கஞ்சா கடத்திய காவல்துறை உத்தியோகத்தர் கைது

கொழும்பு, தெமட்டக்கொடையில் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றத்திற்காக காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பு தெமட்டகொடை காவல்நிலையத்தில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 6 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை இவர்கள் கடத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கஞ்சாவை கடத்திச் செல்வதற்காக குறித்த காவல்துறை அதிகாரிக்கு 10,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கதிர்காமம் மற்றும் குடாஓயா பிரதேசங்களுக்கு இந்த கஞ்சா போதைப் பொருள் பல தடவைகள் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.