தெல்லிப்பளையில் அதிசயவாழைப் பொத்தி

வீரகேசரி இணையம் 3/27/2009 1:02:35 PM – தெல்லிப்பளை குளமங்கால் பகுதியில் உள்ள வீடொன்றில் வாழைக்குலைப் பொத்தி நிலத்தின் கீழ் இருந்து மேல் எழுந்து வளரும் அபூர்வமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்புறத்தில் வளர்க்கப்படும் வாழை குட்டி போட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வாழையின் அடிமட்டத்தில் இருந்து சுமார் ஓர் அடி தூரத்தில் மற்றுமொரு குட்டி வருவதைப் போன்று வாழைப் பொத்தி வெளி வந்துள்ளது. இந்தச் சம்பவம் குளமங்கால் முருகன் தேவதாஸ் என்பவரின் வீட்டிலேயே இவ்வாறு வாழை நிலத்தின அடியில் இருந்து பொத்தி வெளிவந்துள்ளது.

Source & Thanks : virakesar

Leave a Reply

Your email address will not be published.