பலமான விடுதலைப்புலிகள் அமைப்பை உடனடியாக அழிப்பது கடினமானதாகும் – அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிப்பு

விடுதலைப்புலிகள் பலமாக இருந்த ஓர் அமைப்பு என்பதனால் அவர்களை உடனடியாக அழிப்பது என்பது கடினமான காரியமாகும்.


புலிகளை முற்றாக அழிப்பதற்கு சில காலம் எடுக்கும் அவர்களை அழித்ததன் பின்னரே இந்நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்த முடியும் அது வரையிலும் சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என்று அமைச்சர் விநாகய மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பழமைகளை மறந்து புதுமையை பற்றி செல்லவேண்டும் அதன் மூலமாகவே ஏற்பட்டிருக்கும் கசப்புணர்வை இல்லாதொழிக்க முடியும். இந்நிலையில் தமிழ் மக்களின் நலனில் கூட்டமைப்பு விருப்பம் கொண்டிருக்குமாயின் கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

மூவின மக்களையும் மதிக்கின்ற போதுதான் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் ஏற்படும். கிழக்கு மாகாண சபையில் இடம்பெறுகின்ற தவறுகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன். அதிகாரங்கள் தேவையாகும் எனினும் சகல மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய அதிகாரங்களே தேவையானதாகும்.

வடக்கு கிழக்கு இணைப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற இந்த நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பிற்காக கிழக்கு மாகாண மக்களின் அபிலாசைகளை தெரிந்துக்கொள்ளவேண்டும். அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்கின்ற போது இடம்பெயர்வுகள் நகர்தல்கள் இடம்பெறும் உலக மாற்றத்திற்கு ஏற்றவகையில் கிழக்கில் தொழில் கிராமங்கள் ஏற்படுத்தப்படுகின்றன இதன் போது இடப்பெயர்வுகள் ஏற்படுமாயின் அவர்களுக்கு தேவையான சிறந்த வளங்களை ஏற்படுத்த கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருக்கின்றது.

மாகாண சபை முறையின் ஊடாக பொலிஸ் அதிகாரம் தேவையில்லை அவற்றை கொண்டுவந்தால் மீண்டும் பிரச்சினை வரும். அதிகாரங்களை பகிர்ந்தளிக்கின்ற போது சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கவேண்டும் .

பயங்கரவாத பிச்சினை தற்போது முடியும் தருவாயில் இருக்கின்றது என்றாலும் விடுதலைப்புலிகள் ஓர் பலமான அமைப்பு என்பதனால் அவர்களை உடனடியாக அழிப்பது கடினமாக விடயமாகும் அவர்களை அழிப்பதற்கு சில காலம் எடுக்கும் என்பதுடன் முழுமையாக அழித்தால் மட்டுமே நிரந்தர அமைதியை காணமுடியும்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.