வன்னியில் வான், தரைப் படையினர் இணைந்து கொடூரத் தாக்குதல்: 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை

வன்னியில் சிறிலங்காவின் வான் மற்றும் தரைப் படையினர் இணைந்து இன்று நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் உட்பட 210 பேர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் எங்கும் இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இப்பகுதிகளை நோக்கி இன்று 986 எறிகணைகள் மற்றும் பல்குழல் வெடிகணைகள் ஏவப்பட்டதாக வன்னியில் இருந்து ‘புதினம்’ செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

[படம்: புதினத்துக்காக சகிலா]

[படம்: புதினத்துக்காக சகிலா]

[படம்: புதினத்துக்காக சகிலா]

அத்துடன் மாத்தளன் பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

இதே பகுதியில் மாத்தளன் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையே இப்பகுதியில் உள்ள ஒரே ஒரு தற்காலிக மருத்துவமனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகளவிலான தாக்குதல்கள் வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை மற்றும் மாத்தளன் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் எறிகணை மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களும் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டன.

[படம்: புதினத்துக்காக சகிலா]

[படம்: புதினத்துக்காக சகிலா]

[படம்: புதினத்துக்காக சகிலா]

இப்பகுதியில் ஐந்து தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இன்றைய தாக்குதல்களில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் உட்பட 210 பேர் காயமடைந்துள்ளதாக ‘புதினம்’ செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கொல்லப்பட்டவர்களில் இருவர் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் செயலகத்தின் பணியாளர்கள் என்றும் அவர் கூறுகின்றார்.

முல்லைத்தீவு அரச செயலக பதிவாளரும் அலுவலகப் பணியாளருமான 52 வயதுடைய மரியநாயகம் டெய்சி ராணி மற்றும் மாவட்ட செயலக உலக உணவுத்திட்ட நிவாரண வழங்கல் பதிவாளரான 27 வயதுடைய பரமேஸ்வரன் ஜெனோஜா ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

[படம்: புதினத்துக்காக சகிலா]

[படம்: புதினத்துக்காக சகிலா]

[படம்: புதினத்துக்காக சகிலா]

கொல்லப்பட்ட ஏனையோரின் பெயர் விபரம் வருமாறு:

கந்தையா சுப்பையா (வயது 60)

செல்லத்துரை (வயது 77)

தினகரன் யாழியன் (வயது ஐந்தரை மாதம்)

பெருமாள் ரவிக்குமார் (வயது 28)

ரவீந்திரன் பிரியா (வயது 08)

தம்பையா (வயது 74)

பொன்னம்பலம் சிறீலக்சுமி ரஞ்சன் (வயது 52)

மாதவன் செல்லப்பா (வயது 65)

தியாகராசா நிசாந்தன் (வயது 19)

இராமகிருஸ்ணன் மேரி ஜெயசாந்தினி (வயது 09)

தம்பு மயில்வாகனம் (வயது 82)

பசுபதி சுதாகரன் (வயது 23)

தம்பு சுப்பிரமணியம் (வயது 74)

சந்தனம் காளியரத்னம் (வயது 59)

நவரட்ணம் நேசமலர் (வயது 52)

கந்தையா சுப்பையா (வயது 74)

விக்கி கண்ணம்மா (வயது 42)

செல்வராசா ராசம்மா (வயது 70)

தவக்குமார் டிந்து (வயது 09)

மார்க்கண்டு சசிகரன் (வயது 23)

சத்தியமூர்த்தி கௌரியம்பாள் (வயது 45)

சாரங்கன் தட்சாயினி (வயது 12)

வெள்ளைச்சாமி விதுசா (வயது 07)

நகுல்ராஜ் கிருஸ்ணரஜனி (வயது 35)

பரமேஸ்வரன் ஜெயரஞ்சனி (வயது 52)

அமிர்தலிங்கம் டிலக்சன் (வயது 10)

இராசேந்திரம் பிரதீபன் (வயது 29)

மதனவசீகரன் பிரவீணா (வயது 03)

ஆறுமுகம் கலைவாணன் (வயது 13)

மருதமலை தமிழினியன் ( வயது 05)

முருகாண்டி நிதியிம்பன் (வயது 06)

காளிதாசன் காவியன் (வயது 07)

மருதன் (வயது 08)

தேவசகாயம் கார்நிலா (வயது 10)

மலையாண்டி குபேரன் (வயது 14)

கிருபைராசா குமாரி (வயது 33)

தேவதாஸ் கார்த்திகாயினி (வயது 15)

ஏழுமலை கிருநாந்தி (வயது 13)

பார்த்திபராஜா பார்கவி (வயது 14)

தேவிதாசன் காவியா (வயது 13)

கதிரித்தம்பி இந்திரலிங்கம் (வயது 31)

சர்வானந்தகரன் நிசாந்தினி (வயது 24)

சே.ருக்குமணி (வயது 52)

மா.சசிகுமார் (வயது 23)

சு.பாலசிங்கம் (வயது 56)

ந.சோனியா (வயது 18)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயா் விபரம் கிடைக்கப்பெறவில்லை.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.