மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப்படை வீரர் ஒருவர் தற்கொலை

மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு அருந்திக் கொண்டிருந்த விஷேட அதிரடிப்படை வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊறணி விசேட அதிரடிப் படை முகாமில் சேவையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் யு.எஸ்.பி. திசாநாயக்கா ( வயது 25) என்பவரே இவ்வாறு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தவர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் தாண்டவன்வெளிச் சந்தியில் வழமை போல் கடமையில் ஈடுபட்டிருந்த இவர் அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்குள் உணவருந்திக் கொண்டிருந்தபோது, கையடக்கத் தொலைபேசிக்கு அவரச அழைப்பொன்று வந்ததாகவும் அதனையடுத்தே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தற்கொலைக்கான காரணம் தமது ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, ஸ்தலத்திற்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.