சிகிரியாவில் குளவி கொட்டியதில் இரண்டு வெளிநாட்டர்கள் உட்பட 20 பேர் காயம்

இலங்கையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளைக் கவரும் புராதன சின்னங்களில் ஒன்றான சிகிரியா சுவரோவியம் அமைந்திருந்த குன்றுப்பகுதியில் குளவி கொட்டியதில் இரண்டு வெளிநாட்டவர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.

இது குறித்துக் கருத்துவெளியிட்ட சிகிரிய வைத்தியசாலை வட்டாரங்கள் இன்று காலை இந்தப் பகுதிக்குச் சென்றவர்கள் மீது குளவிக்கூட்டம்
திடீரெனத் தாக்குதல் நடாத்தியதில் சுமார் 20 பேர் காயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 10 பேர் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவித்தன.

சிகிரிய ஓவியங்கள்
சிகிரிய ஓவியங்கள்
இவ்வாறு குளவிகள் தாக்குதல் நடாத்திய சமயம் சீகிரிய மலைப்பகுதியில் சுமார் 40 பேர் வரை மாட்டிக்கொண்டதாகவும், அவர்களை மீட்க விமானப்படை அணியொன்று அனுப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கிறிஸ்துவுக்கு முன் 5 ஆம் நூற்றாண்டில் காசியப்ப மன்னால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் கவர்ச்சிமிகு சுவரோவியங்களைக் கொண்ட இந்த சிகிரியா அரண்மனைப் பகுதியில், இங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவரோவியங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற காரணத்தினால் இந்தக் குளவிகளை இல்லாதொழிப்பதற்கு அதிகாரிகள் கிருமி நாசினிகளையும், விசப் புகைகளையும் பாவிக்காது தவிர்த்து வருகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.