வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது: அரசாங்கம்

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் எந்தக்காரணத்திற்காகவும் நிறுத்தப்பட மாட்டாதென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்
பேரவையிடம் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்களினால் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியளிக்காதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்புப் படையினரால் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் திட்டமிட்டபடியே முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் கண்காணிப்புக் குழுவொன்றை அனுப்பி வைக்க விடுத்த கோரிக்கையையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

Source & Thanks : tanilwin

Leave a Reply

Your email address will not be published.