அமெரிக்காவில் 5,000 ஊழியர்களை ஐ.பி.எம். ஆட்குறைப்பு செய்வதால் இந்தியாவுக்கு லாபம் ?

நியுயார்க் : பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்., அமெரிக்காவில் பணியாற்றும் அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 5,000 பேரை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டிருக்கிறது.

அவர்கள் செய்து வந்த வேலைகளில் பெரும்பாலான வேலைகள் இந்தியாவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் ஆட்ளை குறைக்கும் ஐ.பி.எம்.,நிறுவனம், அதன் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருக்கும் அதன் அலு<வலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டிருக்கிறது. 2006ம் வருஷத்தில், ஐ.பி.எம்., இன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையான 4 லட்சத்தில், 65 சதவீதத்தினர் வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்தனர். அது இந்த வருடத்தில் 71 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.பிராக்டர் அண்ட் கேம்பிள் போன்ற வாடிக்கையாளர்களுக்கு ஐ.பி.எம்., செய்து கொடுத்து வந்த கார்பரேட் டேட்டா சென்டர் மற்றும் ஹியூமன் ரிசோர்சஸ் வேலைகள் நடந்து வந்த துறைகளில் தான் இப்போது ஆள் குறைப்பு செய்யப்படுகிறது. சில வாடிக்கையாளர்கள் கொடுத்திருந்த ஆர்டர் முடிந்து விட்டதால் ஆட்குறைப்பு செய்ய வேண்டியதிருக்கிறது என்று ஐ.பி.எம்., நிறுவனம், அதன் ஊழியர்களிடம் சொன்னாலும், பெரும்பாலான வேலைகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு செல்வதால்தால் இங்கு ஆட்குறைப்பு செய்யப்படுகிறது என்கிறார்கள் அமெரிக்க ஊழியர்கள்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.