பிரதமர் வேட்பாளரா? சோனியா மறுப்பு

காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகும் எண்ணம் ஏதும் தமக்கு இல்லை என்று கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறியிருக்கிறார்.

பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிக்கு வருவதில், கடந்த 2004ஆம் ஆண்டில் தாம் எடுத்த முடிவில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் சோனியா கூறினார்.

பிரதமர் பதவி குறித்த தமது நிலைப்பாட்டை தாம் ஏற்கனவே தெளிவாக விளக்கி இருப்பதாகவும், அதில் எவ்வித மாறுதலும் இல்லை என்று செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் கூறினார்.

கடந்த 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட போதிலும், பிரதமர் பதவியை ஏற்க சோனியா மறுத்து விட்டார். மாறாக பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை நியமித்து பதவியேற்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேர்தல் அறிக்கையை காண்பித்த சோனியா, அதன் அட்டையில் இடம்பெற்றுள்ள மன்மோகன் சிங்கின் படத்தைக் காட்டினார்.

Source & Thanks : tamil.webdunia

Leave a Reply

Your email address will not be published.