நாளைய இந்தியாவை வழிநடத்தும் இளைஞர்களை உருவாக்க வேண்டும்: சந்திராயன் திட்ட இயக்குனர்

திண்டுக்கல்: நாளைய இந்தியாவை வழிநடத்தும் இளைஞர்களை உருவாக்கும் திறமை ஆசிரியர், பெற் றோரிடம் உள்ளது என்று சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

திண்டுக்கல் ஆர்.வி. எஸ். பாலிடெக்னிக் கல் லூரி வெள்ளி விழா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாளைய இந்தியாவில் 40 கோடி இளைஞர்கள் இருப்பர். இவர்கள் இந்தியாவை வழிநடத்த போகிறார்கள். அவர்களை திறமைசாலிகளாக உருவாக்கும் பணி ஆசிரியர் கள், பெற்றோர்களிடம் உள்ளது. உங்கள் குழந்தைகள் நல்ல படிப்பை, நல்ல வழியை தேர்வு செய்யும் போது, அதற்கு தடை விதிக்காதீர்கள். ஆசிரியர்கள் திறமையான மாணவர்களை உருவாக்க வேண்டும்.

இளைஞர்களை நல்ல வழிகாட்டினால், நல்ல வழிக்கு செல்வர். சந்திராயன் நிலவை தொட்டது சின்ன விஷயம்தான். நாளைய இந்தியா உலகில் இன்னும் பல சாதனைகள் செய்யும். நாம் குழுவாக சேர்ந்து உழைத்தால் நிச்சயம் சாதிக்கலாம். கட்டமைப்பு, பொறியியல், மருத்துவம், உணவு எல்லாவற்றிலும் சாதித்துக் காட்ட முடியும். இளைஞர்கள் பத்திரிக்கைகளை படிக்க வேண்டும். ஒரு நாட்டின் கண்ணாடி பத்திரிகைகள்தான். நமது உருவத்தை கண் ணாடியில் தெரிந்து கொள்வது போல, நாட்டின் நில�மையை பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், தங்கள் தாய், தந்தையர் கண் முன்பே சாதிக்க வேண் டும். நான் தமிழில்தான் படித்தேன். தாய் மொழியில் படித்தால்தான் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஆர்.வி.எஸ்., கல்வி அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் செந்தில்கணேஷ், தஞ் சாவூர் தமிழ் பல்கலை., முன்னாள் துணை வேந்தர் சுப்ரமணியன், முதன்மை நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன், கல்வி ஆலோசகர் கருப்பணன், முதல்வர் நடராஜன் உட் பட பலர் கலந்துகொண்டனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.