போர் நடவடிக்கையால் முல்லைத்தீவில் சிறார்கள் உளநலப் பாதிப்பு

சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக சிறார்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொதுமருத்துவமனை உளநலப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா படையினரின் வான்தாக்குதல் எறிகணைத் தாக்குதல் என்பவற்றினால் உறவுகளைப் பறிகொடுத்தும் தாக்குதல்கள் நடைபெறும் இடங்களில் படுகொலைகளை நேரில் பார்த்தும் அங்குள்ள சிறார்கள் உளநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரப்படும் சிறார்கள் பெற்றோர்களினால் கைகள் இரண்டும் கட்டப்பட்டு கொண்டு வரப்படும் துயரநிலை தொடர்வதாகவும் மருத்துவமனை விபரங்கள் தெரிவக்கின்றன.

அத்துடன் பாடசாலைகள் சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக இயங்காமல் இருப்பதன் காரணமாக சிறார்கள் மத்தியில் உளப்பாதிப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும் களத்தில் உள்ள உளவளத் துணையாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.