இராஜதந்திர ரீதியில் புலிகளின் பிரச்சாரங்களை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளினால் சர்வதேசரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களை முறியடிக்கக் கூடிய இராஜதந்திர
செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக பலவீனமடைந்துள்ளதாகவும் இதனால் சர்வதேச நாடுகளின் உதவியுடன் யுத்தத்தை நிறுத்த முனைப்பு காட்டி வருவதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு உகந்த முறையில் பதிலடி கொடுக்க இலங்கையின் வெளிநாட்டு தூதுவராலயங்கள் தயார் படுத்த வேண்டுமென ஜனாதிபதி
குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் படைவீரர்களுக்கும் எதிராக விடுதலைப் புலிகள் தீவிர போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இயங்கி வரும் தூதுவராலயங்களின் ஊடக புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.