ஐ.நா.வில் சிறிலங்காவுக்கு ஆதரவாக சீனாவுடன் இணைந்த ரஸ்யா

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்கா விவகாரம் விவாதிக்கப்படுவதை தடுக்கும் முயற்சிகளில் சீனாவுடன் ரஸ்யாவும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் சிறிலங்காவின் தற்போதைய நிலை தொடர்பான விவாதங்களை தடுக்கும் முயற்சிகளை சீனா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

தற்போது சீனாவின் இந்த முயற்சியில் ரஸ்யாவும் மேலும் சில ஆசிய நாடுகளும் இணைந்துள்ளன.

ஒஸ்ரியா, மெக்சிக்கோ, கோஸ்ரா றிகா போன்ற நாடுகள் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக ஏனைய விவகாரங்கள் எனும் தலைப்பில் பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட வேண்டும் என கோரிக்கையை விடுத்துள்ளன.

எனினும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை கொண்ட சீனா மற்றும் ரஸ்யா போன்ற நாடுகள் சிறிலங்காவை பாதுகாப்பதற்கு தனது வீட்டோ உரிமையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் மெக்சிக்கோ கொண்டு வந்த தீர்மானத்தை ரஸ்யா எதிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.