புலிகளின் போர் நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் மீண்டுமொருமுறை நிராகரித்துள்ளது.

நிபந்தனைகளற்ற சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நேற்றைய தினம் விடுத்த
வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த காலங்களில் போதுமானளவு போர் நிறுத்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாகவும், அவற்றில் எவ்வித பயனும்
கிட்டவில்லை எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச சமூகமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் தொடர்ச்சியாக போர் நிறுத்த கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ள எவ்வித முனைப்பும் காட்டவில்லை.

இராணுவ நடவடிக்கைகளின் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.