அரசாங்கத்தின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது: கெயார் நிறுவனம்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் செயற்படுவதாக அரசாங்கத்தினால் தமது அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றதென கெயார் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் மோதல் தவிர்ப்பு வலயத்தில் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்த தமது நிறுவன பணியாளர் சபேசன் குறித்து இலங்கை அரசாங்கத்தின் விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது நிறுவனம் மனிதாபிமான சேவைகளை வழங்குவதனை முதன்மை நோக்காகக் கொண்டு இயங்கி வருவதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் கெயார் நிறுவனத்தின் இலங்கைப் பணிப்பாளர் நிக் ஒஸ்போர்ன் தெரிவித்துள்ளார்.

கெயார் நிறுவனம் 1950ம் ஆண்டு முதல் இலங்கையில் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கெயார் தலைமையகப் பேச்சாளர் மெலானி புஷரூக்ஸ் தெரிவித்துள்ளார்

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.