மட்டக்களப்பில் முல்லைத்தீவு மாணவி தீக்குளித்து தற்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்துள்ளார்.

வந்தாறுமூலை கலைப்பீடத்தின் மூன்றாம் வருட மாணவியான இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 நிமிடளவில் தற்கொலை செய்து கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் நிதர்சனா (வயது 24) என்பவரே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவர் ஆவார்.

பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ள குளியறையில் இந்த மாணவி தனக்குத் தானே தீ மூட்டினார் என்றும் இவரின் அலறல் சத்தம் கேட்டு சக மாணவர்கள் குளியலறை கதவினை உடைத்து மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் வழியிலேயே மாணவியின் உயிர் பிரிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.