தமிழ் மக்களின் விவகாரத்தால் ஐ.நா.வில் நாடுகளிடையே பிளவு

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இரு வேறுபட்ட கருத்துக்கள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒஸ்ரியா, மெக்சிக்கோ, கோஸ்ராறிக்கா ஆகிய நாடுகளின் ஊடாக அமெரிக்கா முன்வைத்துள்ளது.

வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பான இந்த விவாதத்தை சீனா, ரஸ்யா மற்றும் ஜப்பான், உகண்டா, துருக்கி, வியட்நாம், லிபியா ஆகிய ஏழு நாடுகள் எதிர்த்து நின்று சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன.

15 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஏனைய நாடுகள் இலங்கையில் தோன்றியுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றன.

எனினும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து தமது தரப்பு வாதங்களை முன்வைக்குமாறு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சகம் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவுக்கான தூதரகத்தை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.