‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (22.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று காலை முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சுதர்சனா ( வயது 23 ) என்ற கலைப் பீட மூன்றாம் ஆண்டு மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

விடுதி குளியல் அறைக்குள் தனக்கு தானே இம் மாணவி தீ மூட்டியமாகவும் ,மாணவியின் அவலக் குரல் கேட்டு அங்கு விரைந்த மாணவர்கள் குளியலறை கதவை உடைத்து உள்ளே நுழைந்து மாணவியை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது .

இப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

முல்லைத்தீவிலுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 26 ம் திகதி முல்லைத்தீவைச் சேர்ந்த மற்றுமொரு மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பையே உலுக்கும் வகையில் இன்று காலையில் கேட்ட குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களுக்கு கொழும்பு துறைமுகப் பகுதியில் இடம்பெற்ற போர் ஒத்திகையே காரணம் என அந்நாட்டு கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன .
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 நிமிடம் தொடக்கம் சுமார் ஒரு அணி நேரத்துக்குத் தொடர்ச்சியாக இந்தச் சத்தங்கள் கேட்டன.
துறைமுகப்பகுதியில் இருந்து கேட்ட இந்த பாரிய சத்தங்களால் கொழும்பு நகரில் தாக்குதல் ஒன்று நடைபெறுகின்றதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது.

கொழும்புத் துறைமுகத்தை அடுத்துள்ள பகுதிகளில் திடீரென கடற்படையினரும் குவிக்கப்பட்டு வீதிகளும் மூடப்பட்டன .
இதனால் துறைமுகப் பகுதியில் தாக்குதல் ஏதாவது நடைபெறுகின்றதா என்ற அச்சம் அதிகரித்தது .
இருந்த போதிலும் தாக்குதல் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் துறைமுகத்தின் மீது தாக்குதல் ஒன்று தொடுக்கப்பட்டால் அதனை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பான போர் ஒத்திகை ஒன்றே நடைபெற்றதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட எல்லைப்புற மேய்ச்சல் தரைகளில் மேய்ச்சலுக்காக விடுப்பட்டு காணாமல் போன கால்நடைகளில் ஒரு பகுதியை மட்டக்களப்பு மாவட்ட கால் நடைகளின் உரிமையாளர்கள் கண்டுபிடித்து நேற்றிரவு அழைத்து வந்துள்ளனர்.

வவுணதீவு மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த கால்நடை பண்ணையாளர்களுக்கு சொந்த மான சுமார் 500 மாடுகள் கடந்த பெரும்போக வேளான்மைச் செய்கையின் போது மேய்ச்சலுக்காக மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட எல்லைப்புற மேய்ச்சல் தரைகளில் மேயச்சலுக்காக விடப்படடிருந்தது.

பெரும்போக வேளாண்மை அறுபடை முடிந்த பின்பு கால்நடைகளை அழைத்து வர சென்றவர்களில் 4 பேர் காணாமல் போனதையடுத்து ஏனைய கால் நடை உரிமையாளர்களிடையே ஒரு வித அச்ச நிலை ஏற்பட்டிருந்தது.

இக் கால்நடைகளை கண்டு பிடித்து அழைத்து வருவது குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் உதவிகள் நாடப்பட்டிருந்தது.நேற்று குறித்த அமைப்பின் வழித்துணையுடன் பிரதேச செய்லாளர்கள் ,கால் நடை உரிமையாளர்கள் ,மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழு எல்லைப்புறத்திற்கு சென்றிருந்தனர்.

அம்பாறைமகாஓயா வீதியிலுள்ள 23 முதல் 26 ஆம் மைல் வரையிலான பகுதியில் மேயந்து கொண்டிருந்த சுமார் 60 மாடுகள் தங்களால் கண்டு பிடிக்கப்பட்டு நேற்று அழைத்து வரப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணையொன்றின் உரிமையாளரான பாக்கியராசா இருதயம் தெரிவிக்கின்றார்.

போதிய நேரமின்மையால் ஏனைய கால்நடைகளை தேடி கண்டுபிடித்து அழைத்து வர முடியவில்லை.பிறிதொரு தினத்தில் .நா.உயர்ஸ்தானிகராலய வழித்துணையுடன் செல்ல உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கல்முனைப் பிரதேசத்திலுள்ள சாய்ந்தமருது பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக பயணம் செய்து கொண்டிருந்த வேளை இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு தங்களால் சைகை காட்டப்பட்ட போது அதனை நிறுத்தாமல் சென்றதாகவும் இதன் காரணமாகவே துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

காரைதீவைச் சேர்ந்த தங்கவேல் செந்துரூபன்(வயது 29) மற்றும் தன்னார்வ தொண்டர் நிறுவனமொன்றில் சேவையாற்றும் கிருஸ்ணபிள்ளை பிரதீபன் (வயது 28 ) ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னி மக்களுக்கு தேவையான மருந்து வகைகளை வன்னிக்கு எடுத்துச் செல்வதற்காக திருகோணமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள், அனர்த்த நிவாரண அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். வன்னியில் இயங்கி வந்த புதுமாத்தளன் வைத்தியசாலை மருந்துகள் இல்லாமையால் கடந்த ஒருவாரகாலமாக செயலிழந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது எனக் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

மருந்துகள் இல்லாததால் கடந்த பதினான்காம் திகதி முதல் புது மாத்தளன் வைத்தியசாலையில் வைத்திய செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் இதுகுறித்து மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அறிவித்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ரீ. வரதராஜா தெரிவித்திருந்தார். இது குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:

வன்னி மக்களுக்கு தேவையான ஐம்பத்தியிரண்டு வகையான மருந்து வகைகள் ஏற்கனவே திருகோணமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு விட்டன. அவற்றை அங்கிருந்து புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . எனது சகல அதிகாரங்களையும் பயன்படுத்துவேன் vd அவர் இவ்வாறு கூறினார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இரு வேறுபட்ட கருத்துக்கள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒஸ்ரியா, மெக்சிக்கோ, கோஸ்ராறிக்கா ஆகிய நாடுகளின் ஊடாக அமெரிக்கா முன்வைத்துள்ளது.
வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பான இந்த விவாதத்தை சீனா, ரஸ்யா மற்றும் ஜப்பான், உகண்டா, துருக்கி, வியட்நாம், லிபியா ஆகிய ஏழு நாடுகள் எதிர்த்து நின்று சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன.
15 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஏனைய நாடுகள் இலங்கையில் தோன்றியுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றன.
எனினும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து தமது தரப்பு வாதங்களை முன்வைக்குமாறு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சகம் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவுக்கான தூதரகத்தை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சை சிறிலங்கா படையினரின் முகாமுக்கு அண்மையில் படையினரால் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
படுவான்கரையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தவராஜா (வயது 40) என்ற குடும்பஸ்தரே கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
உன்னிச்சை 6 ஆம் கட்டையில் உள்ள சிறிலங்கா படையினரின் முகாமுக்கு அண்மையில் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை இவர் கடத்தப்பட்டிருந்தார்.
தனது வளர்ப்பு மாடு ஒன்றை விற்பனை செய்துவிட்டு ஒரு லட்சம் ரூபா பணத்துடனும் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே மேற்படி படை முகாமுக்கு அருகில் வைத்து இவரை படையினர் கடத்தியிருந்தனர்.

உன்னிச்சை 6 ஆம் கட்டையில் உள்ள படை முகாமில் படையினர் அவரை வழி மறித்ததை பிரதேச மக்கள் நேரில் கண்டுள்ளனர். இது குறித்து இவரது குடும்பத்தினருக்கு பிரதேச மக்கள் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நேரமாகியும் இவர் வீடு திரும்பாததால் இவரது உறவினர்கள் மேற்படி படை முகாமுக்குச் சென்றுள்ளனர். எனினும் தவராஜை தாங்கள் கைது செய்யவில்லை என்று படையினர் தெரிவித்துள்ளனர்.

மாடு விற்பனை செய்த பணத்தை வைத்திருந்த காரணத்தினால் அந்த பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் விசாரணை செய்வதாகக் கூறி வழிமறித்த படையினர், அவரைக் கடத்திச் சென்று பின்னர் கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட வேளை தவராஜா பால்மா, பழ வகைகள் போன்ற உணவுப் பொருட்களை கையில் வைத்திருந்ததாகவும் நேரில் கண்ட பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ் குடாநாட்டில் அத்தியாவசிய பொருள்கள் பலவற்றின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன .
யாழ் குடாவில் அரிசி மற்றும் ஏனைய பல அத்தியாவசிய பொருள்கள் நாட்டின் ஏனைய பகுதியை விட பல மடங்கு அதிகரித்துக் காணப்படுவதாகவும், குறிப்பாக அரிசியின் விலை 120 ரூபாவுக்கு மேல் விற்கப்படுவதாகவும் யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
வாழைப்பழம் மற்றும் பழ வகைகள் 200ரூபாவிற்கு மேல் விற்கப்படுவதாகவும் தெரிவித்த அவர் , யாழ்ப்பாணத்துக்கான தரைப்பாதை திறக்கப்பட்டு உள்ளதாகவும் பொருள்கள் விலை பல மடங்கு குறைக்கப்படும் எனவும் சிறீலங்கா அரசும் அரசின் யாழ் அதிகாரிகளும் தொடர் பரப்புரைகள் மேற்கொண்டு வந்த நிலையில் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
நியாய விலைக் கடைகளில் கூட பொருள்கள் பல மடங்கு அதிகரித்த விலையில் விற்கப்படுவதாகவும், இதில் அரச அதிகாரிகள் மற்றும் விலைக் கபட்டுப்பாட்டாளர்களுக்கு ஒரு பகுதி கையூட்டாகச் செல்வதால், அவர்கள் இதனைக் கண்டு கொள்வதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது .
!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பு மற்றும் அதன் சுற்றயல்களில் கடந்த ஜனவரி முதலாம் நாள் முதல் மார்ச் 21ஆம் நாள்வரை 52 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களின் சிலர் பற்றி தெரிய வந்துள்ள போதிலும், பலர் எங்குள்ளார்கள் என்பது பற்றி, கைது செய்யப்பட்டனரா? கடத்தப்பட்டனரா? அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்னும் விடயம் தெரியாது உள்ளதாக கடத்தல்கள் மற்றும் காணமல் போதல் தொடர்பான கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த நாட்களில் காவல்துறை, படை மற்றும் ஊர்காவல் படை சீருடை அணிந்தவர்களால் கடத்தப்பட்ட சிலர் அதாவது 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர
திருகோணமலையில் கடத்தப்பட்ட சிறுமி கொல்லப்பட்டு இருப்பதுடன், மேலும் இருவர் காவல் நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும், சிலர் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 38 பேர் பற்றி எந்த தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
கடத்தல்கள், காணாமல் போதல்கள் என்பன சிறீலங்காவின் பல பாகங்களிலும் அதிகரித்துள்ள நிலையில் கொழும்பில் பலர் கடத்தப்பட்டு கப்பம் வசூலித்த பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளதும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இன்னும் பலர் படையினரால் விடுவிக்கப்படும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக காணமல் போதல் பற்றி உரிய முறையில் அறிவிப்பதில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளை இன்று இந்தியாவிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிராந்திய அதிகாரிகள் அனைவருடனும் மனித உரிமைகள் பற்றி விவாதிக்க உள்ளதாகவும், அண்மையில் நேபாளத்துக்கு மேற்கொண்ட பயணத்தையடுத்து இந்தியப் பயணம் அமைவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் உதவியுடன் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் வல்வளைப்பு போரில் சிக்கி தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் சிறீலங்காவில் பொதுமக்களை அரச படையினர் கொல்வதாகவும், சிறுவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கடும் கண்டனங்களை கடந்த வாரம் வெளியிட்ட தனது ஆண்டறிக்கையில் நவனீதம் பிள்ளை தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் அந்தியா செல்வது ஆய்வாளர்களால் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!
புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சந்தர்பவாதிகள் எனவும், விவேகம் அற்றவர்கள் என்றும் , அதனால்தான் சிறீலங்காவின் தலைவர் மகிந்தவை அவர்கள் தூற்றுவதாகவும் கிழக்கின் துணைப்படைக் குழுவின் தலைவரும், If;fpauhr;rpaj;jpy; rpiwjz;liz ngw;wtUk; அந்தஸ்தற்ற அமைச்சருமான MAjjhup கருணா என அழைக்கப்பட்ட முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
வன்னியில் நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்ற போதிலும் , வன்னியில் நடாத்தப்படும் படை நடவடிக்கையை நிறுத்தும்படி புலம்பெயர்ந்த தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும்If;fpauhr;rpaj;jpy; rpiwjz;liz ngw;wtUk; அந்தஸ்தற்றஅமைச்சருமான MAjjhup முரளிதரன் கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
தான் அணி சேர்ந்துள்ள சுதந்திரக் கட்சி தலைமையிலான சிறீலங்கா அரசு போரில் வெற்றி பெற்றால் வெளிநாடுகளில் தமது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிடும் என்தாலேயே புலம்பெயர்ந்த மக்கள் இவ்வாறு செய்வதாகவும் அவர் கூறினார்.
சிறீலங்காவின் அரச தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பப்படும் விவாத நிகழ்ச்சி ஒன்றிலேயே அவர் சிறீலங்கா அரசுக்கும், ஆளும் கட்சிக்கும் விசுவாசமான இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கின் ஆயுதக்குழுவான T.M.V.P தான் திருகோணமலையில் அண்மையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள மாணவியின் கொலையில் நேரடியாக தொடர்பு கொண்டது எனவும் வருவதாகவும் If;fpauhr;rpaj;jpy; rpiwjz;liz ngw;wtUkஅந்தஸ்தற்றஅமைச்சருமான MAjjhup முரளிதரன் இந்த நிகழ்ச்சியில் கூறினார்.
அந்த ஆயுதக்குழுவில் இருந்து தான் தற்போது வெளியேறி இருப்பதாகவும், அந்த ஆயுதக்குழுவின் தலைவர் உட்பட அனைவரும் ஒழுக்கம் அற்றவர்கள் எனவும், கடத்தல், கப்பம் வசூலிப்பு மற்றும் பல சீரழிவு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதை தான் பலமுறை பிள்ளையானுக்கு சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறான ஒழுற்றமற்ற ஆயுதக் குழுவினராலேயே கிழக்கில் படுகொலைகள் மற்றும் கடத்தல்கள் நடைபெறுவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.*
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ் குடாநாட்டுக்கு மக்களின் நுகர்வுக்கு தேவையான பொருள்களை கப்பலில் தொடர்ந்தும் எடுத்துவர சிறீலங்காவின் அத்தியாவசிய சேவைகள் ஆணையகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது .
யாழ் குடாநாட்டுக்கான தரை வழிப்பாதையை 20 வருடங்களின் பின்னர் தாம் ஏற்படுத்தியுள்ளதாகவும் , அதன் ஊடாக பொருள்கள் எடுத்துச்செல்லவும், பயணங்கள் மேற்கொள்ளவும் தாம் வழி ஏற்படுத்தியுள்ளதாகவும் சிறீலங்கா அரசு தொடர்ந்து பரப்புரைகளை முன்னெடுத்து வந்தது.
இந்த நிலையில் மிகவும் செலவு கூடிய மற்றும் நேர விரயம் கூடிய கடல் வழியால் மீண்டும் பொருள்களை கொண்டு செல்ல அரசு ஏற்பாடு செய்து வருகின்றமை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த வாரம் பெரும் எடுப்பிலான பரப்புரைகளுடன் ஆரம்பித்த -9 யாழ்கண்டி வீதியின் ஊடான பொருள் வழங்கலின்போது 30இற்கும் மேற்பட்ட பேரூந்துகளில் படையினரும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இதன்போது விடுதலைப்புலிகள் திடீரென சிறீலங்கா படையினரின் எறிகணைத்தளத்தினை கைப்பற்றி அங்கிருந்து நடத்திய தாக்குதலால் படையினரது முயற்சிகள் பாரிய சிக்கலை எதிர்நோக்கியிருந்தன.
இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கு கடல் மார்க்கமாக பொருள்களை கொண்டு செல்ல 1000 கிலோவுக்கு 80 அமெரிக்க டொலர் கட்டணமாக செலுத்தப்படுவதும், இதில் பெரும் பகுதி சிறீலங்கா அரசுத் தலைவரின் சகோதாரான் சமல் ராஜபக்சவுக்கு செல்வதும் சுட்டிக்காட்டத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவில், புதுக்குடியிருப்புப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை தொடர்ந்து இடம்பெறுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார நேற்று மாலை தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பின் மத்திய பகுதி முழுமையாகப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பரந்தன் 35 வீதியில் மேலும் 1.5கி.மீற்றர் பாதையை படையினர் மீட்டுள்ளதுடன் இரணைப்பாலைச் சந்தியையும் தமது கட்டுப்பாட்ட்டின் கீழ் கொண்டுவந் துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 28 விடு தலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர் களின் ஐவரின் cடலத்தை படையினர் மீட்டுள்ளனர் என்று ஊடகத் தகவல் மத்திய நிலையம் தெரிவித்தது.

இதேவேளை நேற்று முன்தினம் அம்பலவன் பொக்கணை புதுக்குடியிருப்புப் பகுதிகளில் படையினரின் காவலரணுக்குள் ஊடுருவிய விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் நடந்த மோதல்களில் வி Lதலைப்புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது என்றும் ஊடக நிலையம் மேலும் தெரிவித்தது.

இதற்கிடையில் விடுதலைப்புலிகளின் தலைவரும் அவரது மகன் ஸாள்ஸ் அன்ரனியும் அரசு அறிவித்த பாதுகாப்பு வலயப்பகுதியில் ஒளிந்துருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்கள் பகலில் கூடுதலான நேரம் பதுங்கு குழிக்குள் இருப்பதாகவும் சாதாரண உடையில் அப்பகுதியில் நடமாடுவதாகவும் எவ்வாறாயினும் அவர்கள் இருவரையும் அரச படையினர் சுற்றிவளைத்திருப்பதாகவும் அங்கிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்கள் தெரிவித்ததாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
:::::::::::::::::::::::::::::!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள கர்ப்பிணிகளும் ,கல்வி பயி லும் மாணவர்களும் அவர்களின் உறவினர்களுடன் தங்கி யிருக்க விரும்பினால் அதற்கான அனும தியைப்பெற்றுத் தருவதாக அரச அதிபர் கே.கணேஷ் உறுதியளித்துள்ளார் .

இந்து அமைப்புக்களின் ஒன்றியப்பிரதி நிதிகளுடன் இடம் பெற்ற சந்திப்பில் அரச அதிபர் இத் தகவலை வெளியிட்டார். நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை பார்வையிட்டு அவர்களின் நிலையை அறியும் பொருட்டு ஒன்றியத்தின் பிரதி நிதிகள் ஏழுபேரை இந்த நிலையங்களுக் குச் செல்ல அரச அதிபரால் அனுமதி வழங் கப்பட்டுள்ளது என்றும் நேற்று நடைபெற்ற ஒன்றியத்தின் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.

விரைவில் இவர்களை நலன் புரி நிலையங்களுக்குச் சென்று அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடி தேவைகளை இனங் காண்பார்கள் எனறும் தெரிவிக்கப்பட்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தாம் நினைத்த, தேவையான நேரத் தில் வெளியே சென்று வரவும் வெளியில் இருக்கும் தமது உறவினர்கள் முகாமுக்கு வந்து தம்மைப்பார்க்கவும் வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரம் வவுனியா நலன்புரி முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கத்திடம் மேற்குறித்த கோரிக்கைகளை மக்கள் விடுத்துள்ளனர் என்ற தகவலை அவரே தெரிவித்தார்.

அங்கு அரிசி, மா, சீனி போன்ற சில அத்தியாவசியப் பொருள்களையே பெறக் கூடியதாக உள்ளது. ஏனைய பொருள் களை பெறமுடியாதுள்ளது. அத்துடன் மருத்துவ வசதிகளும் போதிய அளவில் இல்லை என்றும் அவர்கள் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.ஸிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் இவ்வருடம் ஜனவரி 20ஆம் திகதியில் இருந்து மார்ச் 7ஆம் திகதி வரையில் 2683 பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கை ஒன்றில் தெரிவித் திருக்கின்றது.
.நாவின் ஆவணம் ஒன்று தற்செய லாக (உத்தியோகபூர்வமற்ற வகையில்) வெளிப்பட்டுவிட்டதில் இந்த விவரம் காணப்படுகிறது. இன்னர் சிற்றி பத்திரிகையில் இந்த ஆவணம் வெளியிட்டுள்ளது .
இப்போது இந்த ஆவணம் பல பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் இராஜதந்திரிகள் , தூதுவர்கள் கைகளிலும் மூத்த .நா. அரசியல் மற்றும் மனித உரிமை அதிகாரிகளின் கைகளுக்கும் கிடைத்துள்ளது. வன்னிப் போரினால் பொதுமக்கள் இறந்ததற்காக .நா. மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த தகவலை கொழும்பில் மனித உரிமைகள் அமைச்சர் மறுத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அண்மையில் .நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்த ஓர் அறிக்கையில் இலங்கையில் அரசாங்கமும் தமிழ்ப் புலிகளும் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதற்கு சாத்தியம் என்ற வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடுக்க இயலாது.
நவநீதம் பிள்ளையின் அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகின்றீர்களா என்று அந்த நீதிமன்றத்தின் வழக்குத் தொடுனரான லூயிஸ் மோரேனோ ஏகாம்போவிடம் இன்னர் சிற்றிப் பிளேஸ் செய்தியாளர் கேட்டார்.
ஒகாம்போ அதற்கு பதிலளிக்கையில் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கட்டுப்பட்ட தரப்பினராக இல்லை என்றார்.
மேலும் மிக அண்மையில் தாம் ஆபிரிக்காவில் மாத்திரமே போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முயற்சிப்பதாக .நா. பொதுச் சபையின் தலைவர் தம்மீது குற்றஞ்சாட்டியிருந்தாகக் கூறினார்.
இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பான நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுகளை அடுத்து இலங்கை தொடர்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கோப்பு ஒன்றை அல்லது விவர ஆவணம் (Data Base) ஒன்றைத் திறந்திருக்கிறது என்ற தகவலை ஒகாம்போவுடன் பிரயாணங்களில் ஈடுபடும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அலுவலர் ஒருவர் இன்னர் சிற்றி பத்திரிகைக்குத் தெரிவித்தார் .
ஆனால் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்புரிமை பெற்றிருக்காமையால் சட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
மேலும் பாலஸ்தீனியர்களைப் போன்று இலங்கைத் தமிழர்கள் தமக்கு நியாயாதிக்கம் அதாவது சட்டப் பாதுகாப்பு (Jurisdiction) வழங்கும்படியாகவும் கூட இன்னும் ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.. அணிக்கு வரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவலவன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பா...வும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்கிற ஆவல் இரு கட்சிகளின் முன்னணி தலைவர்களுக்கிடையே மட்டுமின்றி பெரும்பான்மையான தொண்டர்களிடையேயும் மேலோங்கியுள்ளது.

மொழி மற்றும் இனப்பாதுகாப்பு களங்களில் இருகட்சிகளும் தோழமையோடு பணியாற்றி வருகிறது. இதனால் சமூக நல்லிணக்க சூழல் வளர்ந்துள்ளது. இச்சூழல் தொடர வேண்டுமென்பதை விடுதலை சிறுத்தைகள் மனமாற விரும்புகிறது.

இதனால் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறும் தி.மு.. அணியில் பா...வும் இடம்பெற வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் விரும்புகிறது. தி.மு.. அணியில் பா...வும் இடம்பெற வேண்டுமென தொலைநோக்கு பார்வையோடும், தோழமையோடும் உளப்பூர்வமாக அழைப்பு விடுக்கிறோம் என்று அந்த அறிக்கயில் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
16 இந்தியர்களுடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால கடத்தப்பட்ட சரக்குக் கப்பல் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

துபாயிலிருந்து புறப்பட்டு மொகாதீசுவிற்கு சென்று கொண்டிருந்த இந்த சரக்குக் கப்பல் சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களால் சனிக்கிழமையன்று கடத்தப்பட்டது.

இந்தக் கப்பலில் அரிசி, சமையல் எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. நேற்று காலை 10.30 மணியளவில் இந்தக் கப்பல் கடத்தப்பட்டது.

கடத்தப் பட்ட தகவல் ஏடன் வளைகுடாவில் இருக்கும் இந்திய மற்றும் பன்னாட்டு கப்பற்படையினிரடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தக் கப்பல் தற்பொது கொள்ளையர்களின் பிடியிலிருந்து மீட்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் சென்ற 16 இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!!
மக்களவைக்கான முதல் கட்ட தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் நாளை முதல் துவங்குகிறது.

மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த முறை மக்களவை தேர்தல் நடபெறவுள்ளது. முதல் கட்டத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த முதல் கட்டத் தேர்தலுக்கான மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் மாதம் 30ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. 31ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.

மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 2ஆம் தேதி கடைசி தினமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!
பா... உறவு முறிந்தது ஏன்? – கருணாநிதி விளக்கம் mspj;Js;shH
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழ்நாடு மட்டுமே அதிக பலன் அடைந்துள்ளது. துறைமுகம் தொடங்கி விமான நிலையம் வரை தமிழ்நாட்டில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நமது ஜனநாயகத்தின் முழுமையான மதசார்பற்ற அரசு இங்குதான் செயல்படுகிறது. இவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்வோம். 2004ல் வெற்றி பெற்றது போல் இந்த தேர்தலிலும் தமிழகம், புதுவை ஆகிய 40 தொகுதியிலும் வெற்றி பெ«றுவாம். மக்கள் மத்தியில் எந்த எதிர்ப்பு அலையும் இல்லை.
பா... எங்களால் நிறைவேற்ற முடியாத அளவுக்கு நிறைய எதிர்பார்த்தார்கள் . அதை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் உறவு முறிந்தது.
இலங்கை பிரச்சினையில் தமிழக அரசால் எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியும் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். எனவே இலங்கை பிரச்சினை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது .
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய எங்களால் முடிந்தவற்றை செய்தோம். மத்திய அரசும் இதில் ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணமுடியாது பேச்சுவார்த்தையால் மட்டுமே தீர்க்க முடியும் என்று எடுத்துக்கூறியது அதுவே பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு நிலைக்கு திரும்ப உதவும் என்றும் தெரிவித்தது.
பண வீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கை நல்ல பலனை கொடுத்துள்ளது. தற்போது பண வீக்கம் குறைந்து மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது . தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தில் ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி, பருப்பு, பாமாயில், மற்றும் மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கி ஏழைகள் பயன் அடைய செய்து இருக்கிறோம். ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கையால் நல்ல பலன் அடைந்துள்ளனர்.
நான் அன்றாடம் கடிதங்கள் வாயிலாகவும் அறிக்கைகள் மூலமாகவும் தொண்டர்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன் தொண்டர்கள் மனதிலும் இதயத்திலும் நிறைந்து இருக்கிறேன். தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளனர். டாக்டர்கள் என் உடல் நிலை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பது தொண்டர்களுக்கு தெரியும். கண்டிப்பாக தேர்தல் பிரசாரம் செய்வேன். பொறுத்த இருந்து பாருங்கள்.
நாட்டு மக்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து பெரும்பான்மை பலம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு முதல்அமைச்சர் கருணாநிதி கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்திய எல்லையில் காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹப்ராடா வனப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிஇருப்பதாக உளவுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது . இதைத் தொடர்ந்து போலீசாருடன் சேர்ந்து ராணுவத்தினரும் நேற்று இரவு தீவிரவாதிகளை வனப் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்களுக்கு இடையே கடும் சண்டை நடந்தது. இதில் , மேஜர் மேஹக் மரணம் அடைந்தார். ராணுவ அதிகாரி ராகேஷ்குமார் காயம் அடைந்தார் .
இதற்கிடையே இந்திய எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் நேற்று இரவு ஊடுரு வினார்கள். அப்போது அவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த சண்டையில் எல்லைக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ராணுவ வீரர்கள் 3 பேர் மரணம் அடைந்தனர். குப்வாரா மாவட்டத்தில் ஹப்ராடா வனப் பகுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
!!!!!!!!!!
world
!!!!!!!!!!!
ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் தாலிபான்களுடன் செய்து கொண்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக, 20 தாலிபான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது.

இதில், தாலிபான் செய்தித் தொடர்பாளர் முஸ்லிம் கானின் தம்பி நூருல் ஹுடாவும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஸ்வாட் பகுதியில் உள்ள அரசு அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் போர்நிறுத்தம் நடைமுறைப்படுத்த வடமேற்கு எல்லைப்புற மாகாண அரசுக்கும், தெஹ்ரிக்நிஃபாஸ்ஷாரியாஹ் முஹம்மதி அமைப்புக்கும் இடையே கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே 20 தாலிபான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை 30 தாலிபான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

!!!!!!!!!!!!!!!!
இரானுடனான உறவில் ஒரு புதிய துவக்கத்தை அமெரிக்கா விரும்புகிறது என்று அதிபர் ஒபாமா கூறியிருந்தமைக்கு பதில் தரும் விதமாக கருத்து வெளியிட்டுள்ள இரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இரான் தொடர்பில் அமெரிக்கா தனது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் நிஜமாகவே மாற்றிக்கொண்டால், இரானும் மாறும் என்று தெரிவித்துள்ளார்.
வெறும் வாய் வார்த்தைகள் என்று குறிப்பிட்டு அவை மட்டும் போதாது என்றார் அவர்.
இரான் மீதான பொருளாதாரத் தடைகளை, இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிவரும் நிபந்தனைகளற்ற ஆதரவு என்று குறிப்பிட்டு அவ்விவகாரம் போன்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் நிஜமான மாற்றங்கள் எதனையும் தான் இதுவரைக் கண்டிருக்கவில்லை என்றும் கமேனி கூறியுள்ளார் .
அமெரிக்க இரான் உறவில் முப்பது ஆண்டு காலமாக நீடித்துவரும் பகைமை மற்றும் நம்பிக்கையின்மையை முடிவுக்கு கொண்டுவர தான் விரும்புவதாக அதிபர் ஒபாமா வீடியோ உரையில் பேசியிருந்தற்கு அடுத்த நாள் அயதுல்லாவின் கருத்துகள் வெளியாகியுள்ளன.
!!!!!!!!!!!
அதிகப்படியான செலவீனங்களைக் கொண்டிருப்பதாகவும், அமெரிக்காவை மேலும் கடனில் ஆழ்த்தும் என்றும் அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் விமர்சிக்கப்பட்ட தனது வரவு செலவுத்திட்டப் பிரேரணைக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட அதிபர் ஒபாமா தனது வாராந்திர வானொலி உரையை பயன்படுத்திக்கொண்டார்.
அடுத்த நிதி ஆண்டுக்காக மூன்றரை டிரில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ள தனது வரவு செலவுத்திட்டம், நாட்டை எரிசக்தி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கான எதிர்கால நிர்மாணத்துக்கான வழியில் செலுத்தும் என்று ஒபாமா வலியுறுத்தினார்.
அமெரிக்க வரவு செலவுத்திட்டத்தின் மிகப் பாரிய துண்டுவிழும் தொகையை அடுத்த நான்கு வருடங்களுக்குள் அரைவாசியாக்குவதற்கான முயற்சியில் தான் இன்னமும் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார் .
இந்த பிரேரணையை இந்த வாரத்தில் அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றம் பரிசீலனைக்கு எடுக்கும் .
!!!!!!!!!!!!!!!
டார்பூரில் உள்ள பெரிய அகதி முகாம்களில் உள்ள பொதுமக்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சுடானிய அதிபர் ஒமர் அல் பஷீர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்ட நடவடிக்கை அதிகாரி லூயிஸ் மொரெனோ ஒகம்போ அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உதவி நிறுவனங்களை வெளியேற்றுவதன் மூலமாகவும், முகாம்களுக்கான உதவிகளை தடுப்பதன் மூலமாகவும் , 20 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் மீது சுடானிய அதிபர் தாக்குதலை நடத்துகிறார் என்றும் ஒகம்போ தெரிவித்துள்ளார்.
பஷீர் அவர்கள் சுடானை விட்டு வெளியே வரும் போது அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
!!!!!!!!!!!!!
மடகாஸ்கர் தலைநகரின் முன்னாள் மேயரான அண்ட்ரி ரஜோலீன், நாட்டின் அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
நாட்டின் முக்கிய விளையாட்டு மைதானத்தில் நடந்த பதவியேற்பு வைபவத்தில், தனது ஆதரவாளர்கள் சுமார் முன்னிலையில் ரஜோலீன் பதவியேற்றார்.
வெளிநாட்டுப் பிரமுகர்கள் பலர் இந்த வைபவத்தில் கலந்துகொள்வதை புறக்கணித்திருக்கிறார்கள்.
அதிபர் மார்க் ரவலொமனானிடம் இருந்து நான்கு நாட்களுக்கு முன் ரஜொலீன் ஆட்சியைக் கைப்பற்றியிருந்ததை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன.
இது ஒரு சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பு என்று அவை கூறுகின்றன.
மடகாஸ்கரின் உறுப்புரிமையை ஆப்பிரிக்க ஒன்றியம் இடைநிறுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய உதவிப் பொருட்கள் மடகாஸ்கருக்குச் செல்வதை அமெரிக்காவும் நோர்வேயும் நிறுத்தியுள்ளன.
!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.