விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை பூரணமாக இல்லாதொழிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள்: கெஹலிய ரம்புக்வெல்ல

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியாக தோற்கடித்தாலும், போராட்ட இயக்கமென்ற வகையில் அதனை பூரணமாக இல்லாதொழிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் பலம் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டதாக கருத முடியாது எனவும், எந்த நேரத்தில் தாக்குதல் நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள படையினர் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த கால எல்லையை உறுதியாக கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படாத வகையில உலக நாடுகளினால் வழங்கப்படும் உதவிகளை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இல்லை என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல பேராளிகளுக்கும் மன்னிப்பு வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ள விரும்பும் எந்தவொரு விடுதலைப் புலி உறுப்பினருக்கும் அரசாங்கம் தடை ஏற்படுத்தாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் மக்களைப் போன்றே படைவீரர்களுக்கும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஓர் இன சமூகத்திற்கு என தனிப்பட்ட ரீதியலான பிரச்சினைகள் எதுவுமில்லை என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்குமிட வசதி பிரச்சினை, ஊழியர்களுக்கு சம்பளப் பிரச்சினை என நாடு முழுவதிலும் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் ஒர் இனச் சமூகத்திற்கும் மட்டும் தனித்த வகையில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.