‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (23.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

இலங்கையின் வட பகுதியில் போரை நிறுத்தி மக்களின் அவல நிலையை நீக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகத் தலையிடவேண்டும் என்று இந்திய மனித உரிமை அமைப்புகள் .நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் வலியுறுத்தியுள்ளன .
மோதல் பகுதிகளிலுள்ள மக்களின் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்த தமது கவலையை அந்த அமைப்புகள் ஆணையாளரிடம் தெரிவித்திருக்கின்றன.

தென்னாசியாவிற்கான தனது விஜயத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிற்குச் சென்றுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தியா வின்சிவில் உரிமைகளுக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தார்.இந்தச் சந்திப்பின்போது அந்த அமைப்பின் தலைவர் கே.ஜி.கண்ணபிரான் உட்பட அதன் உறுப்பினர்கள் வன்னிப் பேரவலம் குறித்து நவநீதம்பிள்ளையிடம் முறையிட்டுள்ளனர்.
இலங்கையில் மோதல் நடைபெறும் பகுதிகளில் மக்களின் நிலைமைகள் மோசமடைகின்றமை மற்றும் மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்த கவலையை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
மேலும் பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்வது குறித்த கவலையையும் அவர்கள் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளதுடன் இந்த மனிதாபிமான நெருக்கடியைத் தீர்ப்பதற்கு .நா.தலையிட வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர், உள்துறை அமைச்சர் உட்பட முக்கிய அதிகாரிகளுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மேற்கொள்ளவுள்ள பேச்சுகளில் இலங்கை விடயம் இடம்பெறலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவநீதம்பிள்ளை நேபாளத்திற்கான விஜயத்தின் பின்னர் இந்தியாவுக்கு சென்றுள்ளார். எனினும், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளாமை குறிப்பிடத்தக்கது.அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லையென மனித உரிமை ஆணையகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மோதல் நடைபெறும் நாடொன்றுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கட்டாயம் விஜயம் மேற்கொள்ள வேண்டுமென்ற நடைமுறை இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேபாளத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் அவர் அந்த நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டார். இந்தியாவில் விசேட உரையை ஆற்றுவதற்கு அழைக்கப்பட்டார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
இதேவேளை, நவநீதம்பிள்ளை கடந்த வாரம் முன்வைத்திருந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கான தெளிவான பதிலை இலங்கை இவ்வாரம் வழங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாக தெரிவித்துள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் . சிதம்பரம் உள்ளிட்ட பலரை நவநீதம்பிள்ளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வடமராட்சி கிழக்கு சுண் டிக்குளம் கடற் பரப்பின் ஊடாக ஊடுருவிய கடற்புலிக ளுக்கும் கடற்படையினருக்கும் இடையே நேற்றுக்காலை 6 மணியளவில் சமர் இடம் பெற்றது எனத் தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் செய்திவெளி யிட்டது.

சந்தேகத்திற்கிடமன படகின் நடமாட் டத்தை அவதானித்த கடற்படையினர் அப்படகை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் படகில் இருந்த கடற்புலிகளின் தற்கொலைதாரிகள் அனைவரும் கொல்லப்பட்டனர் எனத் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது.
இச்சமரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் 5
cடலங்களைக் கடற்படையினர் மீட்டுள்ளனர். அவர்களின் ஆயுதங் களும் மீட்கப்பட்டன என தேசிய பாதுகாப் புக்கான ஊடக மத்திய நிலையம் வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புதுக்குடியிருப்பு, இரணைப்பாலைப் பகுதிகளில் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் தொடர்கின்றன. படையினர் அந்தன் குளத்தை நேற்று அடைந்துள்ளனர்.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.

புலிகள் வசம் தற்போது அரசு பிரகடனம் செய்துள்ள பாதுகாப்பு வலயமும் அதன் முன்னால் உள்ள சிறு நிலப்பரப்புமே எஞ்சி உள்ளதாகவும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நிலப்பரப்பையும் மக்களையும் இராணுவத்திர் மீட்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை படையினரால் கைப்பற்றப்பட்ட இரணைப்பாலைக்கு 1055 பொதுமக்கள் வந்துள்ளதாகவும் அவர்க ளுள் 376 பெண்களும், 371 சிறுவர்களும் அடங்குவதாகவும் நேற்றுமுன்தினம் பருத்தித்துறை கடற்பரப்பில் 108 பொது மக்கள் கடற்படையினரிடம் சரணடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மோதல்களின் போது பின்னகர்ந்துள்ள புலி உறுப்பினர்கள் தற்போது சுமார் 25 சதுர கிழோ மீற்றர் நிலப்பரபபுக்குள் முடக் கப்பட்டுள்ளனர் என்றும் மோதல்களை அடுத்து படையினரால் மேற்கொள் ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் உட்பட ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் கூறியது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், இரணைப்பாலை மற்றும் புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளிலையே இரு தரப்புக் கும் இடையில் கடும் மோதல்கள் இடம் பெற்று வருகின்றன. இதில் புலி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் படு காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் சிங்களவர் ஒருவரின் பெயரில் பணியாற்றியதாகக் கூறி தமிழ் ஊழியர் ஒருவரைப் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
இவர் அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் படையினர் சிகிச்சைபெறும் வார்ட் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வந்ததால் சந்தேகம் கொண்ட பொலிஸார் இவரை விசாரணை செய்தனர்.
அதன்போது இவரின் உண்மையான பெயர் தமிழ்ப் பெயர் என்றும் ஆனால் இவர் சிங்களப் பெயருடன் பணியாற்றி வந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இவர் மேலதிக விசாரணைகளுக்காக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்தேவி கடுகதி ரயில் சேவை மதவாச்சி ரயில் நிலையத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வவுனியா, மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் மதவாச்சியில் இருந்து கொழும்புக்கோ அல்லது தென்பகுதிக்கோ பயணம் செய்யப் பாதுகாப்புத் தரப்பினர் அனுமதி மறுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவசரதேவை, மருத்துவ சேவை, விஸா போன்றவற்றுக்காக அவசியம் செல்ல வேண்டும் என்று கூறினாலும் ஒரு சிலருக்கே அனுமதி வழங்கப்படுகிறது.
உரிய நேரம் அனுமதி வழங்கப்படும் என்று கூறி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
மதவாச்சி நகருக்கு வவுனியாவில் இருந்து பஸ்களில் வந்து, பின்னர் அங்கிருந்து 200 ரூபா கட்டணம் செலுத்தி ஆட்டோவில் மதவாச்சி ரயில் நிலையத்துக்கு பயணிகள் வருகின்றனர் .
ஆனால் மதவாச்சி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தமக்கு வீண் அலைச்சலும் அதிகமான செலவும் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் .
வவுனியாவில் தாம் பஸ்களில் ஏறும்போதே இதனைத் தெரிவித்தால் தாம் பயணத்தைத் தொடராமல் விடலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் யுத்த சூழல் உக்கிரமடைந்துள்ளதால் அத்தியாவசிய தேவையைத் தவிர, வேறெந்த காரணங்களுக்காகவும் இலங்கை செல்ல வேண்டாமென ஐக்கிய அரபு இராச்சியம், தனது நாட்டு பிரஜைகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் தற்போது வதியும் ஐக்கிய அரபு இராச்சிய பிரஜைகள், உடனடியாகத் தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்டு, தமது தொடர்பு இலக்கங்கள், முகவரிகள் போன்ற விவரங்களை அறியத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் தீவிர முயற்சியில் சிறீலங்கா அரசு ஈடுபட்டிருந்த போதிலும், அந்த முயற்சி படுதோல்வி கண்டிருப்பதால் சிறீலங்கா அரசு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது .
கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு வந்திருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தனித்தனியாகச் சந்தித்துள்ள பசில் ராஜபக்ச அவர்களை அரசுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் ஊடகங்கள் வாயிலாக அரசு பரப்புரை மேற்கொண்டிருந்தது.
வினோ நோகராதலிங்கம் வவுனியாவிலுள்ள வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமைப் பார்வையிட அனுமதி வழங்கியிருந்த அரசு, அது பற்றிய நிழற்படங்களை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு ஊடாக பரப்புரையும் மேற்கொண்டிருந்தது.
இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்த வினோ நோகராதலிங்கம், அந்த மக்களை அரசு மிகவும் சிறப்பாகப் பராமரிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருப்பதாக சிறீலங்கா அரசு பரப்புரை மேற்கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் சிறீலங்கா அரசுடன் இணைய இருப்பதாகவும் அரசினால் திட்டமிடப்பட்டு பரப்புரை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதனை மறுத்து நாடாளுமன்ற உறுப்பினர் வினோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள்:
கடந்த வியாழக்கிழமை என்னால் பாராளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரைக்குப் பின்னர் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு .
சில ஊடகங்களும் இணையத் தளங்களும் எனது உரைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதுடன் எனது உரையை திரிபுபடுத்தியும் எனதும், .தே. கூட்டமைப்பினதும் அரசியல் உறுதிப்பாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை அவதானிக்கின்றேன்.
எனது உரையில் சொல்லப்படாத முரணான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியதுடன் நான் அரசுடன் இணைந்து கொள்ளப் போவதாகவும் எழுதியிருந்தன.
மிகத்தெளிவாகவும், உறுதியாகவும் இவற்றைக் கண்டிப்பதோடு, இதில் எந்த வித உண்மையும் இல்லை என்பதையும் உறுதியாக நிராகரிக்கின்றேன்.
எனது மக்களுக்காக குரல் கொடுப்பதற்கும் தமிழ் தேசியத்தை கட்டிக் காப்பதற்குமான உறுதியான நிலைப்பாட்டிலிருந்தும் திசை மாறிச் செல்லாமல் உணர்வு பூர்வமான எனது செயற்பாடுகள் தொடரும், அன்றும் சரி இன்றும் சரி என்றுமே .தே. கூட்டமைப்பினதும், ரெலோ இயக்கத்தினதும் உறுதியான அரசியல் நிலைப்பாட்டையே பின்பற்றுபவன்.
எமது மக்களின் இன்றைய நெருக்கடியான காலத்தில் வரலாற்றுத் துரோகம் ஒன்றினை செய்வதற்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் துணை போகமாட்டேன். இதில் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறேன்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் மக்கள் எனது திடமான கொள்கையில் கடுகளவேனும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.எனக்கெதிரான பொய்யான பரப்புரைகளை நிராகரிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவும் இன உரிமைக்காக போராடவும் மனம் தளராது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பாடுபடுவேன
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னி மக்களின் அத்தியாவசியத் தேவைகள் விடயத்தில் அமைச்சர்களினதும் அதிகாரிகளினதும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை. அவல நிலை அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்த மக்களை பாதுகாப்பதாகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் கூறுவது சுத்தப் பொய்யாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட எம்.பி. டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார்.

வவுனியா மற்றும் மன்னார் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களும் அத்துடன் மோதல்களில் சிக்கிக் காயப்பட்ட நிலையில் அரசு கட்டுப்பாட்டு பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களும் தமது நிலைமையை வெளிப்படுத்த முடியாதவர்களாகவே இருக்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.

வன்னி மக்களுக்கென மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற அதேவேளை அங்கு மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் நோயாளிகளின் இறப்பு அதிகரிப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகõதாரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார் . இது தொடர்பில் கேட்ட போதே ஜயலத் ஜயவர்த்தன எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார் . அவர் மேலும் கூறுகையில்,

“உண்மையில் அங்கு என்ன நடக்கின்றது என்பதே புரியாத புதிராக இருக்கின்றது. அரச பணியாளரான சுகாதாரப் பணிப்பாளரே மருத்துவப் பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் இதனால் இறப்புகள் அதிகரிப்பதாகவும் கூறுகின்றார். மறுபுறத்தில் உலக சுகாதார மையத்தின் தலைவரும் சுகாதார அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா முல்லைத்தீவுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாகக் கூறுகின்றார்.

அதே நேரம் அத்தியாவசியப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் இதனையே கூறுகின்றார் .
ஆனால், இவைகளில் எந்தளவு உண்மை இருக்கின்றது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது இருக்கின்றது. வன்னியைப் பொறுத்த வரையில் அங்கு மக்கள் இருதலைக் கொள்ளிகளாக இருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் உணவு, மருந்து, குடிநீர் போன்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் மறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் உயிரைப் பிடித்துக் கொண்டு அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகின்ற மக்களை அரசாங்கம் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கிறது.*
இந்த மக்கள் தாங்கள் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற உண்மை நிலைமைகளை வெளிப்படுத்த முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.
அரசாங்கத்தின் பிரசாரத்துக்காக நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளுடன் அரச தரப்பினரால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சிலரே (நலன்புரி நிலையங்களில் உள்ளோர்) சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன .
இதனால் அம் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதுடன் அவர்களின் உணர்வுகளும் உண்மைகளும் வெளிப்படுத்தப்படுவதில்லை. இது அந்த மக்களை வைத்து அரசாங்கம் நடத்துகின்ற பொய்ப் பிரசாரமாகும். அரச ஊடகங்களையும் வெளிநாட்டு ராஜ தந்திரிகளையும் அழைத்துச் செல்கின்ற அரசாங்கம் இந்த நாட்டின் மக்கள் பிரதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற எமக்கு மேற்படி பிரதேசங்களுக்கு செல்வதற்கு அனுமதி தர மறுக்கின்றது.

நாம் அங்கு செல்வதால் அங்குள்ள உண்மை நிலவரங்களை வெளியில் கொண்டு வர முடியும். நாம் அங்கு செல்வதற்கான அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் அங்குள்ள நிலைமைகளை அல்லது உண்மைத் தன்மைகளை அதிகரித்தோ அல்லது குறைத்தோ வெளியிட்டால் அரசாங்கம் எம்மிடம் கேள்விகளை கேட்க முடியும்.

ஏனெனில் அங்கு நடைபெறுவது என்னவென்பதை உணர முடியாமல் இருக்கின்றது. எந்தத் தரப்பினரை நம்புவது என்ற பாரிய சிக்கலும் ஏற்பட்டுள்ளது. எனவேதான் அங்கு சென்று அந்த மக்களின் சுக துக்கங்களை விசாரித்தறிய அனுமதி கோருகின்றோம்.

எமக்கு அனுமதி மறுக்கின்ற அரசாங்கம் பாதுகாப்பு விடயத்தை காரணம் காட்டுகின்றது. இதிலிருந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் பிரசாரங்கள் அனைத்தும் சுத்தப் பொய் என்பது தெளிவாகின்றது” என்றார்
!!!!!!!!!!!!!!!!!
அரசியலமைப்பு சபையை நிறுவி சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதால் வட பகுதியின் யுத்தத்திற்கு எதுவிதமான பாதிப்பும் ஏற்படாது. இதுவே உண்மை. ஆனால் அரசாங்கம் யுத்தத்தை காரணம் காட்டி ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறது. எனவே மேல் மாகாண சபைத் தேர்தலில் .தே.கட்சியை வெற்றி பெறச் செய்வதன் மூலம்ஜனநாயகத்தினைபாதுகாக்க வேண்டுமென்ற செய்தியை உங்களால் அரசாங்கத்திற்கு வழங்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தேசியத்துவத்தையும் தேசிய உற்பத்தியையும் பாதுகாப்போமென மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இலங்கையிலிருந்து சர்வதேச நாணய நிதியத்தின் கிளையை மூடச் செய்து அங்குள்ள அதிகாரிகளை நாடு கடத்திய அரசாங்கம் இன்று மீண்டும் நாணய நிதிய பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்து 20,000 கோடி ரூபா கடனை கேட்பதோடு அரச வளங்களையும் தனியார் மயமாக்கும் முயற்சிகளை மும்முரமாக முன்னெடுத்து வருகிறது என்று இங்கு உரையாற்றிய ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார்..

முகத்திரைகளை கிழிக்கப்பட்ட தேசப்பற்றாளர்களை இன்று மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது . எதிர்காலத்தில் மக்களை பெரும் துன்பங்கள் சூழ்ந்துள்ளனஎன்று ரவி கருணாநாயக்க எம் .பி. தெரிவித்தார்..
!!!!!!!!!!!!!!!!!

வன்னி நிலப்பரப்பில் 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 150,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர் ; வாராந்தம் 300 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர்; மருந்து, உணவு, குடிநீர் இல்லாமல் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் ரைம்ஸ்நாளிதழ் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ரைம்ஸ்இதழுக்காக எழுதிய கட்டுரையில் ஊடகவியலாளர் மாரீ கொல்வின் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அவையவங்களை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்த மக்களுடன் இலங்கையின் வடக்கு கிழக்கு கடற்கரையில் காத்திருக்கின்றனர் என தொண்டர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் காத்திருக்கும் மக்கள் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். அவர்கள் பதுங்குகுழிகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். 26 வருடப் போரில் தற்போது அதிக பாதிப்புக்களை சந்தித்து வரும் மக்கள் இவர்கள்.
கடந்த வாரம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் காயமடைந்த 460 மக்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றிருந்தது. உள்ளூர் மீனவர்களின் துணையுடன் மரத்திலான டிங்கி படகுகளில் கொண்டு செல்லப்பட்ட இந்த மக்கள்கிறீன் ஓசின்கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதிகளவான மக்கள் காயமடைகின்ற போதும் எடுத்துச் செல்லப்படும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கைகள் மிகவும் குறைவானது எனவே நாம் படுகாயமடைந்தவர்களையே அகற்றி வருகின்றோம்.
ஏனைய காயமடைந்த மக்களை அங்கேயே விட்டுள்ளோம். இது வேதனையானது என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி சோபி றோமனின்ஸ் தெரிவித்துள்ளார்.
படை நடவடிக்கை காரணமாக 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள பகுதிகளில் 150,000 மக்கள் தங்கியுள்ளனர். அங்கு நடைபெறும் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களினால் ஒவ்வொரு வாரமும் 300 பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்குள்ள மக்கள் மருந்து, உணவு, குடிநீர் பற்றாக்குறை காரணமாகவும் இறப்புக்களை சந்தித்து வருகின்றனர்.
வன்னியில் இயங்கிவந்த கடைசி மருத்துவமனையும் சிறிலங்கா இராணுவத்தின் குண்டு வீச்சுக்களுக்கு இருமுறை உட்பட்டதனால் மூடப்பட்டுள்ளது.
புதுமாத்தளனில் உள்ள சிறிய மருத்துவமனையே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அங்கு நோயாளர்கள் நிலத்தில் நீர் உட்புகாத துணிகளில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். மருந்து பொருட்களிளின் பாவனைக்கு மரத்தின் கிளைகளே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து 2,800 மக்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .
வன்னியில் உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் எமக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார் .
சிறிலங்கா அரசாங்கத்துடன் நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு தயார் எனவும் சிறிலங்கா அரசாங்கத்தினால் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் குண்டு வீச்சுக்கள் ஒரு இன அழிப்பு நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தடுத்து வருவதுடன் தொடர்ச்சியாக வான்குண்டு மற்றும் பீரங்கித் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது.
இது வன்னியில் பெரும் மனித அவலங்களை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துலக கண்காணிப்பாளர்கள் வன்னிக்கு வந்து நிலமைகளை கண்காணிக்க வேண்டும் என நடேசன் மேலும் தெரிவித்துள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் 24 மணி நேரத்தில் பதில் கூறாது விட்டால் சிறிலங்காவை பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து பிரித்தானியாவின் பிரதமர் கோர்டன் பிறவுன் நீக்க வேண்டும் என பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் றயன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தொடர்பான விவாதம் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் மீண்டுமொருமுறை நிராகரித்துள்ளது.
நிபந்தனைகளற்ற சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நேற்றைய தினம் விடுத்த
வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த காலங்களில் போதுமானளவு போர் நிறுத்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாகவும், அவற்றில் எவ்வித பயனும்
கிட்டவில்லை எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது .
சர்வதேச சமூகமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் தொடர்ச்சியாக போர் நிறுத்த கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ள எவ்வித முனைப்பும் காட்டவில்லை .
இராணுவ நடவடிக்கைகளின் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னி பிரதேசத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி வந்த பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் சேவையாற்றுவதற்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை காலமும் இடைத்தங்கல் முகாம்களில் பணிகளை மேற்கொள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுனங்கள் மட்டுமே இதுவரையிலும் இடைத்தங்கல் முகாம்களில் சேவையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

40 முதல் 45 வரையிலான சர்வதேச மற்றும் உள்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாமும் அகதிகளுக்கு சேவையாற்ற விரும்புவதாகக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அகதிகளுக்கு வழங்கவுள்ள மனிதாபிமான சேவைகள் குறித்து பூரண திட்ட அறிக்கையொன்று அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ .எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் இரவு 12.00 மணிமுதல் அதிகாலை 4.30 மணிவரை பொது மக்கள் தேவையின்றி வீதிகளில் நடமாட காத்தான்குடி பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் தொடர்ந்து இரவு நேரங்களில் இடம் பெற்று வரும் தாக்குதல் மற்றும் கொள்ளை,நாசகார செயல்களைத் தடுக்கும் நோக்குடனேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுராத மகிந்தசிறி தெரித்தார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துடன் பொலிஸார் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை மற்றும் அவசரத்தேவைகள் தவிர கூட்டமாக திரிவோர் கூடிநிற்போர் கைது செய்யப்படுவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இரவு நேரத்தில் விசேட பொலிஸ் ரோந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!
முதன்முறையாக கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாயல் பிரதேசத்தைப் புனித பூமியாக, நகர அபிவிருத்தி அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.

நகர அபிவிருத்தி அமைச்சு இதற்கென பலகோடி ரூபாவை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புனித பிரதேச திட்டத்தின் ஒருகட்டமாக முகைதீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளிவாயலின் நீர்த்தடாகம் நவீன வசதிகளைக்கொண்ட மலசலகூடத்தொகுதி என்பனவற்றை கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்..எம். ஹிஸ்புல்லா திறந்து வைத்தார்.

இத்திட்டத்திற்கென 45 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளர் மர்சூக் அகமட் லெப்பை தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அமைச்சு 25 லட்சம் ரூபாவையும் பள்ளிவாயல் நிர்வாகம் 20 லட்சம் ரூபாவையும் இதற்கென ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தினால் சுமார் 2000 குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.

!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கப்பல் மூலம் அழைத்து வந்த 13ஆவது தொகுதி நோயாளர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இக்கப்பலில் நோயாளர்கள், காயமுற்றவர்கள்,கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அடங்கலாக 490 பேர் அழைத்து வரப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இத்தகவலைத் தமக்கு அறிவித்ததாகக் கூறுகின்றார் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.தேவராஜன். நேற்று மாலை 6.00 மணியளவில் இக்கப்பல் புல்மோட்டையை சென்றடைந்தது . எனினும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக கப்பல் பயணத்தில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. நோயாளர்களை இறக்கும் பணிகளிலும் தாமதங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக 250 மீற்றருக்கு அப்பால் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்தே நோயாளர்கள் இறக்கப்பட்டனர். இயந்திரப் படகுகள் மூலம் கரைக்கு வந்து புல்மோட்டைத் தள (இந்திய மருத்துவ குழு) வைத்தியசாலைக்கு நோயாளரை அழைத்துச் செல்லும் பணிகள் நள்ளிரவு வரை நீடித்ததாகவும் கூறப்படுகின்றது. நேற்று அழைத்து வரப்பட்ட போது ஒருவர் கப்பலிலும் மற்றவர்கப்பலிUe.J இறக்கும் போதும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலையில் 6 வயது சிறுமியின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவருடைய சடலம் நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட ஜனா எனப்படும் வரதராஜா ஜனார்த்தனன் என்பவருடைய சடலமே இவ்வாறு புதை குழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு தலை சிதைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தகவல் அறிந்த திருகோணமலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகைள மேற்கொண்ட பின்பு மீண்டும் புதைக்கப்பட்டது. மரண விசாரணையின் பின்பு இவரது சடலத்தை உறவினர்கள் பொறுப்பேற்று வெள்ளிக் கிழமை அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியாக தோற்கடித்தாலும், போராட்ட இயக்கமென்ற வகையில் அதனை பூரணமாக இல்லாதொழிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் பலம் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டதாக கருத முடியாது எனவும், எந்த நேரத்தில் தாக்குதல் நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள படையினர் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த கால எல்லையை உறுதியாக கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படாத வகையில உலக நாடுகளினால் வழங்கப்படும் உதவிகளை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இல்லை என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல பேராளிகளுக்கும் மன்னிப்பு வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ள விரும்பும் எந்தவொரு விடுதலைப் புலி உறுப்பினருக்கும் அரசாங்கம் தடை ஏற்படுத்தாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர் மக்களைப் போன்றே படைவீரர்களுக்கும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஓர் இன சமூகத்திற்கு என தனிப்பட்ட ரீதியலான பிரச்சினைகள் எதுவுமில்லை என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்குமிட வசதி பிரச்சினை, ஊழியர்களுக்கு சம்பளப் பிரச்சினை என நாடு முழுவதிலும் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் ஒர் இனச் சமூகத்திற்கும் மட்டும் தனித்த வகையில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யுத்த களத்தில் இருப்பதாகவும் , அவரை விரைவில் கைது செய்ய முடியும் எனவும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க சூளுரைத்துள்ளார்.
அப்பாவி பொதுமக்களை புலிகள் மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும், இதனாலேயே இராணுவ நடவடிக்கைகள் தாமதமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹொரண மில்லாவ பிரதேசத்தில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து எஞ்சியுள்ள பிரதேசத்தை முற்றாக மீட்டெடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வன்னியில் சுமார் 60,000 பொதுமக்கள் விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதவி உயர்வுகளில் அரசியல் தலையீடு மேற்கொள்ளப்படுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவற்துறை உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சகலவிதமான அரசியல்சார் பதவி உயர்வுகளும் நிறுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் சுமார் 7000 ற்கும் மேற்பட்ட காவற்துறை இன்ஸ்பெக்டர்கள் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காவற்துறை நிர்வாகக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளினால் இன்ஸ்பெக்டராக காவற்துறை சேவையில் இணைந்துகொள்வோருக்கு உயர் பதவிகள் நோக்கிச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதென விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாயமான பதவி உயர்வுகளை வழங்கக் கூடிய வகையில் அரசாங்கம் இந்த நிர்வாகக் கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் அல்லது நாடு தழுவிய ரீதியில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க சிரேஸ்ட தலைவராக நியமிக்கப்படலாம் எனவும், தற்போதைய பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தலைமைப் பொறுப்பை ஏற்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குறித்து இன்றைய தினம் கட்சியின் செயற்குழு மிக முக்கியமான தீர்மானங்களை எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநேகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைமையில் மாற்றம் ஏற்படும் என குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று மாலை நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ள
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!
வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌‌‌மீது தடியடி நட‌த்த காரணமாக இரு‌ந்த காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் இர‌ண்டு பே‌‌ர் ‌‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌ட்டதை தொட‌ர்‌ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் 22 நா‌ட்களு‌க்குபிறகு இன்று முத‌ல் பணிக்கு திரும்பினர். இதேபோ‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ள் ப‌ணி‌க்குதிரு‌ம்‌பின‌ர்.

கடந்த மாதம் 19‌ஆ‌ம் சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்‌தில் வழ‌க்க‌றிஞ‌‌ர்களு‌க்கு‌ம் , காவல்துறையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இதையடுத்து வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் மீது தாக்குதல் நடத்த காரணமாக இ‌ரு‌ந்த காவ‌ல்துறை அ‌‌திகா‌ரிகளை த‌ற்கா‌லிக ப‌ணிநீ‌க்க‌ம் செ‌ய்ய‌க் கோ‌ரி செ‌ன்னை உய‌ர்‌நீ‌திம‌ன்ற வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் தொட‌ர்ந‌்துநீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு போர‌ா‌ட்ட‌த்‌தி‌‌ல் ஈடுப‌ட்டு வ‌ந்தன‌ர்.

இதை‌த் தொட‌‌ர்‌ந்து வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள்மீது தடியடி நட‌த்த காரணமாக இரு‌ந்த இர‌ண்டு கா‌வ‌ல்துறை அ‌திகா‌ரிகளை த‌ற்கா‌லிக ப‌ணிநீ‌க்க‌ம் செ‌ய்ய த‌மிழக அரசு‌க்கு செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌ம்உ‌த்தர‌வி‌ட்டது .

இதை‌யடு‌த்து த‌ங்களது போரா‌ட்ட‌த்தை த‌ற்கா‌‌லிகமாக த‌‌ள்‌ளிவை‌ப்பதாகவு‌ம், வரு‌ம் 23ஆ‌ம் தே‌தி (இ‌ன்று) முத‌ல் ப‌ணி‌க்கு ‌‌திரு‌‌ம்புவதாகவு‌ம் செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள்ச‌ங்க‌த் தலைவ‌ர் பா‌ல்கனகரா‌‌ஜ் கூ‌றி‌யிரு‌‌ந்தா‌ர்.

இதையடுத்து ச‌ெ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் இ‌ன்று பணிக்கு திரும்பினர். இதையடுத்து ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு விசாரணைகள் தொடங்கியது.

அதேபோல் மதுரை உய‌ர்நீ‌திம‌ன்ற கிளையிலும் வழ‌க்க‌றிஞ‌ர்கள் பணிக்கு திரும்பியதையடுத்து, நீதிமன்ற பணிகள் தொடங்கியது. மா‌நில‌ம் முழுவது‌‌ம் இ‌ன்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ப‌ணி‌க்குதிரு‌ம்‌பின‌ர்.

கட‌ந்த 22 நா‌‌‌ட்களாக நட‌ந்து வ‌ந்த போரா‌ட்ட‌‌ம் முடிவு‌க்கு வ‌ந்ததை தொட‌ர்‌ந்து பொதும‌க்க‌ள் ம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌ந்தன‌ர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வதில் ஒரு பொருள் இருக்கிறது எ‌ன்று தே.மு.தி.. தலைவர் விஜயகாந்த் சூசகமாகத் தெரிவித்தார்
ம‌க்களவை‌த் தேர்தலை முன்னிட்டு தே.மு.தி. சார்பில் முதன்முதலாக தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னி கோயிலில் தொடங்கிவைத்து அவர் பேசுகை‌யி‌ல் , காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோயில்களுக்குப் பெயர் பெற்றது காஞ்சிபுரம். அதோடு அறிஞர் அண்ணா பிறந்த ஊர். அதனால்தான் இங்கு பிரசாரத்தைத் தொடங்கி உள்ளேன்.

தமிழ்நாட்டில் .தி.மு.., தி.மு .. ஆகிய 2 கட்சிகளையும் நீங்கள் மாறி மாறி பார்த்துவிட்டீர்கள். இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி மத்தியில் கூட்டணி வைத்துக்கொண்டு இருந்தார்கள். கோடி கோடியாக கொள்ளை அடித்தார்கள். உங்களுக்கு ஏதாவது கொடுத்தார்களா? அல்லது உங்களுடைய வறுமை தீர்ந்ததா?

தமிழ்நாட்டில் வற்றாத நதி எது என்றால் காவிரி. அந்த காவிரி நதி நீர் பிரச்சனையை இதுவரை தீர்த்து வைத்தார்களா? முல்லைப் பெரியார் அணையில் இருந்து ஒரு 10 அடி தண்ணீரை கூட்டிக் கொடுத்து இருந்தால்கூட தேனி பகுதியில் இருக்கின்ற 10 லட்சம் ஏக்கர் நிலம் நன்றாக பயன் அடைந்து இருக்கும்.

தேர்தலுக்குப் பணம் அளிக்க வந்தால், அவர்களிடமே அவர்கள் தரும் பணத்தைத் தூக்கி எறியுங்கள் . பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்களிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

இதுவரை நான் எந்த கட்சியுடனும் செல்லவில்லை. இப்போது சொல்லுங்கள் நான் போகிறேன். தி.மு. . கூட்டணிக்கு போக வேண்டுமா? என்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்வதினால் ஜெயலலிதாவுக்கு கோபம் வரும். .தி.மு..வுடன் கூட்டணிக்கு செல்ல வேண்டுமா? சரி இரண்டு கட்சியுமே வேண்டாம். நான் சொல்கின்ற ஆளுக்கு ஓட்டு போடுவீர்கள் அல்லவா. நான் அடையாளம் காட்டுபவர்கள் யாராக இருந்தாலும் ஓட்டு போட வேண்டும்.

ஏன் இதையெல்லாம் கேட்கிறேன் என்றால் இந்த விஜயகாந்த் என்ன முடிவு எடுப்பார்? என்று எல்லோருக்கும் புரியாமல் இருக்கிறது. நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வதிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஆனால் என்னுடைய மக்களை நான் நல்லபடியாக வாழ வைக்காமல் இந்த விஜயகாந்த் போகவே மாட்டான் .

காசுக்காக ஆசைப்பட்டுக்கொண்டு இருந்தால் நான் இப்படியெல்லாம் வந்திருக்க மாட்டேன். என்றைக்கோ சூட்கேசை வாங்கிக்கொண்டு நான் பாட்டுக்கு போய்க்கிட்டு இருந்திருப்பேன். உங்களுக்காகத்தான் நான் போராடுகிறேன். நீங்கள் அவர்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாயை வங்கிக்கொண்டு ஓட்டுப் போட்டால் என்னதான் செய்யமுடியும்? வேறு வழியில்லாமல், “சரி போய் தொலைகிறது , நாமும் கூட்டணிக்கு போய் விடுவோம். இந்த மக்களை திருத்த முடியாதுஎன்று நினைப்பேன்.

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக தேர்தலை புறக்கணிக்கலாம் என முதலில் அறிவித்தேன். ஆனால், மற்ற கட்சிகள் பதவி, அதிகாரத்தைத்தான் எதிர்பார்த்துள்ளன . கச்சத் தீவில் அந்தோணியார் மாதா கோயிலை வழிபடவும், மீன் வலைகளை காயவைக்கவும் தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது. அதைக்கூட இந்திய அரசால் காப்பாற்ற முடியவில்லை . கச்சத் தீவை தாரை வார்த்துவிட்டனர். தமிழகம் முதலிடத்தில் உள்ளது என கூறுகின்றனர் . ஆனால், வறுமையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும் தான் முதலிடத்தில் உள்ளது.

23 முதல் 25ஆம் தேதி வரை வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. அதன்பின் 26ஆம் தேதி முதல் கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன். தமிழர்களும், தமிழகமும் சிறப்பான இடத்தைப் பெற நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி..வுக்கு வாக்களியுங்கள் என்று விஜயகாந்த் கூ‌றினா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
”ம‌க்களவை‌த் தேர்தலில் விருதுநகர் உட்பட 3 தொகுதிகளில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடு‌ம்” என்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ‌நிறுவன‌ர் நடிக‌ர் கார்த்திக் கூ‌‌றினா‌ர்
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி சார்பில் விருதுநகரில் நேற்றிரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனரும், திரைப்பட நடிகருமான கார்த்திக் பேசுகையில், ”ம‌க்களவை‌த் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் எ‌ன்று‌ம் கூட்டணி கட்சிகளுக்காக கொள்கையை விட்டுத்தரமாட்டேன் எ‌ன்று‌ம் கூ‌றினா‌‌ர்.

சுயமரியாதை கொண்ட கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த கா‌ர்‌த்‌தி‌க், ம‌க்களவை‌த் தேர்தலில் விருதுநகர் உட்பட 3 தொகுதிகளில் போட்டியிடுவேன் எ‌ன்று‌ம் தனியாக போட்டியிடவும் தயங்க மாட்டேன் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

3வது அணி என்பது ஏமாற்று அணி எ‌ன்று‌ம் விலைவாசி உயர்வு, மின்வெட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர் எ‌ன்று‌ம் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர் .

கா‌ர்‌த்‌தி‌க் பேசிக்கொண்டிருக்கும் போது மேடை எதிரே அமர்ந்திருந்த கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதா‌ல் பேச்சை பாதியில் முடித்துக்கொண்டு கார்த்திக் சென்றுவிட்டார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மு‌ஸ்‌லி‌ம்களு‌க்கு எ‌திராக தர‌க்குறைவான கரு‌த்து‌க்களை‌த் தெ‌ரி‌வி‌த்த வரு‌ண் கா‌ந்‌தியை‌த் தே‌ர்த‌லி‌ல்நிறு‌த்த‌க் கூ‌‌டாது எ‌ன்று தே‌ர்த‌ல் ஆணைய‌ம்பிற‌ப்‌பி‌த்து‌ள்ள உ‌த்தரவு ப‌ற்‌றி இ‌ன்று நட‌க்கவு‌ள்ள பா...‌வி‌ன் ம‌த்‌திய தே‌ர்த‌ல் குழு‌க் கூ‌ட்ட‌த்‌தி‌‌ல் முடிவு எடு‌க்க‌ப்ப‌டு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

‌பி‌லி‌பி‌ட் தொகு‌தி‌யி‌ல் நட‌ந்த பொது‌க் கூ‌ட்ட‌‌த்‌தி‌ல் மு‌ஸ்‌லி‌ம்களை‌த் தர‌க் குறைவாக‌ப் பே‌சிய வரு‌ண் கா‌ந்‌தியை‌க் கடுமையாகவிம‌ர்‌சி‌த்து‌ள்ள வரு‌ண் கா‌ந்‌தியை ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் நிறு‌த்த‌க் கூடாது எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி பா... ‌வி‌ற்கு‌த் தலைமை‌த் தே‌ர்த‌ல் ஆணைய‌‌ம் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தது.

இதுகு‌றி‌த்து இ‌ன்றுபி‌ற்பக‌ல் நட‌க்கவு‌ள்ள பா...‌வி‌ன் தலைமை‌த் தே‌ர்த‌ல் குழு‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் ப‌ரி‌சீ‌லி‌க்க‌ப்ப‌ட்டு முடிவெடு‌க்க‌ப்ப‌ட்டு அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி வ‌ட்டார‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன.

இத‌ற்‌கிடை‌யி‌ல் , வரு‌ண் கா‌ந்‌தியை‌க் கு‌ற்றவா‌ளி எ‌ன்று அ‌றி‌விப்பத‌ற்கு மு‌ன்பு தனதுநிலையைவிள‌க்க அவரு‌க்கு ஒரு வா‌ய்‌ப்பு‌த் தர‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று பா. .. பே‌ச்சாள‌ர் பா‌ல்‌பி‌ர் ப‌ன்‌ஞ் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

தே‌ர்த‌‌லி‌ல் யாரைநிறு‌த்த வே‌ண்டு‌ம் அ‌ல்லது யாரைநிறு‌த்த‌க் கூடாது எ‌ன்று முடிவு செ‌ய்ய வே‌ண்டியது தே‌ர்த‌ல் ஆணைய‌த்‌தி‌ன் வேலை அ‌ல்ல. அதைநீ‌திம‌ன்ற‌ம்தா‌ன் முடிவு செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று பா...‌வி‌ன் ம‌ற்றொரு பே‌ச்சாள‌ர்பிரகா‌ஷ் ஜ‌வ்தேக‌ர் கூ‌றினா‌‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உ‌த்தர‌ப்‌பிரதேச‌த்‌தி‌ல் பார‌ம்ப‌ரியமாக மாயாவ‌தி‌க்கு உ‌ள்ள த‌லி‌த் வா‌க்கு வ‌ங்‌கியை‌க் கலை‌க்கு‌ம் வகை‌யி‌ல், அ‌ம்மா‌‌நில‌த்‌தி‌ல் 15 தொகு‌திக‌ளி‌ல் போ‌ட்டி‌யிட உ‌ள்ளதாக ரா‌ம்‌விலா‌ஸ் பா‌ஸ்வா‌னி‌ன் லோ‌க் ஜனச‌க்‌தி‌க் க‌ட்‌சி அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து உ‌த்த‌ர‌ப்‌பிரதேச‌த்‌தி‌ல் லோ‌க் ஜனச‌க்‌தி‌க் க‌ட்‌சி‌யி‌ன் பே‌ச்சாள‌ர் ரா‌ஜ்குமா‌ர் ஓஜா கூறுகை‌யி‌ல், “இ‌ம்மா‌நில‌த்‌தி‌ல் 15 தொகு‌திக‌ளி‌ல் எ‌ங்க‌ள் வே‌ட்பாள‌ர்களைநிறு‌த்துவதெ‌ன்று முடிவு செ‌ய்து‌ள்ளோ‌ம். இதுவரை ,‌ 5 ம‌க்களவை‌த் தொகு‌திகளு‌க்கான வேட்பாள‌ர் பெய‌ர்களை அ‌றி‌வி‌த்து‌ள்ளோ‌ம்எ‌‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர் .

உ‌த்தர‌ப்‌பிரதேச‌‌த்‌தி‌ல் லோ‌க் ஜனச‌க்‌தி‌க் க‌ட்‌சி த‌னி‌த்து‌ப் போ‌ட்டி‌யிடுமா எ‌ன்று கே‌ட்‌டத‌ற்கு, தே‌சிய த‌லி‌த் மு‌ன்ன‌ணி‌யி‌ன்கீ‌ழ்நி‌ன்று தே‌ர்தலை‌ச் ச‌ந்‌தி‌க்கு‌ம் முடிவை மு‌ற்‌றிலு‌ம்நிராக‌ரி‌த்து‌விட முடியாது. இதுகு‌றி‌த்துவிரை‌வி‌ல் முடிவு எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர் அவ‌ர்.

அ‌ப்படி ஒருவேளை தே‌சிய த‌லி‌த் மு‌ன்ன‌‌ணி‌யி‌ன்கீ‌ழ் நி‌ன்று தே‌ர்தலை‌ச் ச‌ந்‌தி‌க்க நே‌ர்‌ந்தா‌ல், உ‌‌த்தர‌ப்‌பிரதேச‌த்‌தி‌‌ல் 20- 30 தொகு‌திக‌ளி‌ல் நா‌ங்க‌ள் போ‌ட்டி‌யிட வா‌ய்‌ப்பு‌ள்ளது எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மாயாவ‌தி‌‌யி‌ன் வா‌க்கு வ‌ங்‌கியை‌க் கலை‌‌ப்பத‌ற்காக‌க் கட‌ந்த 2008இ‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்ட, ரா‌ம்‌விலா‌ஸ் பா‌ஸ்வா‌ன் தலைமை‌யிலான தே‌சிய த‌லி‌த் மு‌ன்ன‌ணி‌யி‌ல் அவரது க‌ட்‌சி த‌விர, இ‌ந்‌திய நீ‌தி‌க் க‌ட்‌சிக‌ள், ரா‌ம்தா‌ஸ் அ‌த்தவே‌ல் தலைமை‌யிலான இ‌‌ந்‌திய‌க் குடியரசு‌க் க‌ட்‌சி () ஆ‌கியவை உ‌ள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்டபணிகள் 124 தொகுதிகளில் இன்று தொடங்கின.

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 16, 23, 30 ஆகிய தேதிகளிலும், மே மாதம் 7 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் 5 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை மே 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் 71 கோடியே 40 லட்சம் பேர், வாக்களிக்க தகுதி உடையவர்களாக இருக்கின்றனர்.
முதல் கட்டத் தேர்தல் ஆந்திரா, கேரளா உட்பட 17 மாநிலங்களில் 124 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி துவங்குகிறது.
அப்போது ஒரிசா மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடைபெற இருக்கின்றன. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது.
மனு தாக்கல் செய்ய வரும் 30 ஆம் தேதி கடைசி நாளாகவும், வரும் ஏப்ரல் 2ஆம் தேதி மனு வாபஸ் பெற கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக
லாலுபிரசாத் அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் லாலுபிரசாத் கட்சி 25 தொகுதிகளையும், ராம்விலாஸ் பஸ்வான் கட்சி 12 தொகுதிகளையும் எடுத்துக் கொண்டு , மீதி 3 தொகுதிகளை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கின. இதை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. லாலு , பஸ்வான் ஆகியோர் போட்டியிடும் 3 தொகுதிகளைத் தவிர, மீதி 37 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, தனித்துப் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது .
இந்நிலையில், திடீர் திருப்பமாக, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக லாலுபிரசாத் அறிவித்துள்ளார் . டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பீகார் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. அதற்கு, பா.ஜனதா போன்ற மதவாத சக்திகளுடன் மோதுவதை விட்டு விட்டு , மாநில கட்சிகளை ஒழித்துக் கட்ட முயற்சிக்கிறது.
மாநில கட்சிகளின் ஆதரவு இல்லாமல், காங்கிரசோ, பா.ஜனதாவோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு , கட்சியைப் பலப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்திருப்பது, வீடு தீப்பற்றி எரியும்போது, கிணறு தோண்டிக் கொண்டிருப்பது போன்றது.
கட்சியை பலப்படுத்த முடிவு செய்த பிறகு, என் மீதும், பஸ்வான் மீதும் மட்டும் எதற்காக சலுகை காட்ட வேண்டும்? நாங்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நிறுத்திக் கொள்ளட்டும் . நான் கூட, காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதை ஏற்காமல், காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இவ்வாறு லாலுபிரசாத் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்தியாவிலிருந்து ஐரோப்பா வுக்கானசிறந்த ஆசிய ஏர்லைன்’ என்ற உயரியபட்வா’ விருது ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பெர்லின் நகரில் அண்மையில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் இந்த பட்வா சர்வதேச விருது வழங்கப்பட்டது. .

விழாவில் உலகம் முழுவதும் இருந்து ராஜீய அதிகாரிகள், அரசு அலுவலர்கள், சுற்றுலாத்துறை அமைச்சர்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டனர். இவ்விருதை இந்தியாவின் சுற்றுலாத்துறை செயலாளர் சுஜித் பானர்ஜி வழங்கினார்.

உலகம் முழுவதும் உறுப்பினர் களைக் கொண்ட மிகப்பெரிய பயண எழுத்தாளர்கள் சங்கம் தான் பட்வா. பயண நூல்கள் மற்றும் பயண தொடர்புகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.

யுனெஸ்கோ மற்றும் .நா . உலக சுற்றுலா நிறுவனத்தின் அடிப்படை கொள்கைகளை பின்பற்றி வரும் பட்வா, சுற்றுலாவை மேம்படுத்தவும் ஆதரவு அளித்து வருகிறது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!
ஜப்பானில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் செல்லும்போது தீப்பற்றியதால், அதன் விமானிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள நாரிடா விமான நிலையத்தில் இன்று காலை சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் சென்றபோது, அதன் சக்கரங்கள் தரையில் பயங்கரமாக உரசியது. இதனையடுத்து , அந்த விமானம் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. விமானத்தை இயக்கிய விமானிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சமீபகாலங்களில் ஜப்பானில் நிகழ்ந்த மோசமான விபத்து இது என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இதேபோல, இன்று, அமெரிக்காவில் ஒரோவில் நகரில் இருந்து போஸ்மன் நகருக்கு சென்ற தனியார் விமானம் ஒன்று, நடுவானில் பறந்தபோது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டது . அப்போது, மேடான்மானா மாகாணத்தில் புயுட்டா விமான நிலையத்தில் தரையிறக்க முயன்றபோது , கீழே விழுந்து தீப்பிடித்தது. அதில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 17 பேர் பலியாகினர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சீனாவின் குய்சோவு மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 4.7 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

குய்சோவு மாகாணத்தின் மியாவோ, வெய்னிங் யிஹு ஆகிய பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 8.48 மணியளவில் (இந்திய நேரப்படி மாலை 6.18) ஏற்பட்டுள்ளது.

லியுபான்ஷி நகரில் இருந்து 70 கி.மீ தொலைவில் மையம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை என குய்சோவு மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!
தாலிபான் புகழிடங்களாக விளங்கும் பகுதிகளை அழிப்பதில் பாகிஸ்தான் அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, இதற்கு அமெரிக்கா தங்களுக்கு உதவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு குரேஷி அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான்ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்கா நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார் . இத்தாக்குதல்கள் காரணமாக தாலிபான்களுக்கு மக்களுடைய ஆதரவும், அனுதாபமும் கிடைப்பதாகக் கூறினார் .

அதே தருணத்தில் தங்கள் நாட்டின் எல்லைக்குள் தாலிபான்களுக்கு புகழிடமாக விளங்கும் பகுதிகளை அழிக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பதாகவும், இவ்விடயத்தில் தமது அரசு தெளிவான பாதையில் முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தாலிபான்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான் ராணுவத்திக்கு அதி நவீன ஹெலிகாப்டர்கள் , இரவு நேரங்களில் தெளிவாகப் பார்க்க உதவும்நைட்விஷன்கேமராக்கள் தேவைப்படுவதாகவும் குரேஷி கூறினார்.

தாலிபான்களை ஒழிப்பதில் புஷ் அரசின் கொள்கை எடுபடவில்லை என்று குறிப்பிட்ட அவர் இதனை புதிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். ஒபாமா தலைமையிலான தற்போதைய அரசு இவ்விடயத்தில் சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தமது வசமுள்ள படைகளைக் கொண்டு தாலிபான்களின் ஆதிக்கத்தை சிறிது சிறிதாகத் தகர்த்து வருவதாகவும், தங்கள் படைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டே தாலிபான்களுக்கு எதிரான போர் நடத்தப்படுவதாகவும் குரேஷி கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பிரபல ஹாலிவுட் நடிகை நிக்கோலே கிட்மன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக இந்தியா வருகிறார். ஆஸ்கர் விருது வென்ற நடிகையான நிக்கோலே கிட்மன்தி எய்த் ஒன்டர்’ எனும் படத்தில் நடிக்க உள்ளார். .

அகழ்வாராய்ச்சியை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் சில காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் படப்பிடிப்பு நடைபெறஉள்ளது. இதற்காக நிக்கோலே கிட்மன் இந்தியா வந்துள்ளார். உதய்பூரில் உள்ள புகழ் பெற்ற லேக் பேலஸ் ஓட்டலில் அவர் தங்க திட்டமிட்டுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!
போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்கள் அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் முன்னிலையில் திறந்த வெளி திருப்பலி பூசை ஒன்றை நடத்தியுள்ளார்.
போப்பாண்டவராக பெனடிக்ட் அவர்கள் முதல்முறையாக ஆப்பிரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கு அவர் கலந்துகொள்ளும் மிகப்பெரிய நிகழ்ச்சி இதுதான்.
ரோஸ் அங்கி அணிந்திருந்த போப்பாண்டவர், கடும் வெயிலில் நெற்றி வியர்வையைத் துடைத்தபடி பக்தர்கள் மத்தியில் உரையாற்றினார்.
1975ல் விடுதலை பெற்ற பின்னர் பல ஆண்டு காலம் பயங்கர உள்நாட்டுப் போரில் சிக்குண்டிருந்த அங்கோலாவின் மக்கள் தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதில் பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
யுத்தம், இனவாதம், பேராசை போன்ற தீமைகள் ஆப்பிரிக்காவை காரிருளாய்ச் சூழ்ந்துள்ளது பற்றி அவர் பேசினார்.
!!!!!!!!!!!!!!!!!!!
சீனாவின் வடமேற்கே குயிங்கை மாகாணத்தில் இடம்பெற்ற வன்செயல்களை அடுத்து, திபெத்திய பிக்குகள் 6 பேரை தாம் கைதுசெய்துள்ளதாகவும், வேறு 90க்கும் அதிகமானோரின் சரணடைவதற்கான கோரிக்கையை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.
பொலிஸ் காவலில் இருந்து திபெத்திய பிரிவினை ஆதரவளர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் தப்பித்ததை அடுத்து, சனிக்கிழமையன்று குறைந்தது 100 பேர் பொலிஸ் நிலையம் ஒன்றை தாக்கியதாக சீன சின்குவா அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அந்த நபரின் நிலைமை குறித்த வெளியான தவறான வதந்திகளால் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏமாந்து விட்டார்கள் என்று பொலிஸார் கூறுகிறார்கள்.
ஆனால், ஒரு திபெத்திய பிக்குவான, அந்த நபர் ஒரு ஆற்றில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டதாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள திபெத்தியர்களால் நடத்தப்படும் இணையத்தளம் ஒன்று கூறுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!
Øu]ôs A§To ToÅv Ø`ôWlTôp 2007-p TR® ¿dLm ùNnVlThP Tô¡vRôu EfN ¿§Uu\j RûXûU ¿§T§ Cl§Lôo ØLUÕ ùNüj¬ Oô«tßd¡ZûU TR®úVt\ôo.
Tô¡vRô²p 2007 SYmT¬p ùSÚdL¥ ¨ûXûV AlúTôûRV A§To ToÅv Ø`ôWl AUpTÓj§]ôo. ARtÏ EfN ¿§Uu\m Jl×Rp A°dLôRRôp, Cl§Lôo ØLUÕ ùNüj¬ûVÙm, úUÛm 60 ¿§T§Lû[Ùm Ø`ôWl TR® ¿dLm ùNnRôo.
CûRVÓjÕ, AYoLû[ ÁiÓm TR®«p AUojRdúLô¬ LÓm úTôWôhPm ùY¥jRÕ. Øu]ôs ©WRUo SYôv ù`Ãl RûXûU«p úTôWôhPm AiûU«p YÛYûPkRûR AÓjÕ, ùNüj¬ Es°hP 60 úTûW T¦«p AUojR A§To B£l A# _oRô¬ Jl×d ùLôiPôo.
Ck¨ûX«p, EfN ¿§Uu\j RûXûU ¿§T§VôL ùNüj¬ Oô«tßd¡ZûU TR®úVt\ôo. CûRd ùLôiPôÓm ®RUôL, ùNüj¬«u A§LôWléoY CpXj§p AYWÕ BRWYô[oLs ùLô¥úVt±]o. C§p ùNüj¬ TeúLtL®pûX. _oRô¬«u Lh£ûVf úNokR A§Úl§ RûXYoLs Es°húPôo C§p TeúLt\]o
::::::::::!!!!!!!!!!!!!!!!!!!!!!
திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா தென்னாப்பிரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஒத்திப்போடச்சொல்லி தென்னாப்பிரிக்க அரசாங்கம் கோரியிருப்பதாகவும், தலாய் லாமாவுக்கு அது இதுவரை பயண விசா வழங்கியிருக்கவில்லை என்றும் லாமாவின் பிரதிநிதிகள் கூறுகின்றனர் .
2010ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்த தென்னாப்பிரிக்கா தயாராகிவரும் நிலையில், கால்பந்து விளையாட்டைப் பயன்படுத்தி இனத்துவேஷத்துக்கு எதிரான கருத்தைப் பரப்பும் வழிமுறைகள் பற்றி விவாதிப்பதற்காக வரும் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தலாய் லாமா அங்கு பயணிக்கவிருந்தார்.
நொபெல் அமைதிப் பரிசு வென்ற வேறு சில பிரமுகர்களும் அந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.
தலாய் லாமா தென்னாப்பிரிக்கா வருவதை நிறுத்துமாறு தென்னாப்பிரிக்காவிடம் சீன அரசு வலியுறுத்தியிருந்ததாக சீன தூதரக அதிகாரியை மேற்கோள்காட்டி தென்னாப்பிரிக்க நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!
sports
பல கோடிகள் புரளும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளை பாதுக்காப்புக் காரணங்களையிட்டு இந்தியாவுக்கு வெளியே வேறு நாடுகளில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டிகள் நடத்தப்படவிருக்கும் நாட்களில் இந்திய தேர்தலும் நடக்க விருப்பதால் , அவற்றுக்கான இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அங்கீகாரத்தை பெறமுடியவில்லை. கிரிக்கெட் உலகின் முன்னணி வீரர்களை இணைப்பதால் இந்தப் போட்டிகள் பிரபல்யம் பெறுகின்றன.
அண்மையில் பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!*
இந்தியன் பிரீமியர் லீக் (.பி.எல்) இருபது-20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஏமாற்றமளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் , மும்பை இண்டியன்ஸ் அணியின் தலைவருமான சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார் .

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சச்சின், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில், .பி.எல். தொடர் இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் என்றுதான் இந்திய மக்கள் விரும்புகின்றனர்.

ஆனால் துரதிருஷ்டவசமாக .பி.எல். தொடரை அயல்நாட்டில் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு .பி.எல் . அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். இது ஏமாற்றமளித்தாலும் வேறு வழியில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

.பி.எல் தொடர் அயல்நாட்டில் நடைபெற்றாலும், இப்போட்டிகளுக்கு அயல்நாடு வாழ் இந்தியர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும் என்பது ஒரு வகையில் ஆறுதல் அளிப்பதாகவும் சச்சின் குறிப்பிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வரும் வியாழனன்று துவங்கும் நியூஸீலாந்துஇந்திய அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டிக்கான நியூஸீலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஜீதன் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேகப் ஓரம் இந்த டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை .

ஹேமில்டன் டெஸ்டிற்கு அறிவிக்கப்பட்ட 13 வீரர்கள் அணியில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் பிரன்ட் ஆர்னெல் இந்த அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் காயம் காரணமாக நீக்கப்பட்டதாக தேர்வுக் குழு தலைவர் கிளென் டர்னர் தெரிவித்தார்.

காயமடைந்த பேட்ஸ்மென் டேனியல் ஃப்ளின், பந்து வீச்சாளர் பிரையன் ஆகியோர் அணியில் உள்ளனர் . இவர்கள் இருவரும் வியாழக்கிழமைக்குள் முழுதும் குணமடைந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1 euro =156.34sl /69.12in
1us $ =114.10sl /50.44in
1swiss fr = 101.81sl /45.01in
1uk pound =166.21sl / 73.48in
1sudi riyal =30.42sl /13.45in