அமெரிக்க தாக்குதலில் 7 பேர் பலி

ஆப்கானிஸ்தான் எல்லையருகே அமெரிக்காவின் ஆளில்லாத விமானத்தால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தெற்கு வசிரிஸ்தானில் இரண்டு வாகனங்களின் மீது ஏவுகணை தாக்கியது. ஆப்கான் பாகிஸ்தான் எல்லையின் இருபுறத்திலும் செயல்படும் தீவிரவாதிகள் இப்பகுதியை மறைவிடமாக பயன்படுத்துகின்றனர்.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். வெளிநாட்டவர் என்ற சொல் இந்தப் பகுதியில் அல் கைதா போராளிகளைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது.

பாகிஸ்தான் அரசின் எதிர்புக்களை மீறி அமெரிக்க படையினர் கடந்த ஆண்டு முதல் இத்தகைய பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
முற்றுப் பெற்றது மும்பை மோதல்
படங்களில்: மும்பை தாக்குதல்

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.