வன்னி மக்களது நிலைமை மேலும் பாரதூரமாக மாற்றமடையலாம்: கார்டியன்

வன்னியில் இடம்பெற்று வரும் இராணுவ முன்நகர்வுகளின் காரணமாக அப்பகுதி மக்களது நிலைமை நாளுக்கு நாள் மோசடைந்து செல்வதாக ஐக்கிய நாடுகள் சபையை ஆதாரம் காட்டி கார்டியன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

35 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் அப்பாவி பொதுமக்கள் சிக்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

யுத்தம் இடம்பெற்று வரும் வன்னிப் பிரதேசத்தில் சுமார் 150,000 சிவிலியன்கள் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்த சூன்ய பிரதேசத்தில் தொடர்ந்தும் தங்கியிருப்பதன் மூலம் அரசாங்கத்தின் ஷெல் தாக்குதல் அல்லது புலிகளின் துப்பாக்கிப் பிரயோகம் என இருபக்க
அனர்த்தங்களை பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஷெல் தாக்குதல்களினால் நாள் தோறும் 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்படுவதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் சுமார் 3000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.