எஸ்ஸார் நிறுவனத்தின் விற்பனை மையம்

சென்னையில் எஸ்ஸார் குழுமம், உருக்கு தகடு, கம்பி போன்றவைகளை வாடிக்கையாளர்களின் தேவைக்கு தகுந்தாற்போல் விற்பனை செய்யும் மையத்தை திறந்துள்ளது. இது தாம்பரத்தை அடுத்துள்ள ஒரகடத்தில் ரூ. 75 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை எஸ்ஸார் இயக்குநர் சசி ரூயா, சனிக்கிழமை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், எஸ்ஸார் நிறுவனத்தின் ஹஸாரியா உருக்காலையில் உற்பத்தி செய்யப்படும் தகடுகள், வாடிக்கையாளர்கள் விரும்பும் அளவுகளில் விற்பனனை செய்யும் மையமாக இருக்கும்.

உருக்கு, இரும்பு தகடுகளை வாங்குபவர்கள், உருக்காலைகள் விற்பனை செய்யும் அளவுகளில் வாங்கி, அவர்களின் தேவைக்கு தகுந்தாற் போல் வெட்டிக் கொள்வார்கள். ஒரகடத்தில் அமைந்துள்ள மையத்தில், வாடிக்கையாளர்களின் தேவைக்கு தகுந்தாற்போல் பல அளவுகளில் விற்பனை செய்யப்படும். இது சிறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மையம் வருடத்திற்கு 2.5 லட்சம் டன் தகடுகளை வெட்டி அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக ரூ. 30 கோடி மதிப்பிலான 10 ஆயிரம் டன் தகடுகளை வெட்டி அளிக்கும்.

எஸ்ஸôர் குழும நிறுவனங்களின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதில் நிறுவனத்துக்கு உடன்பாடு இல்லை. ஏற்கனவே எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன பங்குகள் ஏற்கெனவே பங்குச் சந்தையில் பட்டியலிடுவதிலிருந்து வெளியேறியுள்ளது.

எஸ்ஸார் ஆயில், எஸ்ஸார் ஷிப்பிங், எஸ்ஸார் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனப் பங்குகளையும், பங்குச் சந்தை பட்டியலிடுவதிலிருந்து நீக்கப்படும்.

தனியார் முதலீடு மூலமே விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை நிறுவனம் கொள்கையாக கொண்டுள்ளது. இதனால் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதில் அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை.

எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தின் வடினார் சுத்திகரிப்பு விரிவாக்கத் திட்டம், அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் எஸ்ஸார் ஸ்டீல் மற்றும் சுரங்க விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் அயர்நாடுகளில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் நிறுவனங்களை கையகப்படுத்துவதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது மியான்மரில் இரண்டு எண்ணெய்க் கிணறுகளில் எண்ணெய் எடுக்கும் பணியில் எஸ்ஸôர் ஈடுபட்டுள்ளது என்று சசி ரூயா தெரிவித்தார்.

Source & Thanks : /tamil.webdunia

Leave a Reply

Your email address will not be published.