‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (24.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

இலங்கை இராணுவத்தினர் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சுக்கள் ஆர்பிஜி மற்றும் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்களினால் 19 சிறுவர்கள் உள்ளிட்ட 96 பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் வைத்து கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஏற்கனவே ஞாயிற்றுகிழமை 7 சிறுவர்கள் உள்ளிட்ட 32 பேர் கொல்லப்பட்டனர். உள்ளுர் தொண்டு பணியாளர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளின்
தகவல்களின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 160 பொது மக்கள், புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் மோட்டார்
தாக்குதல் முன்னெடுப்பினால் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு வலயத்தினுள் அதிகரித்த அளவில் இராணுவத்தினரால் பொதுமக்கள் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் புதுமாத்தளன் வைத்திய சாலைக்கு அருகில் 9 பொது மக்கள் கொல்லப்பட்டனர். 400 மீற்றருக்கு அப்பால் இருந்து இந்த வைத்தியசாலைக்கு இராணுவத்தினர் எறிகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். பொக்கணை பிரதேசத்தில் வீழ்ந்த 3 எறிகணைகளில் 16 பொதுக்கள் கொல்லப்பட்டனர்.
மாத்தளன் பிரதேத்தில் இந்த தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்த அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தெற்காசியாவில் அதிகரித்து வரும் வன்முறைகள் ஊடகவியலாளர்களை ஆபத்தில் தள்ளியிருப்பதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டுள்ள ஊடகவியலாளர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது .

இலங்கையில் ஊடகவியலாளர்கள் அதிகம் பாதிப்புக்கு இலக்காகி உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 10 வருடங்களில் இலங்கையில் 9 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான வழக்குகள் இதுவரை தீர்க்கப்படவில்லை.

அதேவேளை ஈராக், சியாராலியோன் மற்றும் சோமாலியா ஆகியவையும் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை மேற்கொள்ள மிகவும் ஆபத்தான நாடுகளாக உள்ளன. இந்த நாடுகள் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதில் தோல்வியடைந்துள்ளன .

1998 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ரீதியாக 523 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு பட்டியலிட்டுள்ள 14 நாடுகளில் ஊடகவியலார்களுக்கு எதிரான கொலைகள் வழக்குகள் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலையில் உணவு பொருள் நஞ்சானதன் காரணமாக பாடசாலை சிறுவர்கள் உட்பட்ட சுமார் 50 பேர் வரை திருகோணமலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை திருகோணமலை வைத்தியசாலை தரப்பு உறுதிசெய்துள்ளது.

இதில் மாணவர்கள் பல பாடசாலைகளையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் வடக்கில் இடம்பெறும் போர் காரணமாக மோதல் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் முக்கிய செனட்டர்களில் ஒருவரான ஜோன் கெரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாதுகாப்பு வலயங்களில் பொதுமக்கள் தாக்குதல்களுக்கு உள்ளாவது மற்றும் கொல்லப்படுவது பெரும் கவலையளிப்பதாக உள்ளது.

பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

சிவிலியன் நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல் மேற்கொள்வதாக வெளியாகும் செய்திகள் பெரும் வேதனையளிக்கின்றது. அரசாங்கம் யுத்த பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களையும், தொண்டு நிறுவன ஊழியர்களையும் அனுமதிக்காமை ஏற்றுக்கொள்ள முடியாது.

படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போராட்டத்தின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளனர் . இராணுவ நடவடிக்கைகள் முடிவுற்றதன் பின்னர், நாட்டில் விரைவில் அனைத்து இன சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான தீர்வுத் திட்டமொன்றை மஹிந்த அரசாங்கம் முன்வைக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன். இலங்கையின் நட்புறவு நாடு என்ற ரீதியில் வடக்கு நிலவரங்களை நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.” என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் உள்ள தனது சகோதரன் குறித்த தகவல் தெரியாத நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கண்டி வீதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துரைராசா கணேஷ் (வயது 57) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார் .

வன்னியில் மத போதகருக்கான கல்வி கற்றுவரும் தனது சகோதரர் தொடர்பில் எந்தவிதமான தகவலும் இல்லாத நிலையில் மன உளைச்சலுடன் இவர் காணப்பட்டதாகவும் சகோதரனைப் பற்றியே பேசி கொண்டிருந்ததாகவும் மரண விசாரணையில் அவர் மனைவி தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து இருப்பதற்கு நேற்று திங்கட்கிழமை கூடிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது . அத்துடன் கட்சிக்கு சிரேஷ்ட தலைவர் பதவி ஒன்று அவசியம் இல்லை என்றும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பரபரப்பான சூழலில் நேற்றைய தினம் கட்சியின் செயற்குழு கூட்டம் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் யாப்பை திருத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு காமினி ஜயவிக்ரம பெரேரா தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த குழுவினர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

எனினும் கட்சியின் யாப்பை தற்போதைய நிலைமையில் திருத்துவதில்லை என்றும் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என்றும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த யோசனைக்கு செயற்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கையில்; பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரெரா தலைமையில் கடந்த வாரம் நியமிக்கப்பட்ட குழுவினர் தமது அறிக்கையை செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.
அதன்படி எதிர்காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கட்சியில் பல மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து தலைவராக நீடிக்கவேண்டும் என்று பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதிகாரங்கள் ஓர் இடத்தில் குவிந்து இருக்காமல் எதிர்காலத்தில் தலைவருக்கும் பிரதி தலைவருக்கும் அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு செயற்படுவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, செயற்குழு கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் பெயர் குறிப்பிடவிரும்பாத மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் தகவல் தருகையில்,

செயற்குழு கூட்டத்தில் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். பெரும்பான்மையான செயற்குழு உறுப்பினர்களும் அவர் தொடர்ந்து தலைவராக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். அத்துடன் இரகசிய தேர்தல் நடத்தப்படக்கூடாது என்றும் தெரிவித்தனர். அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் சிலர் கருத்து வெளியிட்டனர். ஆனால் இறுதியில் ரணில் விக்ரமசிங்க தலைவராக நீடிக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் ஏனைய விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் தலைமை பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகவேண்டும் என பல எம்.பி. க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கட்சிக்குள் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் புதிய சிரேஷ்ட தலைவர் பதவி ஒன்றை உருவாக்கவேண்டும் என்றும் அது தொடர்பில் ஆராய எட்டு எம்.பி.க்கள் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப்படவேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டதையடுத்து காமினி ஜயவிக்ரம பெரேரா தலைமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. குறித்த விசேட குழுவின் அறிக்கையை ஆராயும் பொருட்டே நேற்றைய செயற்குழுகூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வேறு கட்சிகளில் இணைந்து கொள்பவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

“மாகாண சபை நிர்வாகம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் தற்போது உள்ளது. மாகாண சபைக்கு அதிகாரம் வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டியது தனி நபர் அல்ல. அதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை அக்கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி. அக்கட்சிக்கென்று ஒரு கொள்கை உண்டு. அந்தக் கொள்கையின் அடிப்படையில் தான் அது செயல்படும்.

அண்மையில் சில உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்துள்ளதாக அறிய முடிகின்றது. அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி.)கட்சிக்குள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளதாகத் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது .
இவ்வாறு கட்சிக்குள் ஊடுருவியுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கண்டு பிடிக்கும் நோக்கில் விசேட விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்சித் தொண்டர்களைப் போன்று இணைந்து கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்த விடுதலைப் புலிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் உட்பட உலக நாடுகள் பாரிய ஒத்துழைப்பினை வழங்கிவருகின்றன. பயங்கரவாதத்தினை ஒழிக்க உதவும் உலக நாடுகள் எமது நாட்டின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்பதுடன் உண்மையான நண்பர்கள் யார் என்பதை நாம் தற்போது உணர்ந்துள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ்தேவி மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிக்கவே பயங்கரவாதிகள் முற்பட்டனர். யாழ்தேவி சேவையிலிருந்த காலத்தில் வடபுலத்தின் உறவும் அதன் தொடர்பும் மிகவும் நெருக்கமாக இருந்தது. அந்த உறவை அன்று போல் தொடர்வதற்கே தென்பகுதி மக்கள் விரும்புகின்றனர். யாழ்தேவி சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது வடக்குக்கு மீண்டும் வசந்தத்தை கொண்டுவரும் என்றும் அவர் கூறினார் . யாழ்தேவி ரயில் சேவையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைத் திட்டம் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சீனாவுக்கு சிறீலங்கா அரசு தனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளது. .நாவில் சிறீலங்காவின் மனித உரிமை விடயங்களை விவாதத்துக்கு எடுக்காது தடுத்து வருவதற்கே இவ் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவுக்கான புதிய சீனாத்தூதவர் ஜப்பிங் ஜானை (Xiuping Yang) சந்தித்த சிறீலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தமது அரசின் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
முன்னரும் இது போன்று சிறீலங்காவின் விவகாரத்தினை பாதுகாப்புச் சபைக்கு கொண்டு வர விடாமல் தடுத்த ரஸ்யாவுக்கும் சிறீலங்கா நன்றி தெரிவித்திருந்தது.
இதேவேளை, சரிந்துள்ள சிறீலங்காவின் சுற்றுலாவை தூக்கி நிறுத்தவும் சீனாவிடம் சிறீலங்கா கையேந்தியுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு சிறீலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொறகொட சீனா சென்றுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறீலங்கா படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி நகரில் உள்ள மருத்துமனைக்கு தென்னிலங்கையில் இருந்து 25 சிங்கள தாதியரை அனுப்ப சிறீலங்கா அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாதியர் பயிற்சிக்கல்லூரியில் கற்று முடித்த பயிற்சி தாதியரை அங்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதில் 25 பேர் தெரிவு செய்யப்பட்டு அவசர படைத்துறைப் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழர் தாயகத்தில் முன்னய காலங்களில் சிங்கள குடியிருப்புக்கான அத்திவாரங்கள் இடப்பட்டதும், அதன் மூலம் தமிழ் மக்கள் நிரந்தர அகதியாக்கப்பட்டுள்ள படிப்பினையின் அடிப்படையில் அரசின் நடவடிக்கை மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மருத்துவமனையின் ஒரு தொகுதியை வன்னியில் படையினரிடம் தஞ்சம் கோரும் பொதுமக்களிலுள்ள இளையோருக்கான வதை முகாமாகவும படையினர் பயன்படுத்தி வருவதாக, முன்னர் தகவல்கள் வெளியாகியிந்தமை நினைவூட்டத்தக்கத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புத்தளம் மற்றும் கொழும்பில் கடந்த சில நாட்களில் கடத்தப்பட்ட சிலரில் மூவர் தாக்கப்பட்டு கண்கள் கட்டப்பட்ட நிலையில் நேற்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் புத்தளம் மதுரங்குளியில் கடத்தப்பட்ட எஸ்.எம். ஜலால் என்பவர் ஆயுததாரிகள் சிலரால் கடந்த சனிக்கிழமை 10:00 மணியளவில் கைவிலங்கிடப்பட்டு கடத்தப்பட்டு, பின்னர் இடம் ஒன்றில் வைத்து துப்பாக்கி முனையில் விசாரிக்கப்பட்டு கண்கள் கட்டப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டார
கொழும்பு புறநகர் வத்தளையில் கடத்தப்பட்ட 43 அகவையுடைய அழகன் ஆறுமுகம் மற்றும் 23 அகவையுடைய சிறிஸ்தோப்பர் பெர்னார்ண்டோ ஆகியயோர் தாக்கப்பட்டு கண்கள் கட்டப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் , இவ்வாறு கடத்தப்பட்டவர்களின் நிலை பற்றி எதுவும் தெரியவரவில்லை எனவும், கடத்தல் மற்றும் காணாமல் போதலைக்கண்காணிக்கும் அமைப்பு அறிக்கை வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் அராஜகச் செயல்களுக்கு எதிராக வலிந்து குரல் கொடுக்கக் கூடிய பலமான எதிர்க்கட்சியொன்று
ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பலவீனம் காரணமாக அரசாங்கம் பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்ற முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் பல்வேறு புதிய சட்ட மூலங்களை நிறைவேற்ற விளைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தமது கடமைகளை சரிவர மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசல்களின் காரணமாக நாட்டின் பிரதான கட்சியொன்று ஆற்ற வேண்டிய கடமைகளிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!!!
அண்மையில் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சபேசன் என்ற கெயார் நிறுவன ஊழியர் விடுதலைப் புலி உறுப்பினர் என பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், கெயர் எனப்படும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் ஊழியர்களே பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை படுகொலை செய்ய முயற்சி மேற்கொண்டதாக புலனாய்வுத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.
கிளி மற்றும் கண்ணன் என்ற இரு கெயார் நிறுவன ஊழியர்களே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அதி சக்தி வாய்ந்த சீ-2 ரக வெடிபொருட்களுடன் கூடிய பாரிய சரக்கு ஊர்தியொன்றை குறித்த இருவரும் வன்னியிலிருந்து கொழும்பிற்கு எடுத்து வந்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது .
கெயார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்திலேயே குறித்த வெடிபொருட்கள் கடத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காங்கேசன்துறைக்கும், திருகோண மலைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று இடம்பெறும் என்று யாழ். சிவில் நிர்வாக அதிகாரி இந்தச் சேவையில் பயணம் செய்ய பய ணச் சீட்டுப் பெற்றவர்களை ரயில் நிலையப் பகுதிக்கு வரும்படி கேட்கப் பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பை அண்மித்ததாக இலங்கையின் தென்பகுதியையும் உள்ளடக்கிய பாரிய தமிழ் ஈழ இராச்சியத்தை உருவாக்கும் நோக்கத்தை விடுதலைப்புலிகள் கொண்டிருந்ததாக பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
பாரியளவில் நிர்மாணிக்கப்பட்ட கடற்படை, விமானப்படை, தற்கொலைப்படையினரை உள்ளடக்கிய தரைப்படை என்பன புலிகளின் இந்த நோக்கத்தை வெளிப்படுத்துவதாக கோதாபய கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் இராணுவ தளபாடங்கள், பயிற்சிக்களம் என்பனவற்றை நாம் பார்த்தபோது பாரிய ஈழ இராச்சியத்தை உருவாக்க அவர்கள் நோக்கம் கொண்டிருந்தது தெளிவாகத் தென்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அந்த இடங்களிலிருந்து பெற்றுக்கொண்ட வரைபடங்கள் இந்த விடயத்தை உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் நீர்கொழும்பு முதல் யால வரை அநுராதபுரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளை உள்ளடக்கி ஈழத்தை ஸ்தாபிக்க எதிர்பார்த்திருந்ததாகவும் கோதாபய கூறியுள்ளார்.
கொழும்புக்கு வடக்கே 40 கி.மீ. தொலைவில் நீர்கொழும்பு உள்ளது. யால தென்னிலங்கையில் அமைந்துள்ளது.
இந்த மனிதாபிமான நடவடிக்கையை நாம் ஆரம்பித்திராவிடின் என்ன பதில் நடவடிக்கையை நாம் கொண்டிருப்போம், என்பது தெளிவானது என்றும் அவர் குறிப்பிட்டதாக பி.ரி. . செய்திச்சேவை தெரிவித்தத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைக்கான தற்போதய அமெரிக்க தூதுவர் ரொபேர்டோ பிலக் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளராக நியமிக்கப்படவிருப்பதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஊடக அறிக்கைக்கு அமைய அவருக்கான நியமன பரிந்துரை விரவில் உத்தியோக பூர்மாக அறிக்கப்படும் என தெரிய வருகிறது. இது உறுதி செய்யப்பட்டால் தற்போதய உதவி செயலாளர் ரிச்சட் பௌச்சரின் இடத்திற்கு பிரதியீடு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொபேர்ட்டோ பிலக் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக கடமையாற்றுவதற்கு முன்னர் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிராதான துணை செயலாளராக கடந்த 2003 – 2006 காலப்பகுதிகளில் செயற்பட்டு வந்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!
கச்சதீவு விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லை என தமிழக மாநில முதல்வர் கலைஞர் கருணாநிதி அறைகூவல் விடுத்துள்ளார் .
இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக கச்சதீவை புனிதப் பிரதேசமாக அறிவித்து செயற்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜெயலலிதா ஜெயராம் அண்மையில் தமிழக அரசு மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கு
பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவை புனிதப் பிரதேசமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் நகர அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில்
தெரிவித்திருந்தார்.
அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் வாய் தவறி இதனைத் தெரிவித்திருக்கலாம் எனவும், அந்தக் கூற்று உண்மையானதென்றால் அதற்கு எதிராக
கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கை கழுவிவிட்டார் கருணாநிதி என்று குற்றம் சாட்டியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது தொடர்பாக ராமதாஸ் அவர்கள் நேற்று திங்கட்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இலங்கை இனப் படுகொலைப் போரைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்ற உலகத் தமிழர்களின் குரல் இப்போதுதான் உலக நாடுகளின் காதுகளில் எட்டத் தொடங்கி இருக்கிறது.
அதன் விளைவாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் போரை நிறுத்தும்படி ஓங்கி குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றன.
வெறும் மனிதாபிமான அடிப்படையில் , உலக நாடுகள் செயல்படத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதில் உணர்வுபூர்வமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அரசு இதுவரை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கும் கடமையைத் தாமதமின்றி இந்திய அரசு ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், “”இலங்கை ஓர் இறையாண்மை மிக்க நாடு, அப்படி இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் மீது ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் அழுத்தத்தைக் கொடுக்க முடியுமே தவிர அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாதுஎன்ற ரீதியில் தமிழக முதல்வர் கூறியிருப்பது ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
இதற்கு மேல் எதுவும் செய்வதற்கில்லை என்று இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் தமிழக அரசும், முதல்வரும் கை கழுவி விட்டனர் என்பதையே முதல்வர் கருணாநிதியின் கருத்து எடுத்துக் காட்டுகிறது.
இறையாண்மை மிக்க அண்டை நாட்டில் நடைபெறும் பயங்கர நிகழ்வுகளில், இந்தியா ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது என்ற தவறான கருத்து இதுவரை தில்லியில்தான் இருந்தது.
இப்போது, சென்னைக்கும் அது பரவிவிட்டது என்பதையே முதல்வரின் கருத்து எடுத்துக் காட்டுகிறது . ஒரு நாட்டின் இறையாண்மை என்பதில், அந்த நாட்டில் வாழும் எல்லா தரப்பு மக்களையும், பாதுகாப்பதற்கான முதன்மையான பொறுப்பு அடங்கி இருக்கிறது.
இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி இருக்கிறது . ஒரு நாட்டின் அரசு திட்டமிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாக, இனப் படுகொலை செய்யும் நோக்கில் அல்லது வேறு நோக்கில் பெருமளவு உயிரிழப்பு ஏற்படும்போது அல்லது ஏற்படலாம் என்று சந்தேகப்படும்போது, இதர நாடுகளின் போர்ப் படையின் தலையீடும் அவசியமாகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை வகுத்துத் தந்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உள்நாட்டுப் போர், கலகம், அடக்குமுறை அல்லது அரசின் தோல்வியின் விளைவாக மக்கள் துன்பப்பட்டால், சம்பந்தப்பட்ட நாடு, அதைத் தடுக்க அல்லது தவிர்க்க விரும்பவில்லையானால் அல்லது இயலவில்லையானால் அங்கு தலையிடாமைக் கொள்கை என்பது பாதுகாப்பதற்கான பன்னாட்டுப் பொறுப்புக்கு வழிவிட்டு விலகுகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் இதுவரையில் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நாடுகள் தலையிட்டு இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றன.
இலங்கை அரசின் பொருளாதாரத் தடையினால், ஈழத் தமிழர்கள் பட்டினியால் வாடியபோது, இந்தியா தனது போர் விமானங்களை அனுப்பி, உணவுப் பொருள்களை விநியோகம் செய்திருக்கிறது.
ஈழப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. அவையெல்லாம் , இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான். அப்போதெல்லாம், இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு என்று இந்தியா கருதவில்லை.
ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தியா அப்போது செயல்பட்டது . அத்தகைய உணர்வும், துணிச்சலும் இப்போது இந்திய அரசுக்கு வேண்டும்.
அத்தகைய உணர்வை இந்திய அரசு பெறவும், துணிச்சலோடு செயல்படவும் தமிழக அரசும் , முதல்வரும் குரல் கொடுக்க வேண்டும்.
போரை நிறுத்தாவிட்டால் காமன்வெல்த் போன்ற அமைப்புகளில் இருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும் என்ற குரல் இப்போது பிரிட்டனில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தியா துணை நிற்க வேண்டும்என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைக்கு இந்தியா உதவுகிறது. இந்திய கப்பலில், இந்தியா இராணுவத்தினர் 5ஆயிரம் பேர் இலங்கை சென்றுள்ளனர்.
இந்த துரோகத்திற்கு நாம் பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா வைகோ தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களம் பகுதியை சேர்ந்த தேமுதிக பிரமுகர் பாலசுந்தரம் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தார்.

பாலசுந்தரத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். பாலசுந்தரத்திடம் மனைவி செல்வத்திற்கு 10ஆயிரம் பணம் கொடுத்தார்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பண உதவிகள் வரும் என வைகோ தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம், இலங்கையில் வன்னிப் பகுதியில் ‘’ சிறுவர்கள், பெண்கள் , கர்ப்பிணிகள் என்று எல்லோரையும் கொன்று குவிக்கிறது சிங்கள இராணுவம்.
உலக நாடுகள் எல்லாம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறது. அப்படி இருந்தும் இலங்கை அரசு சம்மதிக்க மறுக்கிறது.
இப்படிப்பட்ட இலங்கைக்கு இந்தியா உதவுகிறது. இந்திய கப்பலில், இந்தியா இராணுவத்தினர் 5ஆயிரம் பேர் இலங்கை சென்றுள்ளனர்.
இந்த துரோகத்திற்கு நாம் நல்ல பாடம் புகட்டியே ஆகவேண்டும்’’ என்று வைகோ ஆவேசமாகத் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவரும், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி இன்று வெளியிடுகிறார்.

மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, அர்ஜுன் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி அடங்கிய குழுவினர் இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சாமான்ய மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் இடம் பெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களும் இந்த அறிக்கையில் முக்கிய அம்சமாக இருக்கும் என அந்த தகவல்கள் கூறுகின்றன.
!!!!!!!!!!!!!!!!!
முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளன்று நாடு முழுவதும் சுமார் 100 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்தீஷ்கரில் 12 பேரும், உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் தலா 8 பேரும் நேற்று மனுதாக்கல் செய்துள்ளனர்.

கேரளாவில் 7 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதர மாநிலங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 50 எட்டியுள்ளன.

முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 124 மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாளாகும்.

முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்காக ஆந்திராவில் 154 தொகுதிகளிலும், ஒரிசாவில் 70 தொகுதிகளிலும் நேற்று தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

!!!!!!!!!!!!
தி.மு.. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அந்த கட்சியின் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று மாலையில் பா... ‌நிறுவன‌ர் ராமதாசை சந்தித்து பேசியதாகவும், நீண்ட நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தெரிகிறது.

26ஆ‌ம் தேதி பொதுக்குழுவுக்கு பிறகு அன்று மாலை 5 மணிக்கு ஒரு கூட்டணியை வழிநடத்தும் தலைவரை சந்திக்க பா... தலைவர் ராமதாஸ் நேரம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!

திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பாமகவுக்கு இடமில்லை என்பதை முதலமைச்சர் கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளார். சென்னையில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார். .

இதிலிருந்து அந்த அணியில் பாமகவுக்கு இடமில்லை என்பதை அவர் சூசகமாக கூறியுள்ளார் . ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு இன்னும் ஓரிரு நாளில் முடிவடைந்து விடும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலுவும், காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவர் டி.சுதர்சனமும் தம்மை சந்தித்து பேசிய பின்னர் கருணாநிதி அறிவித்தார்.

வேறு ஏதேனும் கட்சிகள் உங்கள் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? அந்த கட்சிகள் சேர்க்கப்படுமா என்று கேட்டதற்கு, அப்படி ஏதாவது கட்சி கூட்டணியில் சேர்ந்தால் அது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக நாளை மறுநாள் பொதுக்குழுவில் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிட உள்ள நிலையில் கருணாநிதி இவ்வாறு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

!!!!!!!!!!!!!!!!!!!!!

வரு‌ம் ம‌க்களவை‌த் தே‌ர்‌த‌லி‌ல் பா.ஜனதாவுட‌ன் அ‌கில இ‌ந்‌திய சம‌த்துவ ம‌க்க‌ள் க‌ட்‌சி கூ‌ட்ட‌ணி வை‌த்து‌ போ‌ட்டி‌யிடு‌கிறது எ‌ன்று‌ம், நெ‌ல்லை‌யி‌ல் தானு‌ம், ‌சிவ‌க‌ங்கை‌யி‌ல் ரா‌திகாவு‌ம் போ‌ட்டி‌யிடுவதாகவும் அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் சர‌த்குமா‌ர் தெரிவித்துள்ளார்.

பா .ஜனதாவிட‌ம் 15 இட‌ங்களை கே‌ட்டு‌ள்ளதாகவு‌ம், தொகு‌தி ப‌ங்‌கீடு தொட‌ர்பாக தொட‌ர்‌ந்து பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்‌தி வரு‌வதாகவு‌ம் சர‌த்குமா‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அத்துடன் வரு‌ம் 5 ‌ம் தே‌தி முத‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம்தாம் பிரசார‌ம் மே‌ற்கொ‌ள்ள இரு‌ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!*
A¡X Ck§V NUjÕY UdLs Lh£«u ùLôsûL TWl×f ùNVXo UÚÕ AZLoWôw ¿dLlThPûRd Li¥jÕ £YLeûL UôYhPf ùNVXo UÝúYk§ Utßm ¨oYô¡Ls áiúPôÓ Wô´SôUô ùNnR]o.
§ÚlTjç¬p Lh£«u UôYhP AÛYXLj§p §eLs¡ZûU SûPùTt\ áhPj§p Ju±V, SLW, ¡û[ ¨oYô¡Ls, UôYhPf ùNVXo EsTP Aû]YÚm Wô´SôUô ùNnYRôL A±®jR]o.
úUÛm 10 UôYhPf ùNVXoLs Wô´SôUô ùNnV Es[]o G] UÝúYk§ á±]ôo.
!!!!!!!!!!!!
ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபால் உள்ளிட்ட 9 பேருக்கு பூந்தமல்லி கோர்ட் தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதித்தது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர் 9 பேரும். ஆனால் அரசுத் தரப்பில், இவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்ட்டது.

இதைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம் சமீபத்தில் 9 பேரின் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக உயர்த்தி அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் 9 பேருக்கும் அளிக்கப்பட்டிருந்த ஜாமீனும் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து ராஜகோபால் உள்ளிட்ட 9 பேரும் சென்னை அமர்வு நீதிமன்றம் முன்பு சரணடைந்தனர். அவர்களை புழல் சிறையில்அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
!!!!!!!!!!!!!!!!!
world
2008 Mk; Mz;L cyf uPjpaahf 2390 NgUf;F kuzjz;lid toq;fg;gl;bUg;gjhf rHtNjr ePjpks;w mwpf;if njuptpj;Js;sJ.2390Nguppy; 1718 NgUf;fhd kuzjz;liz rPdhtpy; epiwNtw;wg;gl;Ls;sJ. mLj;jgbahf ,uhdpy; 508 NgUf;Fk; rTjpmNugpahtpy; 102 NgUf;Fk; kuzjz;liz tOq;fg;gl;Ls;sJ.Mdhy; fle;j tUlk; 52 ehLfspy; 8864 NgUf;F kuzjz;liz toq;fg;gl;lNghJk; 2390 NgUf;F khj;jpuk; kuzjz;lid toq;fg;gl;Ls;sJ
!!!!!!!!!!
ஈராக்கில்eilngw;w kuztPL xd;wpy; வீட்டில் மனிதகுண்டு தாக்குதல் elj;jg;gl;ljpy;; 25 பேர் பலி ahdhh;fs;.
ஈராக்கில் குர்தீஸ் முஸ்லிம்களுக்கும் சன்னி முஸ்லிம்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. ஒருவர் மீது ஒருவர் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி வருகின்றனர் . ஜலவா என்ற இடத்தில் குர்தீஸ் இனத்தை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார் .
இதற்கான இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஏராளமானோர் கூடி இருந்தனர் . அப்போது உடலில் வெடிகுண்டை கட்டி வந்த தீவிரவாதி ஒருவன் கூட்டத்துக்குள் புகுந்து வெடிக்க செய்தான்.
இதில் 25 பேர் உடல் சிதறி பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர். மனித குண்டாக வந்தவன் சன்னி முஸ்லிம் தீவிரவாதியாக இருக்கலாம் என்று கருதுப்படுகிறது.
இதேபோல அபு சஷாய்ப் என்ற இடத்தில் கார் குண்டு மூலம் தாக்குதல் நடந்தது . இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயம் அடைந்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஸ்தம்பித நிலையை எட்டியுள்ள அமெரிக்க வங்கித்துறையையும் மற்றும் பொருளாதாரத்தையும் மீட்கும் என்று தாம் நம்பும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க திறைசேரி செயலர் திமொதி கெய்த்னர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம் , மோசமான கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள வங்கிகளுக்கு நிவாரணமாக டிரிலியன் டாலர்கள் வரை வழங்கும்.
வராக்கடன்களால் சீர்கெட்டுப் போயிருக்கும் வங்கிதுறையில் கடன் அடிப்படையில் முதலீடு செய்வதற்கு தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், 100 பில்லியன் டாலர்கள் வரை அரசாங்கம் வழங்கும் என்று கெய்த்னர் கூறியுள்ளார்.
இந்த திட்டம் நீண்ட கால மற்றும் ஆழமான பொருளாதார வீழ்ச்சியை தவிர்க்கும் என்றும், ஆனால், முதலீட்டாளர்கள் சிறிது சிரமங்களை எதிர்கொள்ள முன்வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!
லெபனானின் தென்பகுதியில் இடம்பெற்ற வீதியோரக் குண்டு வெடிப்பில் பாலத்தீன விடுதலை இயக்கத்தின் லெபனானில் உள்ள துணைத் தலைவரான கமால் மெட்கட் கொல்லப்பட்டுள்ளார்.
சிடோனுக்கு அருகே உள்ள அகதிகள் முகாம் ஒன்றை விட்டு வெளியேறிய வேளையில் , மெட்கட்டும், பத்தா அமைப்பின் உறுப்பினர் ஒருவரும், அவரது மூன்று மெய்ப்பாதுகாவலர்களும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்.
லெபனானில் உள்ள பாலத்தீன விடுதலை இயக்க தலைவர் அபா ஷக்கி அவர்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாலத்தீன வட்டாரங்கள் கூறுகின்ற
!!!!!!!!!!!!!!
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் புதிய யுக்திகள் குறித்து நேட்டோ கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்காவின் ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் பிராந்தியத்துக்கான சிறப்புத்தூதுவர் றிச்சர்ட் ஹொல்புறூக் வாசிங்டனில் விபரித்தார்.
அமெரிக்காவின் புதிய அணுகுமுறை குறித்து பெரிதளவிலான விபரங்கள் வெளியிடப்படாவிட்டாலும், அங்கு அமெரிக்கா மேலதிக படையினரையும், பணத்தையும், மேலதிக இராணுவம் சாரா உதவிகளையும் கோருகிறது என்றே தென்படுவதாக பிபிசியின் இராஜதந்திர விவகார செய்தியாளர் கூறுகிறார் .
ஆப்கானைப் பொறுத்தவரை அங்கிருந்து வெளியேறுவதற்கான ஒரு திட்டத்தையே அமெரிக்க தொடரும் என்று ஞாயிறன்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார்.
!!!!!!!!!!!!!!!!
1 euro = 155.74sl /68.69in
1us $ = 114.15sl /50.34in
1swiss fr =101.72sl /44.85in
1uk pound =167.67sl /73.94in
1 saudi riyal =30.44sl /13.42in

Leave a Reply

Your email address will not be published.