கொலைவெறி பிடித்த இந்தியா/இத்தாலி பெண்மணி சோனியாவிற்கு,வன்னியில் இருந்து தமிழ்க்குடிமகன் எழுதும் கடிதம்

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு, இலங்கையின் வன்னிப் பகுதியில் பாதிப்பிற்குள்ளாகியுள்ள தமிழ்க்குடிமகன் ஒருவன் இலங்கை அரசுக்கு துணை போவதைக் கண்டித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிதத்தின் முழு வடிவம்:-

வன்னியில் இருந்து இம் மடலை எழுதுகின்றேன். சில வேளைகளில் நான் இறந்து விடலாம். அதனால் இம்மடலை அவசாரமாக எழுதுகின்றேன். ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு எம் தமிழ் இனத்தின் மீது யுத்தத்தை செய், எமது தமிழ்சந்ததி உனது சந்ததியின் வரலாற்றையே அழித்து விடும். நீ செய்கின்ற கொடுமைகளுக்கு உனது பூட்டப்பிள்ளையின் வரலாற்றை கருக்கும்.

தாயின் வயிற்றில் இருக்கின்ற குழந்தையைக் கூட நீ அழித்து, உனது கொலைவெறி பசி இன்னும் அடங்கவில்லையா? இன்னும் எவ்வளவு தான் கொடுமைகளை செய்யப்போகின்றாய்.

இங்கு உண்பதற்கு உணவில்லை, காயப்பட்டால் மருந்தில்லை. கடைசி குடிப்பதற்கு கூட சுத்தமான நீரில்லை. ஒரு மனிதன் இறக்கும் தறுவாயில் தண்ணீர் தான் கேட்பான். அதைக்கூட கொடுப்பதற்கில்லை. நீ செய்கின்ற கொலைவெறிகள் எல்லாம் உனது சுயநலத்திற்கும், பதவிக்காகவும் மட்டும் தான்.

உனது கணவன் ராஜீவ் கூட மறு பிறப்பு எடுத்து வந்தால், உனக்கு அதியுயர் தண்டனையாக தூக்குத் தண்டனை வாங்கித் தர ஜ.நா வரை செல்வார் அதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

நான் (ராஜீவ்) தமிழ் இனத்திற்கு செய்த துரோகத்திற்கு இன்னமும் மனம் வெதும்பிக் கொண்டிருக்கின்றேன். நீயோ நான் செய்ததை விட நூறு மடங்கு செய்கின்றாய். இத்தோடு நிறுத்திக்கொள் நீ வரும் போது பிள்ளைகளிடம் பாவச்சுமைகளை கொடுக்காதே. அந்த தமிழ்இனம் படுகின்ற அவலங்களை மேலிருந்து கண்ஊடாக பார்க்கின்றேன். உணவில்லாமல் மயங்கி விழுவதை, பால் கொடுக்க தாயிடம் பாலில்லாமல் வெறும் முலைக்காம்பை உறிஞ்சிவிட்டு அழும் குழந்தையை, நீ கொடுக்கின்ற எறிகணையில் காயப்பட்டு மருந்தில்லாமல் இறப்பவர்களை, ஒரு மனிதனின் உடலை எத்தனை விதத்தில் அறுத்துப் பார்க்கலாமோ அவ்வளவு முறைகளிலும் செல்வீச்சுக்களாலும், விமானத்தின் குண்டுகளாலும் அறுபடுவதை, எல்ல கொடுமைகளையும் நான் இங்கிருந்து பார்க்கிறேன். இறைவனிடம் நான் இறைஞ்சிக் கேட்பதெல்லாம் எனக்கு அவசாரமாக மறு பிறவி தரும்படி, அந்த அழிந்து கொண்டிருக்கின்ற தமிழ் இனத்தை காப்பாற்ற எனது மனைவி(சோனியா) செய்கின்ற கொடூரங்களை என்னால் தாங்கமுடியவில்லை. எனது தாயார்(இந்திராகாந்தி) உணவு உண்ணாமல் அந்த தமிழ் இனத்திற்காக கண்ணீர் மல்க தவம் இருக்கின்றா, தான் வளர்த்த எடுத்த தமிழ் பாதுகாவலர்களை அழிப்பதற்கு எனது கொலைவெறி பிடித்த மருமகளுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது என்ற கோபத்தில் இருக்கின்றா.

இத்தாலி அம்மணியை, கணவன், மாமி கூறியவையெல்லாம் காதில் கொஞ்சமாவது செவிமடுத்திருப்பாய் என்று நினைக்கின்றேன். இதற்கு பிறகாவது உனது கொலைவெறியை நிற்பாட்டி, இலங்கை அரசிற்கு கொடுக்கின்ற படைத்துறை, ஆளணி உதவிகளை நிறுத்தினால் போதும்.

தமிழ் இனத்தை நீ காப்பாற்ற தேவையில்லை, அதற்கு எங்கள் அண்ணண் பிரபாகரன் இருக்கின்றார் அவர் அதை பார்த்துக்கொள்வார்.

தமிழகத்தில் உள்ள தமிழர்கள் உறங்கிக்கொண்டிருக்கவில்லை அவர்கள் விழிப்பாகவே இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இப்போதுதான் புகை மெல்ல மெல்ல வரத் தொடங்கி இருக்கின்றது. அது காட்டுத்தீயாக வெகு விரைவில் மாறும் இந்தியாவே எரியும், அப்போதே உலகிற்கும் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களுக்கும் புரியும் தமிழன் என்றால் யாரென்று.

நன்றி.
இப்படிக்கு
வன்னியில் இருந்து தமிழ்க்குடிமகன்

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.