முல்லைத்தீவிலிருந்து நோயாளர்கள் புல்மோட்டைக்கு வருகை

வீரகேசரி இணையம் 3/23/2009 8:57:52 AM – முல்லைத்தீவிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கப்பல் மூலம் அழைத்து வந்த 13ஆவது தொகுதி நோயாளர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இக்கப்பலில் நோயாளர்கள், காயமுற்றவர்கள்,கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அடங்கலாக 490 பேர் அழைத்து வரப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இத்தகவலைத் தமக்கு அறிவித்ததாகக் கூறுகின்றார் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.தேவராஜன். நேற்று மாலை 6.00 மணியளவில் இக்கப்பல் புல்மோட்டையை சென்றடைந்தது. எனினும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக கப்பல் பயணத்தில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. நோயாளர்களை இறக்கும் பணிகளிலும் தாமதங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக 250 மீற்றருக்கு அப்பால் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்தே நோயாளர்கள் இறக்கப்பட்டனர். இயந்திரப் படகுகள் மூலம் கரைக்கு வந்து புல்மோட்டைத் தள (இந்திய மருத்துவ குழு) வைத்தியசாலைக்கு நோயாளரை அழைத்துச் செல்லும் பணிகள் நள்ளிரவு வரை நீடித்ததாகவும் கூறப்படுகின்றது. நேற்று அழைத்து வரப்பட்ட போது ஒருவர் கப்பலிலும் மற்றவர் இறக்கும் போதும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். E-mail to a friend

Source & Thanks : .virakesari.

Leave a Reply

Your email address will not be published.