ஆபீசர்கள் பற்றாக்குறை : ஏப்ரல் 8,9 தேதிகளில் ஸ்டேட் பேங்க் ஆபீசர்கள் ஸ்டிரைக்

புதுடில்லி : வரும் ஏப்ரல் 8 மட்டும் 9ம் தேதிகளில் நாடு முழுவதிலும் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆபீசர்கள் ஸ்டிரைக் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். தேவையான ஆபீசர்களை பணியில் அமர்த்தவும், சம்பளத்தை மாற்றி அமைக்கவும் கோரி இவர்கள் ஸ்டிரைக் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.


இது குறித்து ஆல்-இந்தியா ஸ்டேட் பேங்க் ஆபீசர்ஸ்’ ஃபெடரேஷன் தலைவர் டி.என்.கோயல் தெரிவிக்கையில், இந்தியா எங்கும் சுமார் 7,000 முதல் 8,000 வரை ஆபீசர்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது. புதிதாக திறந்திருக்கும் கிளைகளையும் கணக்கில் சேர்த்துக்கொண்டால் அது 10,000 ஐ தாண்டி விடும். 25 சதவீத ஸ்டேட் பேங்க் களில் ஒரு ஆபீசர் தான் இருக்கிறார். கோர் பேங்கிங் சொலுஸன் ( சிபிஎஸ் ) வசதியுள்ள வங்கிகளில் குறைந்தது இரண்டு ஆபீசர்கள் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அப்படி இல்லை. டில்லி சர்க்கிளில் மட்டும் 300 கிளைகள், ஒரு ஆபீசருடன் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதிலும் உள்ள எங்கள் வங்கியின் 11,000 கிளைகளில் மொத்தம் 65,000 ஆபீசர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள் என்றார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.