சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள நிதிக்கு எதிரான நிரந்தர தடையுத்தரவுக்கு முனைப்பு

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ள 1.9 பில்லியன் டொலர்கள் கடனுதவிக்கு எதிராக நிரந்தர தடையுத்தரவை விதிக்கக்கோரி கொலம்பிய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான சட்டத்தரணி புருஸ் பெய்ன்,இன்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால், அல்லது ஆதரவாக தீர்ப்பளித்தால், அதன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் இலங்கைக்கு எதிரான போக்கை கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நெருக்கடி காரணமாகவே இலங்கைக்கு நிதியுதவியை வழங்குவதாக தெரிவித்தால் அதற்கு என்ன பதிலை தெரிவிக்கப்போகிறீர்கள் என புரூஸ் பெய்னிடம் கேட்டபோது, மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் போது, அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடு என்ற வகையில் அமெரிக்கா ஆதரவளிக்க முடியாது என தெரிவித்தார்

இந்தநிலையில் அமெரிக்கா இந்த தடையுத்தரவை விதிக்க தமது 17 வீத வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்றே தாம் எதிர்ப்பார்ப்பதாக புரூஸ் பெய்ன் குறிப்பிட்டார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.