத்தில் கடமையாற்றிய இருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் தூதுவராலயத்திற்காக சிறந்த சேவையாற்றிய பிரான்சிஸ் ஞானப்பிரகாசம், மஹேந்திர ரணவீர ஆகிய இருவரே இந்த உயர் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டவர்களாவர்.
பிரான்சிஸ் ஞானப்பிரகாசம் , கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பிரிட்டிஷ் தூதுவராலயத்தில் பாதுகாப்புப் பிரிவில் சேவையாற்றியுள்ளார்.
அதேவேளை, மஹேந்திர ரணவீர, கடல்கோள் ஏற்பட்ட காலப்பகுதியில் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஆலோசனை உதவி வழங்கியவராவார்.
இதேவேளை, 1958 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வசித்து வரும் பிரிட்டிஷ்காரரான கிறிஸ்தோபர் வோர்திங்டனுக்கும் இவ்விருது வழங்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை‌த் தமிழர்களுக்கு 40 ஆயிரம் சிப்பம் உதவிப் பொருள்களை அனுப்ப த‌மிழக அரசு முடிவு செய்துள்ளது. இவை அனைத்தும் ஏப்ர‌ல் 15ஆ‌ம் தேதிக்கு முன்னர் அனுப்பப்படவுள்ளன .

இது தொடர்பாக த‌மிழக அரசு நேற்‌றிரவு வெளியி‌ட்ட செய்தியில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்புவது குறித்து பல்வேறு அரசுத் துறைகளின் செயலர்கள், தலைமைச் செயலகத்தில் விவாதம் செய்தார்கள்.

இதில், புழுங்கல் அரிசி (15 கிலோ), துவரம் பருப்பு (2 கிலோ), சர்க்கரை 1 கிலோ, தேயிலை -100 கிராம், பற்பசை– 100 கிராம், குளியல் சோப்பு– 100 கிராம், சலவை சோப்பு – 250 கிராம், சாதம் வடிக்கும் பாத்திரம் (மூடியுடன்) -1, சாப்பாடு தட்டு, டம்ளர், கரண்டி ஆகியவை தலா 2, வேட்டி, புடவை, லுங்கி, நைட்டி ஆகியவை தலா 1, போர்வைகள்-2 மற்றும் டவல்-2 ஆகியவை தரப்படவுள்ளன. இவ்வாறு 40 ஆயிரம் சிப்பங்கள் அனுப்பப்படவுள்ளன.

மேற்கண்ட நிவாரணப் பொருட்களை, பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு 15.4.2009-க்கு முன்னர் அனுப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார் எ‌ன்று அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது
!!!!!!!!!!!!!!!!!
இலங்கைக்கு இ‌‌ந்‌திய அரசா‌ல் இராணுவ உதவி வழங்கப்படவில்லை என்று‌ம் இதுபோ‌ன்ற கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ள் ஆதாரம‌‌ற்றது எ‌ன்று‌ம் இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி என்ற இடத்தில், இந்திய கடற்படைக்கு சொந்தமான விமான தளம் இருக்கிறது. இங்குள்ள ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த தளத்துக்கு.என்.எஸ். பருந்துஎன்று பெயரிடப்பட்டு இருக்கிறது .

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, கிழக்கு கடற்படை துணை தளபதி நிர்மல் வர்மா கலந்து கொண்டனர். புதிய விமான தளத்தை மதுலிகா வர்மா திறந்து வைத்தார். கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, .என்.எஸ். பருந்து தளத்தின் பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பே‌சிய இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கி இருப்பதாக தமிழ்நாட்டில் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி எந்த உதவியும் வழங்க வில்லை. இது போன்ற குற்றச்சா‌ற்றுகள் ஆதாரமற்றது எ‌ன்றா‌ர்.

விடுதலைப்புலிகள் இயக்கம், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் எ‌ன்று‌ம் எனவே அந்த இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட முடியாது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர் .

சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றும் போது, இதன் வழியே கப்பல்கள் இந்திய கடற்கரைக்கு நெருக்கமாக செல்லும். அப்போது, அந்த கப்பல்களில் இருந்து, நாம் விரும்பாதவர்கள் , இறங்கி இந்திய கடற்பகுதிக்கு வரக்கூடிய ஆபத்து உண்டு. மேலும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் போன்றவையும் ஏற்படலாம். இவற்றை தடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம் எ‌ன்றா‌ர் சுரேஷ் மேத்தா.

மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்த அவ‌ர், சர்வதேச எல்லையை தாண்டி மீனவர்கள் செல்லக்கூடாது. அவ்வாறு செல்லும் மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் எ‌ன்றா‌ர் .
!!!!!!!!!!!!!!!!!!
அதிமுகவில் சேர முடிவெடுத்து விட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை சந்திப்பார் என்று தெரிகிறது .

அதிமுக கூட்டணியில் இணைய நேற்று பாமக பொதுக்குழுக் கூட்டம் சம்மதம் தெரிவித்தது . இதையடுத்து அதிமுக கூட்டணிக்கு வருகிறது பாமக.

பொதுக்குழுக் கூட்டம் முடிந்ததும் , ஜெயலலிதாவை, ராமதாஸ் சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கப்பட்டிருந்தது.

ஆனால் அப்படி எந்த சந்திப்பும் நேற்று நடைபெறவில்லை . அதேசமயம், அதிமுக தரப்பிலிருந்தும் பாமக முடிவு குறித்து எந்தவித fUj;Jf;FSk; வெளியாகவில்லை. இதனால் பாமக தரப்பில் லேசான பீதி பரவியது.
மத்திய அமைச்சர்கள் அன்புமணியும், வேலுவும் ராஜினாமா செய்துவிட்டு வந்த பிறகு சந்திக்கலாம் என்று ராமதாசுக்கு ஜெயலலிதா திடீர் நிபந்தனை போட்டதால் தான் இந்தச் சந்திப்பு நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

நாளை இருவரும் டெல்லி சென்று பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தரவுள்ளனர். இதையடுத்து ராமதாஸை நாளை ஜெயலலிதா சந்திக்கவுள்ளார்.

இந்த நிலையில் இன்று பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!
‘எ‌த்தனை தொகுதி தருவீர்கள்? என்று கேட்டுக்கொண்டுதான் ஒரு கூட்டணியில் பா.ம.க சேரும்’ என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொ‌ல். திருமாவளவன் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழாவில், கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகை‌யி‌ல், கடந்த சட்டசபை தேர்தலின்போது முதல் முதலாக நாம்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தோம். அப்போது 34 தொகுதிகளை எதிர்பார்த்தோம். ஜெயலலிதா 9 தொகுதிதான் கொடுத்தார். அப்போது அந்தக் கூட்டணியில் என்னைத் தவிர யாரும் இல்லை.

ஜெயலலிதாவை நம்பி எந்த ஒரு காரியத்திலும் இறங்க முடியாது. இலங்கை பிரச்சனைக்காக நான் உண்ணாவிரதம் இருந்தபோது, அதை நாடகம் என்று கூறிய ஜெயலலிதா, பின்னர் அவரே உண்ணாவிரதம் இருந்தார். அப்படியென்றால் அது நாடகமா?

கொள்கை அடிப்படையில் கட்சிகள் கூட்டணி சேர முடியாது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கூட்டணி சேர முடியும். கொள்கை இல்லாத புதிய கட்சிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். நமக்கு தரவில்லை என்ற ஆதங்கம் இருக்கலாம். நாம்தான் நிலைத்து நிற்போம்.

மக்களவை தேர்தலில் போட்டியிட்டு அங்கீகாரம் பெறவேண்டும். எவ்வளவு தொகுதி தருவீர்கள்? என்று கேட்டுக்கொண்டுதான் ஒரு கூட்டணியில் பா.ம.க சேரும். அது எல்லோருக்கும் தெரியும் எ‌ன்று தொ‌ல். திருமாவளவன் கூ‌றினா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!

கதர் என்றாலே காங்கிரஸ் கட்சியினர் அணியும் ஆடை என்பது தற்போது மாறி, அனைத்துக் கட்சியினரும் கதராடை அணியத் தொடங்கிவிட்டனர். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் , கதர் விற்பனை அமோகமாகkfஅதிகரித்துள்ளதாம். கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளதாக கதர் தொழில் ஆணைய இயக்குநர் தெரிவித்துள்ளார். தேசிய கொடியின் விற்பனையும் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம்
!!!!!!!!!!!!!!!!!!!!!
அரசியல் பிரச்னைகள் குறித்து நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி கேள்வி எழுப்பியுள்ளார் .

அருணாச்சல பிரதேசம் செப்பா நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அத்வானி, காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மன்மோகன்சிங் , மாநிலங்களவைக்குப் போட்டியிடாமல், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அப்பதவிக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் இருப்பதுபோல, அரசியல் பிரச்னைகள் குறித்து தொலைக்காட்சியில் நேருக்கு நேர் விவாதம் நடத்த வேண்டும் என்றும், அதற்கு மன்மோகன் தயாரா என்றும் அத்வானி சவால் விடுத்தார்
!!!!!!!!!!!
தி.மு.. – காங்கிரஸ் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பற்றிய முதல் கட்ட பேச்சுவார்த்தை ஏற்கனவே முடிவடைந்து விட்டது. அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நாளை நடக் கிறது
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் தி.மு.., காங்கிரஸ் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். முதல் கட்ட பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி வேண்டும் என்று கேட்கப்பட்டது. நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் தி. மு.., காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை பா..., .தி.மு.., கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.. கூட்டணியில் இடம் பெற்று இருந்தன. இந்த கட்சிகளுக்கு மொத்தம் 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ் 10 தொகுதியிலும் தி.மு.. 16 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!
இந்தியாசீனா இடையே பொருளாதாரம், ராணுவ உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், பொருளாதாரம், அரசியல், ராணுவம் ஆகிய துறைகளில் மாபெரும் சக்தியாக இந்தியா வளர்ந்து வருவது குறித்து சீனா கவலை அடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

சீனாவின் ராணுவம் பற்றி பென்டகன் வெளியிட்டுள்ள 78 பக்க அறிக்கையில், இந்தியசீன உறவுகள் குறித்தும், ரஷியமத்திய ஆசிய குடியரசுகள் பற்றிய சிறிய பகுதி இடம் பெற்றுள்ளது.

அதில் குறிப்பாக இந்தியசீன எல்லைப் பிரச்னைகள் குறித்தும், இரு நாடுகளிடையே நடைபெற்ற உயர்நிலை வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள், கூட்டு ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது .

இரு நாடுகளுக்கிடையே கடந்த 2007இல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, 11.4 பில்லியன் டாலர்களாக இருந்த வர்த்தகத்தை, வரும் 2010ஆம் ஆண்டுக்குள் 40 பில்லியன் டாலர்களாக உயர்த்துவது என ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இரு நாடுகளும் எல்லைப் பிரச்னை தொடர்பாக பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இருதரப்பு ராணுவ உறவுகள் , பாதுகாப்பு மேம்பாடு குறித்து உயர்நிலை அதிகாரிகள் அளவில் கடந்த 2007ஆம் ஆண்டு வரை 3 சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் பிராந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் இந்தியாவின் சீரிய வளர்ச்சி, அதன் ராணுவ வல்லமை உயர்ந்து வருவது குறித்து சீன ராணுவம் கவலையடைந்துள்ளதாக பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்காவின் குவாண்டனமோ குடா தடுப்பு முகாமில் இருந்து அண்மையில் விடுதலைசெய்யப்பட்ட ஒருவர் தாம் அமெரிக்காவினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பிரிட்டிஷ் ஒற்றர்களின் ஒத்துழைப்புடன் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.
குவாண்டனமோ முகாமுக்கு தாம் மாற்றப்படும் முன்னர் பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் மற்றும் மோராகோ ஆகிய நாடுகளில் வைத்து தாம் சித்ரவதை செய்யப்பட்டதாக பின்யாம் முகமது என்ற அந்த முன்னாள் கைதி கூறியுள்ளார்.
சித்ரவதைகள் மீதான பிரிட்டிஷ் அரசின் கண்டனத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ள வெளியுறவு அமைச்சின் அறிக்கை, அதே நேரத்தில், பயங்கரவாத அச்சுருத்தல்கள் பற்றிய தகவல்கள் வந்துசேரும் போது, அது சித்ரவதை மூலம் பெறப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அதை பிரிட்டிஷ் பாதுகாப்பு படையினர் அலட்சியம் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் கூறியுள்ளது.
!!!!!!!!!!!!!!!
இராக்கின் தலைநகர் பாக்தாதில் கார் குண்டு வெடித்ததில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் . முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஷியா பிரிவினர் பெருமளவில் வாழும் வடக்கேயுள்ள ஷபாப் மாவட்டத்தில் பஸ் நிலையம் ஒன்றில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது.
வடக்கு இராக்கில் கடந்த திங்கட்கிழமை இறுதிச்சடங்கு ஒன்றில் தற்கொலை குண்டுதாரி தாக்கியதில் 25 பேர் கொல்லப்பட்டனர். அதே தினத்தில், பாக்தாத்துக்கு வெளியே குண்டொன்று வெடித்ததில் குறைந்தது 8 பேராவது பலியானார்கள்.
!!!!!!!!!!!!!
நீண்டதூர ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொள்வதற்கு வடகொரியா பூரண தயார் நிலையில் இருப்பதாக ஜப்பான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தொலைத்தொடர்பு சேவைகளுக்கான செய்மதி ஒன்றை ஏவுவதற்கே தாம் தயாராகி வருவதாகவும் அந்தச் செய்மதியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதியில் ஏவத்திட்டமிட்டுள்ளதாகவும் வடகொரியா தொடர்ந்து கூறிவருகின்றது.
இந்நிலையில் ரீப்பொடொங் 2 என்ற ரொக்கட் மூலமே ஏவுகணைப் பரிசோதனைக்கே வடகொரியா தயாராகி வருவதாக ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றது.
வடகொரியா ஏவுகணைப் பரிசோதனை ஒன்றை நிகழ்த்தினால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜப்பானுக்கு எச்சரிக்கையாக அமையும் எந்தவொரு ரொக்கற்றையும் சுட்டுவீழ்த்துவதற்கு தாம் தயாராகி வருவதாக ஜப்பான் பிரதமர் ரறோ அசோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சர்ச்சைக்குரிய ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொள்ளப்போவதாக வடகொரியா தெரிவித்துள்ளது .
வடகொரியாவின் முசுடான்றி தளத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டால் அமெரிக்காவின் அலஸ்கா மாநிலம் வரை தாக்கும் திறனுடையதென்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!
அமெரிக்காவில் தந்தையின் காதலியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 11 வயது சிறுவனொருவன் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளான்.
இக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இச் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.
ஜோர்தான் பிறவுண் என்னும் இச் சிறுவன் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் வயது வந்தவர்களுக்கான விசாரணையே மேற்கொள்ளப்படுமென பென்சில்வேனிய நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
ஆனால், இவ் வழக்கை இளம் பராயத்தவர்களுக்கான நீதிமன்றத்தில் விசாரிக்கக்கோரும் மனுவொன்றை தாம் தாக்கல் செய்யவிருப்பதாக இச்சிறுவனின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர் நன்நடத்தைப் பிரிவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற ஆரம்பகட்ட விசாரணைகளின் போது பிறவுண் மிகவும் அமைதியாகக் காணப்பட்டதாக பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
கடந்தமாதம் தந்தையின் காதலியான கென்ஸி ஹோவ்க் (வயது 26) தூங்கிக் கொண்டிருந்தபோது அவரின் தலையின் பின்புறத்தில் சுட்டதில் அவர் மரணமடைந்ததாக இச் சிறுவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது .
இச் சம்பவத்தின் போது ஹோவ்க் கருவுற்றிருந்ததால் அவரது 9 மாத சிசுவும் ஒட்சிசன் கிடைக்காமல் உயிரிழந்துள்ளது.
பிறவுணும் அவரது தந்தையும் வசித்த வீட்டிலேயே ஹோவ்க்கும் அவரது ஏழு மற்றும் 4 வயதுடைய இருமகள்களும் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ஹோவ்க் மற்றும் அவரது பிள்ளைகள் மீது பிறவுண் பொறாமை கொண்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!
sports
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 619 ரன்களுக்கு நியூசிலாந்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் இந்தியா தற்போது ஆடி வருகிறது.,s;iwa Ml;lNeuKbtpy; ,e;jpa mzp 23 Xtupy; 3tpf;Nfl; ,og;gpw;f;F 79 Xl;lq;fis vLj;Js;sJ

இருநாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. நேப்பியர் நகரில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்களை எடுத்திருந்த நியூசிலாந்து இன்று தனது முதலாவது இன்னிங்சைத் தொடர்ந்தது. 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 619 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அந்த அணி ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ரைடர் இரட்டை சதம் அடித்தார். டெய்லர் மற்றும் மெக்கல்லம் ஆகியோர் சதமடித்தனர். .

Leave a Reply

Your email address will not be published.