அரசாங்கத்திலிருந்து தம்மையும் கட்சி உறுப்பினர்களையும் விரட்ட கருணா முயற்சி பிள்ளையான்

அரசாங்கத்திலிருந்து தம்மையும் தமது கட்சி உறுப்பினர்களையும் விரட்டியடிக்க அமைச்சர் கருணா சதித்திட்டம் தீட்டி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் மீண்டும் ஆயுத கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவர் கருணா என்பதனை எவரும் மறந்துவிடக் கூடாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது பிள்ளையான் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை ஓரங்கட்டும் நடவடிக்கைகளில் கருணா தீவிரம் காட்டி வருவதாக பிள்ளையான் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலைமை கிழக்கில் துணை இராணுவக் குழுக்களுக்கு இடையில் மீண்டுமொரு ஆயுத போராட்டம் வெடிக்கக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.