வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: இன்று (ஞாயிறு) 34 பொதுமக்கள் படுகொலை;40 பேர் காயம்

வன்னியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் எறிகணைத் தாக்குதல்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை 9 சிறுவர்கள் உட்பட 34 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் வலைஞர்மடம் பகுதிகளை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இதன்போது 9 சிறுவர்கள் உட்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

வாணி (வயது 05)
க.அருச்சுனன் (வயது 06)
ம.விதுசன் (வயது 03)
கே.மருதன் (வயது 07)
கி.தேவகி (வயது 05 மாதம்)
வி.தேனுஜா (வயது 03)
சு.விதுரன் (வயது 06)
ம.மதிநிலா (வயது 10)
து.தேவதீசன (வயது 12)
க.கனகம்மா (வயது 78)
து.நாகேஸ்வரி (வயது 26)
வீ.நெல்சன்குமார் (வயது 34)
அ.துரைராசா (வயது 67)
த.அருச்சுனன் (வயது 60)
பெ.அருமைநாயகம் (வயது 33)
வை.அன்னமேரி (வயது 56)
இ.அன்னமலர் (வயது 55)
தே.விஜயமாலா (வயது 28)
க.விஜயகுமாரி (வயது 35)
வே.ரஞ்சன் (வயது 38)
மா.மரியம்மா (வயது 47)
க.மணிமாறன் (வயது 55)
சி.மருமலர் (வயது 79)
வீ.மரியம்மா (வயது 68)
த.தீசன்குமார் (வயது 74)
வீ.மரிஸ்ரலா ராணி (வயது 56)
வ.காருண்யா (வயது 23)
மா.இருதயதாஸ் (வயது 72) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 25 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

ஏனையோரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.