மகிந்த ராஜபக்ச இராஜதந்திரிகளை சந்திக்க ஏற்பாடு

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக கொழும்பில் இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து வெளிநாடுகளில் சிலரால் தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அது குறித்து தெளிவுபடுத்தும் நோக்கிலும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்று சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, ஜேர்மன், அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களே சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளையில் இராஜதந்திரிகள் குழுவினை திருகோணமலைக்கு அழைத்துச் சென்று அங்கு இடம்பெர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்திய மருத்து சிகிச்சை முகாமையும் மற்றும் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய அரசியல் நிலைமைகளையும் காண்பிக்கவுள்ளதாக சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்தார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.