வணங்கா மண்’ கப்பலுக்கான உணவுப் பொருட்களை பெரும் உற்சாகத்துடன் வழங்கும் பிரித்தானியா மக்கள்

தாயகம் நோக்கிய பயணத்தை தொடங்கவுள்ள ‘வணங்கா மண்’ கப்பலில் எடுத்துச் செல்வதற்கான பொருட்களை பிரித்தானியா வாழ் தமிழ்ச் சமூகம் பெரும் உற்சாகத்துடன் பொருட்களை வாரி வழங்கி வருவதாக பயண ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயகத்திற்கான உதவிப் பொருட்கள் கொண்ட பொதிகளை சேகரித்து கப்பலுக்கு கொண்டு செல்லும் ‘வணங்கா மண்’ சுமையூர்தி நேற்று வியாழக்கிழமை (19.03.09) லெசிஸ்ரர் மாநகரில் மெல்ரன் வீதியில் லெஸ்ரர் நகர மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்திற்கு மாலை 5:00 மணிக்கு வந்து சேர்ந்தது

அங்கு மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் கொண்ட பொதிகளால் முதல் ஊர்தி நிறைந்ததனால் மேலும் ஒரு சுமையூர்தி ஒழுங்கு செய்யப்பட்டு மிகுதிப் பொதிகள் ஏற்ற வேண்டியதாக இருந்தது.

‘உறவுகளை கைவிட மாட்டோம்’ என்ற உறுதியுடன் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான பொருட்களை மக்கள் கொண்டு வந்து சேர்த்ததுடன் ஊர்திகள் அங்கிருந்து செல்லும் வரை நின்று வழியனுப்பியும் வைத்தனர்.

‘வணங்கா மண்’ ஊர்தி தொடர்ந்து கீழ்காணும் நாட்களில் செல்ல உள்ள இடங்கள்:

வெள்ளிக்கிழமை (20.03.09) Crowley, Southampton

சனிக்கிழமை (21.03.09) Glasgow, Liverpool, Coventry

ஞாயிற்றுக்கிழமை (22.03.09) Northampton, Milton keyns, Luton, Oxford

திங்கட்கிழமை (23.03.09) Birmingham

செவ்வாய்க்கிழமை (24.03.09) Gloucester, Bristol

புதன்கிழமை (25.03.09) New castle, Manchester

இந்த இடங்களில் வாழ்பவர்களும் இதனைச் சுற்றியுள்ளவர்களும் (44) 07536 785 186 என்னும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Source & Thanks : puthianm

Leave a Reply

Your email address will not be published.