‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (25.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும்உதயன்நாளிதழ் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத குழுவினரால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் அலுவலகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் படுகாயமடைந்திருக்கும் அதேவேளையில் அலுவலகக் கட்டடத்துக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாகஉதயன்வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் கஸ்துரியார் வீதியில்உதயன்அலுவலகம் அமைந்திருக்கின்றது .
ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நேரத்திலேயே இன்று புதன்கிழமை அதிகாலை 12:30 நிமிடமளவில் அலுவலகத்துக்கு அருகே உள்ள சிறிய ஒழுங்கையினால் வந்த ஒரு குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

‘உதயன்அலுவலகத்தின் மீது சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதலில் பணியாளர்கள் நால்வர் கொல்லப்பட்டதையடுத்து அதற்கு காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
காவல்துறையைச் சேர்ந்த நால்வர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது.

‘உதயன்அலுவலகத்தில் வழமையாக அதிகாலை 1:30 நிமிடமளவில் மணிவரையில் பணிகள் நடைபெறும்.
இந்த நிலையில் அலுவலகத்தின் கீழ் பகுதியில் உள்ள ஆசிரியர் பீடப் பகுதியை நோக்கியே கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் உள்ள கட்டம் சேதமடைந்திருக்கின்றது. அலுவலகக் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளன.
இருந்தபோதிலும்உதயன்அலுவலகப் பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை. பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே படுகாயமடைந்து யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ். குடாநாட்டுக்கு 9 வீதி ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் இரண்டாவது வாகனத் தொடரணி 300 மெட்ரிக் தொன் பொருட்களுடன் நாளை கொழும்பிலிருந்து பயணமாகுமென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன தெரிவித்தார் . இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இருபது லொறிகளில் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இவற்றில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பழவகைகள், மலிகைச்சாமான்கள், மென்பானங்கள் அடங்களான பொருட்கள் அனுப்பப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
.
அதேவேளை யாழ்ப்பாணம் கைதடி, நாவற்குழி களஞ்சியத்தில் யாழ். விவசாயிகள் மற்றும் மீனவர்களின் உற்பத்திப் பொருட்கள் கொழும்புக்கு அனுப்புவதற்காக திரட்டப்பட்டு வருகின்றன. இம்முறை யாழ்ப்பாணத்தில் இருந்து 60 ஆயிரம் கிலோ எடையுள்ள மீன், இறால், கிழங்கு அடங்கலான யாழ். மக்களின் உற்பத்திப் பொருட்கள் கொழும்புக்கு எடுத்துவரப்பட உள்ளன. E
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.தே.கவின் மாகாண ஆளுநர் சுஜீவ சேனசிங்கவின் அலுவலகம் மீது இன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் சுஜீவ சேனசிங்கவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்றைய தினம் வவுனியாவில் உள்ள அகதி முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் இடம்பெயர் மக்களையும், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகளையும் குறித்த குழுவினர் நேரில் பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஆணைக்குழு உறுப்பினர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து இடம்பெயர் மக்களது நிலைமை குறித்து கலந்துரையாடியதாகவும் கூறப்படுகின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றின் ஊடாக ஐரோப்பிய ஆணைக்குழு இடம்பெயர் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மன்னார் மூர்விதியிலுள்ள காட்டுப் பள்ளிவாசல் பிரதான வீதியில் நேற்று மாலை 7 மணியளவில் 29 வயதான இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.
இவ்வீதியால் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த போது எதிரில் வந்த ஆயுததாரிகளால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர் வெல்டிங் தொழில் செய்துவருபரான செல்வராசா கிங்ஸ்லி என தெரிவிக்கப்படுகின்றது.
தலையில் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் சுடப்பட்டு இறந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக்கொண்ட இவர் காட்டுப் பள்ளிவாசலின் பிரதான வீதியில் வசித்த வருபவரெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் சுடப்பட்டுக் கிடந்த இடத்துக்கு சுமார் 200 மீற்றர் தொலைவில் இராணுவக் காவலரண் ஒன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!
இதேவேளை நேற்று காலை 7 மணியிலிருந்து 9 மணிவரை சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து இப்பிரதேசத்தில் கூட்டாக சுற்றிவளைப்புத் தேடுதலொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது .
இதன் பின்னரே இப்பிரதேசத்தில் நேற்று மாலை இவ்விளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் மன்னார் பஸ்தரிப்பு நிலையத்தில் புதிய இராணுவக் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மன்னார் நகரில் காணித் தகராறு காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை இரு சமூகங்களிடையே பெரும் முறுகள் நிலையேற்பட்டதுடன் அதில் தலையிட்ட பொலிஸார் துப்பாக்கிச் சூட்டையும் கடும் தாக்குதலையும் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மன்னாள் மூர் வீதியிலுள்ள காணிகளின் உரிமை தொடர்பாக எழுந்த பிரச்சினையையடுத்தே இந்தக் களேபர நிலை ஏற்பட்டது.
மூர் வீதியிலுள்ள அரச காணி அப்பகுதியிலுள்ளவர்களுக்கு சுமார் 19 வருடங்களுக்கு முன் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியிலுள்ள பாடசாலையொன்று அங்கு சில கட்டடப் பணிகளை மேற்கொண்டதையடுத்தே நேற்று இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் .
1988 ஆம் ஆண்டில் மன்னார் கச்சேரியின் ஏற்பாட்டில் நடைபெற்ற காணிக்கச்சேரி மூலம் மூர் வீதியிலுள்ள அரச காணியில் 270 பேர்ச் அந்த வீதியிலுள்ள 27 குடும்பங்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டில் இது வழங்கப்பட்டும் வந்தது.
எனினும், 1990 ஆம் ஆண்டில் அங்கிருந்து முஸ்லிம்கள் வெளியேறவே அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து அப்பகுதியிலுள்ள கல்லூரி ஒன்று அந்தக் காணியின் சில பகுதியில் தங்கள் பாடசாலைக் கட்டிடத்தை விஸ்தரித்திருந்தது.
இந்த நிலையில் மூர் வீதியிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் நீண்ட காலத்துக்குப் பின் அங்கு வந்து மீளக் குடியேறினர். தங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை மீண்டும் வழங்குமாறு கோரி வந்தனர்.
இதையடுத்து பாடசாலைக் கட்டிடம் கட்டப்பட்ட பத்து பேர்ச்காணியை விட மிகுதி 17 பேர்ச் காணியையும் மூர் வீதி மக்களுக்கு வழங்க கடந்த ஆண்டு இணக்கம் காணப்பட்டது . இதற்கேற்ப 17 பேர்ச் காணிக்குமுரியவர்கள் கடந்த வாரம் அங்கு சென்று காணிகளைத் துப்புரவாக்கி எல்லைகளை அளந்து கம்பி வேலிகளையும் அமைத்தனர்.
நேற்றும் அவர்கள் சுத்தப் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு சென்ற பாடசாலை அதிபரும் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளும் பெற்றோர், ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்களும் அங்கு அமைக்கப்பட்ட வேலிகளை அப்புறப்படுத்தவே இரு தரப்புக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பு நிலைக்கு வந்தது.
இவ்வேளையில் அங்கு வந்த பொலிஸார் அரச காணிகளை அத்துமீறி சுவீகரிக்க முயல்வதாகக் கூறி மூர்வீதியைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் காணிகளில் அமைத்த வேலிகளை அகற்றுமாறும் எச்சரிக்கவே பொலிஸாருக்கும் அவர்களுக்குமிடையே பெரும் முறுகல் நிலையேற்பட்டு அது கைகலப்பாக மாறியது.
அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்திய பொலிஸார் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தவே நிலைமை மேலும் மோசமாகியது.
இதேநேரம், அந்தவீதி மக்கள் அருகிலுள்ள ஜும்மாப் பள்ளியில் பாங்கொலி எழுப்பி அப்பகுதி மக்களை அழைக்கவே உப்புக்குளம், பெரியகடை பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு பொலிஸாருக்கு எதிராக கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதன் போது அப்பகுதிக்கு மேலதிக பொலிஸாரும் பெருமளவு இராணுவத்தினரும் வந்து சேரவே அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு நீண்ட நேரம் பெரும் களேபர நிலை ஏற்பட்டது .
இதையடுத்து அவ்விடத்திற்கு மன்னார் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சர் லாபீரான் ஹசன் , பிரதேச செயலர் திருமதி. ஸ்ரான்லி டிமெல், மன்னார் பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் எஸ்.எம்.பைசல் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஊர்ப் பிரமுகர்களும் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
அமைச்சர் ரிசாத் பதியுதீனும் தனது மன்னார் மாவட்ட இணைப்பாளர் என்.எம். முனவ்பரை அங்கு அனுப்பியிருந்தார்.
நண்பகல் 12 மணியளவில் ஓரளவு பதற்றம் தணிய அங்கு கூட்டமொன்று நடைபெற்றதுடன் காணிகளிலிருந்து அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு கோரப்பட்டது.
இந்தக் காணி தொடர்பாக இறுதி முடிவெடுப்பதற்காக நேற்று மாலை 4 மணியளவில் விஷேட கூட்டமொன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கடற்படை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இன்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மன்னார் மாவட்ட பதில் நீதிபதி கயஸ் பெல்டானோ அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கும் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட கடற்படை பொலிஸ் அதிகாரியை முருங்கன் பொலிஸார் கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணியளவில் குறிப்பிட்ட கடற்படை பொலிஸ் உத்தியோகத்தரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மது போதையில் நானாட்டான் எடுவிட்டான் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்களுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் கூக்குரலிடவே அயலவர்கள் ஒன்றுகூடி இருவரையும் பிடித்து முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதேநேரம், ஏனைய சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முருங்கன் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர் .
!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலை கந்தளாய்ப் பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் சேனைப்பயிர்ச் செய்கையாளர்கள் மீது நேற்றிரவு ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பயிர்ச்செய்கையாளர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் .

சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.நீல்புல் கிராமத்திலுள்ள தமது சேனைகளில் இரவு நேர காவலுக்காகத் தங்கியிருந்தவர்கள் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது .

விடுதலைப் புலிகள் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு தரப்பு, அந்தப் பகுதியில் தற்போது தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலையில் 6 வயது சிறுமி ஜூட் ரெஜி வர்ஷா படுகொலை தொடர்பான சந்தேக நபர்கள் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகக் கூடாது எனக் கோரி திருகோணமலை நகரப் பிரதேசத்தில் ஓரிரு இடங்களில் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.

இக்கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதான 6 பேரில் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிலும் மற்றுமொருவர் சயனைட் அருந்தியும் மரணமடைந்துள்ள நிலையில் ஏனைய 4 பேரும் அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சிறுமியின் கொலையை தமிழ் ,சிங்கள, முஸ்லிம், பறங்கியர் ஆகிய சகல இனமக்களும் கண்டிப்பதாக அப்பதாதைகளில் குறிப்பிட்டு, கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சார்பில் சடத்தரணிகள் ஆஜராகக் கூடாது என்று வலியுறுத்தி கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலையில் உணவுப் பண்டங்கள் நஞ்சான சம்பவம் தொடர்பாக இரண்டு பேக்கரிகளின் உரிமையாளர்கள் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விகாரை வீதியிலுள்ள பேக்கரியொன்றின் உரிமையாளரான செல்லத்துரை மகேந்திரன், பிரதான வீதியிலுள்ள பேக்கரியொன்றின் உரிமையாளரான பரராஜசிங்கம் மோகன் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு திருகோணமலை மஜிஸ்திரேட் ரி.எல்..மனாப் முன்னிலையில் இந்நபர்களைப் பொலிஸார் ஆஜர்படுத்தினர் . பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையை அடுத்தே அவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை மஜிஸ்திரேட் பிறப்பித்தார்.

அதேவேளை பேக்கரியொன்றில் தயாரிக்கப்பட்ட உணவு நஞ்சானதன் காரணமாக மரணமடைந்ததாகக் கூறப்படும் 10ஆம் குறிச்சியைச் சேர்ந்த 62 வயதான மீனவர் ஜீவநாயகம் துரைரட்னத்தின் சடலத்தை பிரேதப் பரிசோதனையின் பின்பு உறவினர்களிடம் கையளிக்கமாறு மஜிஸ்திரேட் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை நடைபெறும் மரண விசாரணையின் போது சாட்சிகளை ஆஜர்படுத்துமாறும் பொலிஸாருக்கான உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் சந்தேகத்திற்குரிய இரண்டு பேக்கரிகளிலிருந்து உணவுப் பண்டங்களைக் கைப்பற்றிய பொலிஸ் மற்றும் சுகாதாரப் பிரிவினர் மறு அறிவித்தல் வரை குறிப்பிட்ட பேக்கரிகளுக்கு சீல் வைத்துள்ளனர் .

இது இவ்வாறிருக்க, குறித்த பேக்கரிகளில் உணவு பண்டங்களை வாங்கி சாப்பிட்டு வாந்தி,மயக்கம், வயிற்றுளைவு போன்ற அறிகுறிகளுடன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மரணமடைந்தவர் உட்பட 4 மீனவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் ..ஞானகுணாளன் தெரிவித்தார்.

இவர்கள் நால்வரும் ஞாயிற்றுக்கிழமை குறித்த பேக்கரியொன்றில் வாங்கிய பாண், கறி என்பவற்றை காலை உணவாகவும், இரவு உணவாகவும் கடற்றொழிலுக்கு சென்றிருந்த வேளை சாப்பிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
பாடசாலை மாணவர்கள் உட்பட ஏனையோர் நேற்றைய தின்மே வாந்தி, மயக்கம், தலையிடி போன்ற அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தனர் எனவும் அவர் தெரிவித்தார் .
வைத்தியசாலை தகவல்களின் படி 202 மாணவர்கள் உட்பட 270 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர் .104 பேர் தவிர்ந்த ஏனையோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

நோய்வாய்ப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் வாந்தி ஆகியவற்றுடன் பேக்கரியில் கைப்பற்றப்பட்ட உணவு மாதிரிகளும் அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுக்கும் இன்று புதன்கிழமை அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமர்களின் புதல்வியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த இறுதிப் பதவியும் பறிபோயுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பண்டாரநாயக்க குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்பட்ட அத்தனகல்ல ருவான்புர தொகுதி அமைப்பாளர் பதவியையும் சந்திரிகா இழந்துள்ளார் என இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் முன்னோடியாக சந்திரிகாவின் தந்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ருவன்புர தொகுதி அமைப்பாளர் பதவியினை சந்திரிகா கடந்த 18 வருட காலமாக வகித்து வந்தார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் செயற்படுவதாக அரசாங்கத்தினால் தமது அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றதென கெயார் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது .
அண்மையில் மோதல் தவிர்ப்பு வலயத்தில் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்த தமது நிறுவன பணியாளர் சபேசன் குறித்து இலங்கை அரசாங்கத்தின் விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது நிறுவனம் மனிதாபிமான சேவைகளை வழங்குவதனை முதன்மை நோக்காகக் கொண்டு இயங்கி வருவதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் கெயார் நிறுவனத்தின் இலங்கைப் பணிப்பாளர் நிக் ஒஸ்போர்ன் தெரிவித்துள்ளார்.
கெயார் நிறுவனம் 1950ம் ஆண்டு முதல் இலங்கையில் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கெயார் தலைமையகப் பேச்சாளர் மெலானி புஷரூக்ஸ் தெரிவித்துள்ளார்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அரசாங்கத்திலிருந்து தம்மையும் தமது கட்சி உறுப்பினர்களையும் விரட்டியடிக்க If;fpa ,uhr;rpaj;jpy; rpiwj;jz;lizngw;wtUk; me;jrmw;w அமைச்சUk; MAjjhupAkhd கருணா சதித்திட்டம் தீட்டி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் மீண்டும் ஆயுத கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவர்If;fpa,uhr;rpaj;jpy; rpiwj;jz;lizngw;wtUk; me;jrmw;w அமைச்சUk; MAjjhupAkhd கருணா என்பதனை எவரும் மறந்துவிடக் கூடாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது பிள்ளையான் இதனைக் குறிப்பிட்டுள்ளார் .
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை ஓரங்கட்டும் நடவடிக்கைகளில் If;fpa,uhr;rpaj;jpy; rpiwj;jz;lizngw;wtUk; me;jrmw;w அமைச்சUk; MAjjhupAkhd கருணா தீவிரம் காட்டி வருவதாக பிள்ளையான் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலைமை கிழக்கில் துணை இராணுவக் குழுக்களுக்கு இடையில் மீண்டுமொரு ஆயுத போராட்டம் வெடிக்கக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தி தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு அதிகாரப் பகிர்வை முன்வைக்குமாறு இந்தியா ஒருபோதும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்ததேயில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஒத்துழைப்புக் காரணமாகவே பயங்கரவாதத்தை இந்தளவு முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது என்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் விருப்புக்கு ஏற்ப இலங்கை அரசியல் நகர்வை மாற்றியமைக்க முடியாது என்றும் இலங்கை அரசு மேலும் கூறியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் நிமால் ஸ்ரீபால டி சில்வா, டலஸ் அழகபெரும் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ ஆகியோரே இவ்வாறு கூறினர்.
அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா இது தொடர்பாகக் கூறியவை:
இந்தியாவின் தலையீட்டுடன்தான் 13ஆவது திருத்தச்சட்டம் இங்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி அதிகாரப் பகிர்வு என்ற இந்தியாவின் ஆசை அப்போது இந்நாட்டில் நிறைவேற்றப்பட்டது . ஆனால், இப்போது நிலைமைவேறு.
இலங்கையில் யுத்தம் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்படல் வேண்டும் என்று இந்தியா விரும்புகின்றது . அதற்கான உதவியையும் அது எமக்குச் செய்கின்றது. ஆனால், எமது நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரப் பகிர்வை முன்வைக்குமாறு இந்தியா ஒருபோதும் எமக்கு அழுத்தம் கொடுத்ததில்லை.
இந்தியா எமக்கு பல வழிகளிலும் உதவி வருகின்றது. பாதிக்கப்பட்ட அகதிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அந்நாடு மருந்துப் பொருள்களையும் வைத்தியர்களையும் எமக்குத் தந்துள்ளது. இன்னும் உதவ முன்வந்துள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திங்கட்கிழமை என்னைச் சந்தித்துப் பேசினார். பல உதவிகளை இலங்கைக்கு வழங்க இந்தியா தயராக இருப்பதாக தூதுவர் என்னிடம் கூறினார் என்றார் .
ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுயதாவது:
இந்தியா எமது யுத்த நடவடிக்கையை ஏற்றுள்ளது. எமது படையினர் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்யும் அதேவேளை, அப்பாவி மக்களையும் காப்பாற்றுகின்றனர் என்றார்.
யுத்தம் நடைபெறும் எந்தவொரு நாட்டிலும் எமது படையினர் போல் மனிதாபிமானத்துடன் எவரும் செயற்படுவதில்லை.
இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இதை நன்கு விளங்கி வைத்துள்ளன . அவை ஒருபோதும் யுத்தத்தை நிறுத்த முற்படமாட்டா என்றார்.
அங்கு வைத்து விமல் வீரவன்ஸ கூறியவை வருமாறு:
இந்தியா நினைத்தால் யுத்தத்தை நிறுத்தவும் முடியும். அதைத் தொடர வைக்கவும் முடியும் . ஆனால், இது தொடர்பில் இந்தியா எமக்கு எந்தவொரு அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை . இது தொடர்பாக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
அதேவேளை, நாம் ஏனைய நாடுகளின் தேவைக்கு ஏற்ப எமது அரசியல் நடத்தைகளை மாற்றியமைக்க முடியாது.
அரசியல் நடத்த வேறு கோஷம் எதுவும் இல்லாதவர்களே இந்தியாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் . இந்திய வைத்தியர்கள் இங்கு வந்தமை பிழை என்கின்றனர் என்றார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் ஊடக செயலாளர் எம். எஸ்..எம் .அஜ்வத் அலி ஓட்டமாவடியில் வைத்து வாழைச்சேனை பொலிஸாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள தகவல் வருமாறு :
நேற்றுமுன்தினம் இரவு 10.15 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவரது தாயாரின் வீட்டோடு இணைந்தஅவருக்குச் சொந்தமான கடையின் மின்சார இணைப்பு வேலைகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்தபோது வாகனத்தில் வந்த பொலிஸார் கடைக்குள் புகுந்து அவரைத் தாக்கியுள்ளனர். அவரிடமும், அவருடன் நின்றுகொண்டிருந்த ஏனையவர்களிடமும் அடையாள அட்டைகளைப் பொலிஸார் கேட்டுள்ளனர்.
ஊடக செயலாளரிடம் பெயரைக் கேட்டபோது அவர் தனது பெயரைக் குறிப்பிட்டுள்ளார். வந்த பொலிஸாரில் ஒருவர் முழுப் பெயரையும் சொல்லுமாறு சத்தமிட்டுக் கேட்டுள்ளார். ஊடக செயலாளர் அமைதியாகக் கேட்குமாறு கூற, அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அவருடன் வந்திருந்த மற்றொரு பொலிஸாரும் அவரைத் தாக்க முனைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஊடக செயலாளர் தனது தேசிய அடையாள அட்டையையும் அமைச்சின் அடையாள அட்டையையும் காண்பித்தபோதும் பொலிஸார் அவரை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஊடக செயலாளர் நடந்தவற்றைக் கூறிய பின் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதன் பின்னர் அவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!
தமது நண்பர் ஒருவரின் சடலத்தை இரகசியமான முறையில் அடக்கம் செய்த ஐந்து இலங்கையர்களுக்கு கட்டார் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2007ம் ஆண்டில் அதிக மதுபோதையினால் நினைவிழந்து பின்னர் உயிரிழந்த தமது நண்பர் ஒருவரை குறித்த ஐந்துபேரும் பாலைவனப் பகுதியொன்றில் இரகசியமாக புதைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரில் இருவர் ஏற்கனவே கட்டாரைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் , மூவர் தற்போது கட்டாரில் இருப்பதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
கட்டாரில் பணிபுரியும் மூவருக்கும் ஓராண்டு கால சிறைத்தண்டனை மற்றும் நாடுகடத்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கட்டாரைவிட்டு வெளியேறிய இருவருக்கும் மூன்றாண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு அதிக போதையினால் உயிரிழந்ததாகவும், குறித்த இளைஞரின் சடலத்தை நண்பர்கள் இரகசியமான முறையில் புதைத்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சகோதரர் மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
உயிரிழந்த நபர் மதுபோதைக்கு அடிமையானவர் எனவும், அதிக மதுபோதையின் காரணமாகவே உயிரிழந்ததாகவும் மரண விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மற்றும் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்களின் பெயர் விபரங்கள் இதுவரையில் வெளியிடப்பட்டவில்லை.
!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரான்ஸின் பாரிஸ் நகரில் சிறீலங்காவின் தேசிய விமான சேவையை அனைவரும் புறக்கணிக்கக் கோரி பிரான்ஸ் தமிழ் இளையோரால் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மாலை 4 மணிக்கு பாரிஸ் நகரின் போர்த் து வேர்சாய் என்னும் இடத்தில் ஆரம்பித்த இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், சிறீலங்கா அரசிற்குப் பாரியளவு வருமானங்களை ஈட்டித்தரும் வழிகளில் ஒன்றான சிறீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவையை அனைவரும் புறக்கணிக்கவேண்டும் என்னும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இக் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக அதில் கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ,

பொருளாதார வீழ்ச்சியில் உலக நாடுகள் பலவும் தடுமாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், தமிழர்கள் மீதான போரிற்குத் தேவைப்படும் நிதியைத் திரட்டிக்கொள்ளும் ஓர் வழியாகவும் சிறீலங்கன் விமானசேவை காணப்படுகின்றது. ஆதலால் இவ் விமான சேவையை அனைவரும் புறக்கணிப்பதன் மூலம் ஓர் இனவழிப்பு நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த முடியும் எனத் தெரிவித்தனர்.
இப் புறக்கணிப்புக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது அப்பகுதியில் பிரான்ஸ் தமிழ் இளையோரினால் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. அத்துடன் பாதையோரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பதாகையும் வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகளில் இடம்பெறும் யுத்தத்தால் கைத்தொழில் துறை வளர்ச்சியடைந்த நாடுகளில் பொதுமக்கள் புகலிடம் கோருவது அதிகரிக்கும் என்று அகதிகளுக்கான .நா.உயர்ஸ்தானிகராலயம் (யு.என்.எச்.சி.ஆர்) நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
கடந்த வருடம் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் கைத்தொழில்துறை வளர்ச்சியடைந்த நாடுகளில் புகலிடம் கோரி 2008 இல் 3 இலட்சத்து 83 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். இது 2007 விட 12 சதவீதம் அதிகமாகும் என்று அகதிகளுக்கான .நா.உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார் . ஆப்கான், சோமாலியா நாடுகளிலிருந்தே அதிகளவு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து புகலிடம் கோருவோர் விண்ணப்பங்கள் கடந்த வருடம் 24 சதவீதத்தால் அதிகரித்துள்ளது .
புலிகளுடனான யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் அரசு விலகிக்கொண்டதைத் தொடர்ந்து யுத்தம் மீண்டும் ஆரம்பித்ததால் இலங்கையிலிருந்து புகலிடம் கோருவோரின் தொகை அதிகரித்திருப்பதாக யு .என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மகியங்கன கண்டி பஸ்ஸில் மோசமான முறையில் நடந்துகொண்ட பாடசாலை ஆசிரியருக்கும் ஆசிரியைக்கும் ரூபா 10 ஆயிரம் சரீரப் பிணையில் செல்ல தெல்தெனிய மாஜிஸ்திரேட் சுவர்ணா கரல்லியத்த அனுமதியளித்துள்ளார்.
திருமணம் முடித்ததாகக் கூறப்படும் இந்த ஆசிரியர்கள் இருவரும் தனியார் பஸ்ஸில் நடந்துகொண்ட முறைபற்றி பஸ்ஸில் பிரயாணம் செய்த சக பிரயாணிகள் பொலிஸில் செய்த முறைப்பாட்டினைத் தொடர்ந்தே பொலிஸார் இருவரையும் கைது செய்து நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்தனர் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்தேவிரயில் சேவையை மீண்டும் வடக்கு நோக்கி ஆரம்பிக்க வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை வரையான 159 கிலோமீற்றர் தூர ரயில் தண்டவாளங்களுக்கும் சிலிப்பர் கட்டைகளுக்கு மட்டும் 700 கோடி ரூபா தேவைப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார் .
ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றயாழ்தேவிரயில் சேவையை மீண்டும் வடக்கிற்கு ஆரம்பிப்பதற்கான ரயில் பாதை புனரமைப்புக்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் பேசும் போதே அமைச்சர் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார
இதேநேரம், நிலப்பரப்பை வெற்றி கொண்டது நின்று விடாது. எமது படையினர் யாழ்தேவிக்காக பாதை அமைப்பதிலும் விஷேடமான பொறுப்பை நிறைவேற்ற எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
நாம் எவ்வளவு திடசங்கற்பம் கொண்டாலும் இந்த பாரிய நடவடிக்கைக்காக செலவாகும் நிதியானது உலகிலேயே மிக மோசமான பயங்கரவாதிகளுடன் 3 தசாப்தங்களாக போராடிய எம்மைப் போன்ற நாட்டுக்கு இலகுவானதல்ல.
உதாரணமாக, 159 கிலோமீற்றர் தூரமான தண்டவாளங்களுக்கு மட்டும் 450 கோடி ரூபா தேவைப்படுகிறது . அந்த தூரத்திற்கான சிலிப்பர் கட்டைகளுக்கு மட்டும் 250 கோடி ரூபா தேவைப்படுகிறது என்றார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வரலாற்று பிரசித்தி பெற்ற சீகிரியா மலையில் குளவி கொட்டியதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 40 பேர் வரை மலையுச்சியில் சிக்கியுள்ளதாகவும் , அவர்களை மீட்கும் பணியில் விமானப்படையினரும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுள் இரு வெளிநாட்டவர்கல் உட்பட அதிகளவில் பாடசாலை மாணவர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரசுக்கு 16 தொகுதி, 21 தொகுதிகளில் தி .மு..போட்டி apLவது உறுதியாகி விட்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது .
காங்கிரசுக்கு வடசென்னை, காஞ்சீபுரம் (தனி), தர்மபுரி, ஆரணி, கள்ளக்குறிச்சி, திருப்பூர் , கோவை, திண்டுக்கல், மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி (தனி), கன்னியாகுமாரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்க பேசப்பட்டுள்ளது என்றும் , காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறினார்.
மீதம் உள்ள 24 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம்லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வீதம் ஒதுக்கி 21 தொகுதிகளில் போட்டியிட தி.மு.. திட்டமிட்டு உள்ளது.
திருவள்ளூர் (தனி), தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி , திருவண்ணாமலை, விழுப் புரம் (தனி), சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி (தனி ), பொள்ளாச்சி, கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் (தனி), தஞ்சை, மதுரை , நெல்லை ஆகிய 21 தொகுதிகள் தி.மு..வுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது .
விடுதலை சிறுத்தை கட்சிக்கு சிதம்பரம் தொகுதியும், முஸ்லிம்லீக் கட்சிக்கு வேலூரும் , மனித நேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்படுகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.. கூட்டணியில் கம்யூனிஸ்டு, .தி .மு.., பா... ஆகிய கட்சிகள் இடம் பெற்று இருந்தன. கம்யூனிஸ்டுகள் 4 தொகுதியிலும், பா... 6 தொகுதியிலும், .தி.மு.. 4 தொகுதியிலும் போட்டியிட்டது. தி.மு.. 16 தொகுதியிலும், காங்கிரஸ் 10 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றன.
இந்த முறை கம்யூனிஸ்டு, பா..., .தி.மு.. ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறியதால் அந்த கட்சிகள் போட்டியிட்ட 14 தொகுதிகளை தி.மு..வும், காங்கிரசும் கூடுதலாக பங்கிட்டுக்கொண்டுள்ளன.

:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.தி.மு.. கூட்டணியில் சேருவது ஈழத் தமிழர்களுக்கு எதிரான செயல் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முதல்வர் கருணாநிதியை, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில், நேற்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இருவரும் தொகுதிப்பங்கீடு குறித்து பேசினர். பின்னர் வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தி.மு.. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 2 தனித் தொகுதி, ஒரு பொதுத் தொகுதி என மொத்தம் 3 தொகுதிகளை தரும்படி முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

தி.மு..வுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை ரீதியான உறவு வைத்துள்ளதை முதல்வர் கருணாநிதி கடந்தவாரம் அறிவித்தார். தேர்தல் கூட்டணிக்காக இல்லாமல் சாதி ஒழிப்பு, சமத்துவ கொள்கை ரீதியில் பெரியார், அண்ணா வழியில் செயல்படுவதாக அவர் அப்போது கூறியிருந்தார். இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த பாராட்டு ஆகும்.

இலங்கை தமிழருக்கு ஆதரவுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். இலங்கை தமிழர்கள் மீது மிகுந்த அக்கறை வைத்துள்ள தி.மு..வுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக பேசிய . தி.மு.. பொது செயலாளர் ஜெயலலிதா, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் சரண் அடைய வேண்டும் என்றும் கூறியவர். தமிழ் ஈழத்திற்கும், தமிழ் இனத்திற்கும் எதிராக தொடர்ந்து பேசி வந்த அவர், தற்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு காட்டுவதுபோல, உண்ணாவிரதம் என்ற ஒருநாள் கூத்தை நடத்தியுள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் .தி.மு. . நேர் எதிரான கட்சி. .தி.மு.. கூட்டணியில் சேர்வது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது.

எங்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி , தி.மு.. கூட்டணிக்கு வருமாறு, பா...வுக்கு அழைப்பு விடுத்தோம். இதுதொடர்பாக டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினேன். அப்போது, தோழமை உரிமையுடன் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்தேன். கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்துபேசி கூறுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். தி.மு.. கூட்டணிக்கு பா.. . வருவார்கள் என்று நம்புகிறேன்.

சிதம்பரம் தொகுதியில் பா...வும் , விடுதலை சிறுத்தைகளும் தனித்தனி அணியில் நின்று போட்டியிட நேரிட்டால், எங்களுக்குள் போட்டி மட்டுமே இருக்கும். மோதல்கள் இருக்காது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!
காங்கிரஸ் மேற்கொண்ட இறுதி முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டதால், பாமக தனது அடுத்த கட்ட வேலைகளில் தீவிரமாகியுள்ளது.

தற்போது தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தங்களது கட்சி போட்டியிடப் போகும் தொகுதிகளின் நிர்வாகிகளை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறாராம்.

வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடைசியாக தெரிந்த தகவலின்படி பாமக, புதுச்சேரி , ஆரணி, கள்ளக்குறிச்சி, சிதம்பரம், தர்மபுரம், காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது. இதுதவிர ஒரு ராஜ்யசபா சீட்டையும் பாமகவுக்கு அதிமுக தருகிறது.

திமுக கூட்டணியில் பாமக இல்லை என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டதால் , இன்று அல்லது நாளை மத்திய அமைச்சர் பதவிகளை அன்புமணி ராமதாஸும், வேலுவும் ராஜினாமா செய்யவுள்ளனர் என்கிறார்கள்.

நாளை காலை 11 மணிக்கு சென்னை அருகே உள்ள வானகரத்தில் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் கூட்டணிக்கு ஒப்புதல் பெறப்படுகிறது. இதையடுத்து டாக்டர் ராமதாஸ், தனது கட்சியின் முடிவை செய்தியாளர்களுக்கு அறிவிப்பார். அதன் பின்னர் அவர் போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவை சந்திப்பார் என பாமக வட்டாரம் கூறுகிறது .

இதைத் தடுக்கும் முயற்சிகளி்ல் காங்கிரஸ் ஈடுபட்டாலும் திமுக தரப்பு அவ்வளவாக இதில் ஆர்வம் காட்டவில்லை. போனால் போகட்டும் என்ற முடிவில் உள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் தமிழர்கள் மிக மோசமான படுகொலையை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் வக்கிரங்களை கட்சித் தலைமைகள் மேல் மாறி மாறி காண்பித்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ”டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைப் பிரச்சினையிலே எங்களை விடத் தீவிரமானவர்கள் என்று காட்டிக்கொள்ள – காலையிலே ஒரு அறிக்கை, மாலையிலே ஒரு அறிக்கை என்று வெளியிட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை கைகழுவி விட்டோம் என்று கதைக்கிறார்கள். அவர்கள் வாதப்படி நாம் கை கழுவி விட்டவர்கள்அல்லது கையாலாகாதவர்கள்இவர்கள்தான் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் அந்தக் கருமமே கண்ணாயினார் என்ற நிலையிலே உள்ளவர்கள் ஆயிற்றே; இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குழுவிலே இருக்கின்ற இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள் , ரண ரங்க மார்த்தாண்டர்கள்முழங்கட்டுமே முரசம்கொட்டட்டுமே பேரிகை.
இலங்கை நோக்கி இராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! ராஜபக்சேயை முறியடித்துத் திரும்பட்டுமே ! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்? ஒரு நாள் பகல் இரவு 24 மணி நேரத்தில் – 20 மணி நேரம் தொகுதிப் பங்கீடுஅட்வான்சாக ராஜ்ய சபாஇப்படி பேரம் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றாலே ஒருவீரம் அல்லவா பொசுக்கென வந்து விடுகிறது.
உடனே பூகம்பமாக வெடித்துப் புயலாக சீறிமத்திய ஆட்சியிலே இருக்கும் கொங்கிரஸ் மீதும் கனல் கக்குகிறார்கள்தமிழகத்திலே இருக்கும் கழக ஆட்சி மீதும் தணல் கொட்டுகிறார்கள். அய்யா, வேண்டாமய்யா, இந்த வம்பு. நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும் . அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை.
அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய (?) நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம். இந்த இலங்கை மீது படை யெடுப்புக்கு தலைவியாக ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டுஅவரையும் அழைத்துச் செல்லுங்கள். அவர் நிச்சயமாக ராஜபக்சேயை போரிலே வென்றுஅவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவார்.
எச்சரிக்கை.
அவர் தவறிப்போய் 2002ஆம் ஆண்டு சட்டமன்றத்திலே முதலமைச்சராக இருந்து முன் மொழிந்து நிறைவேற்றினாரே ஒரு தீர்மானம்தளபதி பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வருவோமென்றுஅதை நினைத்து ராஜபக்சேவுக்குப் பதிலாக பிரபாகரனை கைது செய்து விடப்போகிறார். எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்என்று தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.‌தி.மு.. அவை‌த் தலைவராக இரு‌ந்த மு.க‌ண்ண‌ப்‌ப‌ன்தி. மு..‌வி‌ல் இணை‌ந்ததை‌த் தொட‌ர்‌ந்து தனது ச‌‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வியை இ‌ன்று ரா‌‌ஜினாமா செ‌ய்தா‌ர். இத‌ற்கான கடித‌த்தை அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌னிட‌‌ம் கொடு‌த்தா‌ர்
.‌தி.மு.. அவை‌த் தலைவராக இரு‌ந்தவ‌ர் மு.க‌ண்ண‌ப்‌ப‌ன். இவ‌ர் ச‌மீப‌த்‌தி‌ல் மரு‌த்துவமனை‌யி‌ல் இரு‌ந்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை ச‌ந்‌தி‌த்து உட‌ல் நல‌ம்விசா‌ரி‌த்தா‌ர். இது வைகோவு‌க்கு கடு‌ம் கோப‌த்தை உ‌ண்டா‌‌க்‌கியது.

இ‌தை‌த் தொட‌ர்‌ந்து க‌ண்ண‌ப்பனு‌க்கு‌ம், வைகோவு‌க்கு‌ம் இடையே கரு‌த்து வேறுபாடு ஏ‌ற்ப‌ட்டது. இதையடு‌த்து தனது ஆதரவாள‌ர்களுட‌ன் கட‌ந்த 23 ஆ‌‌ம் தே‌தி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி மு‌ன்‌னிலை‌யி‌ல் மு.க‌ண்ண‌ப்ப‌ன்தி.மு..‌வி‌ல் இணை‌ந்தா‌ர்.

இ‌ந்தநிலை‌யி‌ல் தனது ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பதவ‌ியை இ‌ன்று மு.க‌ண்ண‌ப்ப‌ன் ரா‌ஜினாமா செ‌ய்தா‌ர். இத‌ற்கானவிலக‌ல் கடித‌த்தை அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌‌ப்ப‌னிட‌ம் கொடு‌த்தா‌ர் .

இ‌ந்தவிலக‌‌ல் கடித‌த்தை ஏ‌ற்று‌க் கொ‌ள்வதாக அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உத்தரபிரதேசத்தில் சிறுபான்மை இனத்தவருக்கு எதிராகப் பேசியதாக தொடரப்பட்ட கிரிமினல் வழக்கிற்கு எதிரான வருண்காந்தியின் மனுவைத் தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது, சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசியதாக வருண்காந்தி மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. இதன்காரணமாக வருண்காந்தி கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது .
இந்நிலையில், வருண்காந்தி சார்பில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவரைக் கைது செய்ய இடைக்கால தடைவிதித்தது. இதனிடையே, தன்மீதான கிரிமினல் வழக்கை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வருண்காந்தி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிமினல் வழக்கிற்கு எதிரான வருண்காந்தியின் மனுவை ஏற்கமுடியாது என்று தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வருண்காந்தி கைது செய்ய தடை விதிக்க முடியாது என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

!!!!!!!!!!!!!!!!!!!
உத்தரபிரதேசம் பிலிபித் தொகுதியில் பாஜக வேட்பாளர் வருண்காந்திக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டாம் என்று அக்கட்சிக்கு ஆலோசனை மட்டுமே வழங்கியதாக மத்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண்காந்தி, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், சிறுபான்மை இனத்தவருக்கு எதிராகப் பேசியதாகக்கூறி, அவர் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு அறிவுறுத்தியது.
ஆனால், அதனை ஏற்க அக்கட்சி மறுத்துவிட்டது. இந்நிலையில், பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கோபால்சாமி, வருண்காந்தியின் பிரச்னைக்குரிய பேச்சு அடங்கிய சிடியின் நம்பகத்தன்மையை அறிய, அது தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை என்று கூறினார். வருண்காந்தியை வேட்பாளராக அறிவிக்க வேண்டாம் என்று பாஜகவிற்கு யோசனை மட்டுமே வழங்கியதாகவும், அதனை ஏற்பது அக்கட்சியின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!
காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டையில் , 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஹர்படா வனப்பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பது கடந்த 20ஆம் தேதி, இந்திய ராணுவத்திற்கு தெரியவந்தது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த ராணுவம், தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது.
தீவிரவாதிகளும் எதிர்த்து கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சண்டையின்போது 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சம்பவத்தில் மேஜர் மொகித் ஷர்மா உட்பட 8 ராணுவத்தினர் பலியாகினர். கடந்த 5 நாட்களாக நடைபெற்ற சண்டை தற்போது முடிவிற்கு வந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர் . இந்தியாவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியாக தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!
Tô¡vRô²p BÞm áhP¦ AW£p úNÚm GiQm HÕªpûX G] Tô¡vRôu Øv#m Äd (Gu) RûXYÚm, Øu]ôs ©WRUÚUô] SYôv `Ãl §hPYhPUôL ùR¬®jRôo.
Xôá¬p AYo ùNn§Vô[oL°Pm
Sôh¥p _]SôVLjûR TXlTÓjÕYÕYúR GeL°u Ød¡V úSôdLm. ARtLôL GkR ¨ûX«Ûm áhP¦ AW£p úNokÕ ùNVpTÓm GiQªpûX. AúRúYû[«p, UdLs SXj §hPeLs Utßm £\kR ùNVpTôÓLÞdÏ AWÑdÏ ÕûQVôL SôeLs CÚlúTôm. úRûY«pXôUp GkR ¨TkRû]Lû[Ùm ®§dLUôhúPôm.
YÚm 28-m úR§ SûPùTßm SôPôÞUu\d áhÓd áhPj§p EûWVôtßm A§To _oRô¬, Rôu A°jR YôdÏߧLû[ ¨û\úYtßm YûL«p §hPeLû[ A±®lTôo G] Smסú\u Gu\ôo.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தான் நீதித்துறையில் பரவிக்கிடக்கும் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அந்நாட்டின் தலைமை நீதிபதியாக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இப்திகார் சௌத்ரி உறுதியளித்துள்ளார் .

பாகிஸ்தான் அதிபராக முஷாரப் பதவியில் இருந்தபோது, தலைமை நீதிபதி இப்திகார் உள்ளிட்ட 60 நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திவந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சர்தாரியின் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீபின் முஸ்லீம் லீக் கட்சியும் அமோக வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சி அமைத்தது.
அதிபராக சர்தாரி பதவியேற்ற பின்னரும், இப்திகார் உள்ளிட்ட பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பணி அமர்த்தப்படவில்லை.
இதனையடுத்து நவாஸ் தலைமையில் மீண்டும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, இப்திகாரை மீண்டும் பதவியில் அமர்த்த சர்தாரி ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், பாகிஸ்தான் தலைமை நீதிபதியாக மீண்டும் நேற்று பொறுப்பேற்ற இப்திகார், நீதித்துறையில் ஊழல் மலிந்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார். இதனை வழக்கறிஞர்களின் உதவியுடன் ஒழிக்கப்போவதாகவும் அவர் உறுதியளித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
march 2003 y;ypUe;J Muk;gk;khfpa ,uhf;Aj;jj;jpy; New;W tiu nfhy;yg;gl;l mNkupf;f ,uhZtj;jpdupd; vz;zpf;if 4260 vd njuptpf;f;gl;Ls;sJ. vida ,uhZtj;jpdh; tupirapy; The British 179 deaths; Italy, 33; Ukraine, 18; Poland, 21; Bulgaria, 13; Spain, 11; Denmark, seven; El Salvador, five; Slovakia, four; Latvia and Georgia, three each; Estonia, Netherlands, Thailand and Romania, two each; and Australia, Hungary, Kazakhstan and South Korea, ehLfs; tupirapy; Xt;NthUtUk; MFk;.
!!!!!!!!!!!!!!!!!!
தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படவிருந்த சமாதான மாநாடு காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசாநுழைவு அனுமதி வழங்க தென்னாப்பிரிக்க அரசாங்கம் மறுத்ததால் பலத்த கண்டனங்கள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து மகாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
நோபெல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க பிரமுகர்கள் எஃப்.டபிள்யூ.டி கிளார்க் , பேராயர் டெஸ்மண்ட் டூடூ உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்த விசா மறுப்புக்கு கண்டனம் தெரிவித்து மகாநாட்டில் கலந்துகொள்ள மறுத்தார்கள்.
தலாய்லாமா அவர்கள் விஜயம் செய்வதற்கு இது ஏற்ற தருணம் அல்ல என்று தென்னாப்பிரிக்க அரசு தெரிவித்திருக்கிறது.
!!!!!!!!!!
இஸ்ரேலில் பிரதமராக பதவியேற்கவுள்ள பின்யாமின் நெதன்யாகுவின் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் பங்கேற்பதா என்பது குறித்து ஆராயும் முகமாக இஸ்ரேலிய தொழிற்கட்சி கூட்டம் ஒன்றை நடத்துகிறது.
இந்த கூட்டணியில் இணைவதற்கான உடன்பாட்டை தொழிற்கட்சியின் தலைவர் எஹூத் பராக் ஏற்றுக்கொண்டிருக்கிறார் , ஆனால், அவரது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்த்திருக்கிறார்கள்.
ஏற்கனவே தீவிர வலதுசாரிக் கட்சிகளுடனும், கடுமையான பழமைவாதக் கட்சிகளுடனும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள நெதன்யாகுவை, கடும்போக்கான வலதுசாரி என்று கூறி அவர்கள் நிராகரித்துள்ளனர் .
சிறிய அளவிலான பெரும்பானமையை மாத்திரம் கொண்டுள்ள இந்த வலதுசாரி இஸ்ரேலிய அரசாங்கத்தின் எதிர்காலம் குறித்து பரவலான கவலைகள் எழுந்துள்ள
!!!!!!!!!!!!!!!!
உலகில் மலேரியா நோய் மிகவும் வேகமாக பரவிவரும் பகுதிகளில் இருந்து அந்நோயை ஒழிப்பது என்பது முன்னர் நினைத்ததை விட மிகவும் இலகுவானதாக இருக்கும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் இந்த நோய் பரவும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள மக்கள் வாழும் இடங்களில் , மலேரியா பரவும் வீதத்தை கிட்டத்தட்ட பூச்சியமாக குறைக்க முடியும் என்பதை கண்டுபிடித்ததில் தான் ஆச்சரியம் அடைந்ததாக, மலேரியா அட்லஸ் திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் .
இதனை நுளம்பு வலைகளை பயன்படுத்துதல் போன்ற மிகவும் எளிமையான நுட்பங்களின் மூலம் செய்ய முடியும் என்று, இது தொடர்பான அறிக்கை பரிந்துரைக்கிறத
!!!!!!!!!!!!!
sports
பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியாவுக்கு வெளியே நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை, தென்னாபிரிக்காவில் நடத்துவது என்று தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாக சபை உறுதி செய்துள்ளது .
முன்னர் தீர்மானிக்கப்பட்ட திகதியில் இருந்து ஒரு வாரகாலம் தாமதமாக ஏப்ரல் 10ஆம் திகதி முதலாவது ஆட்டம் ஆரம்பமாகும் என்றும், அது ஜொஹன்னர்ஸ்பேர்க்கில் நடக்கும் என்றும் பிபிசிக்கு கூறப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் நடக்கும் காலகட்டத்திலேயே இந்தச் சுற்றுப் போட்டியும் நடக்கவிருந்ததால் , அதற்கான பாதுகாப்பு அங்கீகாரத்தை பெற போட்டிகளை நடத்துபவர்கள் தவறிவிட்டதால், இதனை இங்கிலாந்தில் நடத்தலாமா என்றும் முதலில் ஆராயப்பட்டது.
!!!!!!!!!!!!!!!
2014 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ரஷ்யாவில் திட்டமிட்டபடி நடத்தப்படும் என அந்நாட்டு அதிபர் டிமிட்ரி மெட்விதேவ் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரச் சரிவால் 2014 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை ரஷ்யா நடத்துமா என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மெட்விதேவ் இதனைக் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் கருங்கடல் கரையில் உள்ள சோச்சி (Sochi) பகுதியில் 2014 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்காக 12 பில்லியன் டாலர்களை செலவழிக்க ரஷ்யாவும் முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமாக ஒலிம்பிக் போட்டிகளுக்காக செலவிடத் திட்டமிட்டிருந்த தொகையை விடக் குறைவான அளவே முதலீடு செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் மெட்விடேவ், பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருந்தாலும், ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும், நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை எந்தக் குறைப்பும் இருக்காது என்றும் உறுதிபடத் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தென் ஆப்ரிக்காஆஸ்திரேலிய அணிகளிடையே கேப்டவுனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியுடன் , மே‌ற்‌கி‌ந்‌தியதீவை சே‌ர்‌ந்த நடுவர் ஸ்டீவ் (62) பக்னர் ஓய்வு பெற்றார்.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், தென் ஆப்ரிக்க அணி இன்னிங்ஸ், 20 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்த போட்டியுடன் நடுவர் ஸ்டீவ் பக்னர் ஓய்வு பெற்றார் . அவர் இதுவரை 128 டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது .

போட்டி முடிந்ததும், ஆடுகளத்தில் மண்டியிட்டு அமர்ந்து பிரார்த்தனை செய்த பின்னர் இரு அணி வீரர்கள், ரசிகர்களிடம் இருந்து அவர் கண்ணீர் மல்க விடைபெற்றார் .
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஒரு வீரர் அவுட்டாஇல்லையா? என்பதை தீர்மானிக்க டிவி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் தவறு இல்லை. எனினும், ஆடுகளத்தில் இருக்கும் நடுவர்களின் முடிவுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.

3வது நடுவரின் உதவியை கேட்கும் உரிமையை வீரர்களுக்கு கொடுப்பதை விட களத்தில் உள்ள நடுவர்களுக்கே வழங்க வேண்டும். அவர்களுக்குதான் எந்த முடிவு சந்தேகமானது என்பதை சரியாகக் கணிக்க முடியும்’ என்றார்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இ‌ந்‌திய ந‌ட்ச‌த்‌திரவீரா‌ங்கனை சா‌னியாமி‌ர்சா, ச‌ர்வதேச பெ‌‌ண்க‌ள் டெ‌ன்‌னி‌ஸ் ஒ‌ன்றைய‌ர் தரவ‌ரிசை‌யி‌ல்மீ‌ண்டு‌ம் 100 வது இட‌த்து‌க்கு த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

கட‌ந்த வார‌ம் 87வது இட‌த்‌தி‌ல் இரு‌ந்த சா‌னியா, இ‌ன்டிய‌ன்வெ‌ல்‌ஸ் போ‌ட்டி‌யி‌ல் 2 வது சு‌ற்றுட‌ன் வெ‌‌ளியே‌றியதா‌ல் தரவ‌ரிசை‌யி‌ல்பி‌ன்னடைவு ஏ‌ற்ப‌ட்டது.

அவ‌ர் 646 பு‌ள்‌ளிகளுட‌ன் 100வது இட‌த்‌தி‌‌ல் உ‌ள்ளா‌ர்.இதேபோ‌ல் இர‌ட்டைய‌ர் தர‌வ‌ரிசை‌யி‌ல் 16வது இட‌ங்களை இழ‌ந்து 87வது இட‌த்து‌க்கு செ‌ன்று‌‌ள்ளா‌ர்.

ஆ‌ண்க‌ள் ஒ‌ன்றைபி‌ரி‌வி‌ல் இ‌ந்‌தியவீர‌ர் சோ‌ம்தே‌வ் தே‌வ்வ‌ர்ம‌ன் தொட‌ர்‌ந்து 150வது இட‌த்‌திலேயேநீடி‌க்‌கிறா‌ர்.

இர‌ட்டைய‌ர் தரவ‌ரிசை‌யி‌ல் இ‌ந்‌தியவீர‌ர்க‌ள்லியா‌ண்ட‌ர் பய‌ஸ், மகே‌ஷ்பூப‌தி முறையே 5, 8வது இட‌‌ங்க‌ளி‌ல் உ‌ள்ளன‌ர்
!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் தென் ஆப்ரிக்கா அணி 2 ஆவது இடத்திற்கு முன்னேறியது. இந்தியா 3 வது இடத்திற்குத் தள்ளப்பட்டது .

அண்மையில் கேப்டவுனில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 119 புள்ளிகளைக் குவித்து தென் ஆப்ரிக்கா 2 வது இடத்திற்கு முன்னேறியது . ஏற்கனவே 2வது இடத்தில் இருந்த, இந்தியா 118 புள்ளிகளுடன் 3 வது இடத்திற்குத் தள்ளப்பட்டது .

இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் 75 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை இந்தியா இழக்க நேரிட்டுள்ளது. டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 128 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் 122 புள்ளிகளைப் பெற்று இந்திய அணி தொடர்ந்து 3 வது இடத்தில் உள்ளது. 124 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2 வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள தென் ஆப்ரிக்கா 125 புள்ளிகளைப் பெற்றுள்ளது .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1 euro = 153.67sl / 68.53in
1us $, = 114.10sl / 50.88 in
1swiss fr =100.85sl / 44.97in
1uk pound = 167.03sl /74.49in
1saudi riyal =30.42sl /13.56in

Leave a Reply

Your email address will not be published.