கோவை-2 குழந்தைகளை கொன்ற தாய் கைது

கோவை: கோவை அருகே சூலூரில் தனது இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த பெண் மூன்றாவது குழந்தையை கொல்ல முயன்ற போது பொது மக்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை சூலூரை அடுத்த அப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் அம்சவேணிக்கும்(39), கள்ளப்பாளையம் நாயக்கனூரை சேர்ந்த குப்பநாயுடு வெங்கடேசனுக்கும் 1995ல் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு சசிகலா( 7), மனோஜ்குமார்(6), கோமதி (5), லீலாவதி (4) என நான்கு குழந்தைகள் இருந்தனர். வெங்கடேசன் 18 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து அம்சவேணி தனது குழந்தைகளுடன் வறுமையில் வாடினார். இதன்காரணமாக குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டார்.

இதையடுத்து செட்டிப்பாளையம் ரோட்டில் உள்ள கிணற்றில் முதலில் கோமதி மற்றும் லீலாவதி ஆகியோரை தூக்கிப்போட்டார். அடுத்து மூத்த குழந்தையான சசிகலா தள்ளிவிட முயன்றார். அப்போது அந்த வழியாக ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து மீதமிருந்த இரண்டு குழந்தையையும் தாயையும் காப்பாற்றினார்கள்.

கிணற்றில் வீசப்பட்ட இரண்டு குழந்தைகளும் இறந்தனர். இதையடுத்து போலீசார் அம்சவேணி மீது கொலை வழக்கு போட்டு, விசாரித்து வருகின்றனர்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.