எந்த எட்டப்பன் வந்தாலும் எங்க பிரபாகரனை அழிக்க முடியாது: ஆர்.கே.செல்வமணி – புலிகள் பற்றி வாய்திறக்காத விஜயகாந்த்!

இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் மீனா, மீராஜாஸ்மின், அம்பிகாவுடன் விஜயகாந்த் நடித்துள்ள மரியாதை படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இவ்விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும் போது,

‘’என் மனைவி(நடிகை ரோஜா) ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விழாவுக்கு வரும்போதே அவர் என்னை கண்டித்து அனுப்பினார். தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை ஏடாகூடாமாக பேசி உள்ளே போயிடாதீங்கன்னு.

ஆனாலும் நான் கொஞ்சம் பேசித்தான் ஆகவேண்டும்.

கேப்டன் பிரபாகரன் என்று படம் எடுத்தேன். அந்த படத்தின் டைட்டிலில் உள்ள கேப்டன்’ என்ற வார்த்தையும் ‘பிரபாகரன்’ என்ற வார்த்தையும் உலகையே கலக்குகிறது.

கேப்டன் என்ற வார்த்தையோ இங்கேயேயா, அங்கேயா என்று அரசியல் வட்டாரத்தில் ரொம்ப பரபரப்பா இருக்கு.

ஈழப்போரட்டத்தில் பிரபாகரன் பெருமையாக நினைக்கப்படுகிறார் தமிழர்களால்.

ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். எந்த எட்டப்பன் வந்தாலும் எங்க பிரபாகரனை அழிக்க முடியாது’’ என்று தெரிவித்தார்.

தேர்தல் கமிசன் கட்டுப்பாடு: புலிகள் பற்றி வாய்திறக்காத விஜயகாந்த்!

இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் மீனா, மீராஜாஸ்மின், அம்பிகாவுடன் விஜயகாந்த் நடித்துள்ள மரியாதை படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இரவு 7.45க்கு இவ்விழா தொடங்கியது. 9 மணி வரை இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

9மணிக்கு மேல் இயக்குநர்கள் விக்ரமன்,ஆர்.கே செல்வமணி,வெங்கட்பிரபு, இப்படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பாடலாசிரியர் புலைமைபித்தன் உட்பட பலருடன் விஜயகாந்த் மேடையேறினார்.

புலைமை பித்தன், ஆர்.கே.செல்வமணி, கலைப்புலி ஜி.சேகர் ஆகியோர் விடுதலைப்புலி இயக்கத்தலைவர் பிரபாகரனை பற்றி பேசினார்கள்.

இதனால் விஜயகாந்த் விடுதலைப்புலிகள் பற்றியும் ஈழத்தமிழர்கள் பற்றியும் நிறைய பேசுவார் என்று எதிர்பார்த்தார்கள்.

9.55 க்கு பேச வந்தார் விஜயகாந்த். மரியாதை படத்தை பற்றி பெசுவதற்குள் நேரம் 10 ஆகிவிட்டது.

’’நான் பேச எழுந்திருக்கும் போதே குசுகுசுன்னு பேசி கண்டிசன் போட்டுட்டாங்க. எதுவும் பேசக்கூடாதுன்னு.

நேரம் வேறு 10 ஆகிவிட்டது. தேர்தல் நேரம் இது. 10மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது. சினிமா தவிர வேறு ஏதாவது பேசக்கூடாது’’ என்று சொல்லிவிட்டு தன் பேச்சை முடித்துக்கொண்டார்.

விஜயகாந்த் ஏன் தன் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தார்: கலைப்புலி

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் தமிழ்ப்பற்று உள்ளவர். ஈழத்தமிழர் மீது மிகுந்த அக்கறை உள்ளவர். அதனால்தான் ஈழத்தமிழர்களுக்காக தன் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்திருக்கிறார்.’’ என்று தெரிவித்தார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.