புல்மோட்டையில் இந்திய மருத்துவர்களின் முகாமுக்கு கூடுதலான நோயாளிகள் வருகை

புதுமாத்தளன் பகுதியிலிருந்து கப்பல் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் 460 பேர் புல்மோட்டைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதேவேளை புல்மோட்டை கனிம வள தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ முகாமில் இந்திய மருத்துவ குழுவினர் மேற்கொண்டுவரும் மருத்துவ சேவையினை கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம பார்வையிட்டுள்ளார்.

மருத்துவ முகாமில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டோரில் ஒரு தொகுதினர் பதவியா மருத்துவ மனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் 80 பேர் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : .bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.