முல்லைத்தீவில் இருந்து இன்று காயமடைந்த 483 பேர் கப்பலில் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து காயமடைந்த பொதுமக்களில் 483 பேர் இன்று புல்மோட்டைக்கு கப்பலில் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செஞ்சிலுவை சங்கத்தின் கப்பலில் அழைத்து வரப்பட்டுள்ளவர்களை இந்திய வைத்தியர்களின் கள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அழைத்து செல்லும் முகமாக அவர்களை கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 11 தடவைகளில் புதமாத்தளனில் இருந்து இதுவரை நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் திருகோணமலைக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.