தேர்தலுக்கு தயார்; மத்தியில் காங்., பா.ஜ., வுக்கு மாற்று அரசு : இந்திய கம்யூ., தேர்தல் கொள்கை அறிவிப்பு

புதுடில்லி : லோக்சபா தேர்தலை சந்திக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் பரதன் கூறியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் .,- பா.ஜ., வுக்கு மாற்று அரசு ஏற்படுத்துவதே கொள்கை என இந்திய கம்யூ., லோக்சபா தேர்தல் அறிக்கையை வெளியிட்டது .

டில்லியில் தேர்தல் பிரசாரத்தை வெளியிட்டு பேசிய அக்கட்சியின் ‌பொது செயலாளர் ஏ.பி.பரதன் கூறியதாவது : மத்தியில் மதச்சார்பற்ற அரசு ஆட்சிக்கு வரவேண்டும் . அதிகார வர்க்கத்தை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதிகார வர்க்கம் தாராளமயமாக்கும் கொள்கைக்கு ஆதரவாக செயலப்டுவதை தவிர்க்க வேண்டும் . இதற்காக காங்., பா.ஜ., வை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு இனி ‌எப்போதும் ஆதரவு அளிக்க மாட்டோம் என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். முன்னதாக தேர்தல் அறிக்கையை சில தினங்களுக்கு முன் வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மத்தியில் காங்., பா.ஜ., வுக்கு மாற்று அரசு அமைப்போம் என்ற கொள்கையைதான் வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.