அடுத்த மாதம் பிரிட்டனில் சந்திக்கவுள்ள மன்மோகன்-ஒபாமா இலங்கை நிலைவரம் குறித்து ஆராயும் சாத்தியம்

பிரிட்டனில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் சந்திக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இலங்கை உட்பட்ட தெற்காசிய பிராந்திய நிலைவரங்கள் தொடர்பாக பேசும் சாத்தியம் உள்ளது.

ஜி 20 உச்சி மாநாட்டுக்கு புறம்பாக இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேசவிருப்பதாகவும் கல்வித்துறை பங்குடைமை, உயர் தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் என்பன இவ்விருவரின் பேச்சுக்களில் முன்னுரிமை வகிக்கும் என்றும் அகில இந்திய வானொலி செய்திச் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

அத்துடன் உலக பொருளாதார நெருக்கடியால் தொழில் வாய்ப்புகளை இழப்போருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றியும் ஆராயப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு ஜி 20 நாடுகள் அதிகளவு நிதி ஒதுக்கீட்டை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

அதேசமயம், இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் நிலைவரம் குறித்து இரு தலைவர்களும் ஆராய்வார்களெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.