ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் : சிதம்பரம் வேண்டுகோள்

புதுடில்லி : கிரிக்கெட் போட்டிகளுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அரசியல் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். டில்லியில் செய்தியாளர்கள் மத்தியில் ஐ.பி.எல்., போட்டிகள் குறித்து பேசிய அவர் கூறியதாவது: ஐ.பி.எல்., போட்டிகளை வெளிநாட்டில் நடத்துவது தேசிய அவமானம் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


அது தேசிய அவமானம் என்றால் குஜராத் கலவரத்தை அவர் என்னவென்று சொல்வார். ஐ.பி.எல்., என்பது விளையாட்டும் , வியாராமும் கலந்த கலவ‌ை . விளையாட்டுக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது . மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாற்றப்பட்ட ஐ.பி.எல் அட்டவணை பரிந்துரைக்கு ஆந்திரா , கர்நாடகா , பஞ்சாப் மாநிலங்களும் சண்டிகர் யூனியன் பிரதேசமும் தான் பதிலளித்திருந்தது . ஐ.பி.எல்., போட்டிகளை வெளிநாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசு தான் காரணம் என பி.சி.சி.ஐ., வாரியம் குற்றம் சாட்டியிருப்பது ஏற்றுக்கொள் முடியாது . இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுக்கிறது . வெளிநாட்டில் ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த எடுக்கப்பட்ட முடிவு தன்னிச்சையான முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.