முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஸ்ரீ.சு.க யில் வகித்த இறுதிப் பதவியும் பறி போயுள்ளது

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமர்களின் புதல்வியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த
இறுதிப் பதவியும் பறிபோயுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பண்டாரநாயக்க குடும்பத்தின் பலக் கோட்டையாக கருதப்பட்ட அத்தனகல்ல ருவான்புர தொகுதி அமைப்பாளர் பதவியையும் சந்திரிகா இழந்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் முன்னோடியாக சந்திரிகாவின் தந்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க கருதப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.

கடந்த 18 வருட காலமாக ருவன்புர தொகுதி அமைப்பாளர் பதவியினை சந்திரிகா வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.