தமிழீழ உறவுகளால் டென்மார்க் பாராளுமன்றம் முன்பு கவனயீர்ப்பு போராட்டம்

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மேல் நடாத்தும் இன அழிப்பு போரை தடுத்து நிறுத்தக்கோரி. டென்மார்க் பாராளுமன்றத்திற்கு முன்னால் நேற்று முன்தினம் ஒன்று கூடிய டென்மார்க் வாழ் தமிழீழ உறவுகள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்தியிருந்தனர்.

அவர்கள் தமது கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் ”

தமிழ் மக்கள் மீதான படுகொலையை நிறுத்து,

எமக்கு வேண்டும் தமிழீழம்,

எமது தலைவர் பிரபாகரன் ”

போன்ற கொத்தொலிகளை எழுப்பியதோடு, மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் பதாதைகள் மற்றும் தேசியக்கொடி, தேசியத்தலைவருடைய படங்கள் என்பனவற்றையும் தாங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று எழுச்சியோடு நடைபெற்றது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.